உள்ளடக்கத்துக்குச் செல்

பிசுமத்தைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிசுமத்தைல் (Bismuthyl) தனிமநிலை பிசுமத்திலிருந்து முறையாகத் தருவிக்கப்படும் ஒரு வேதியியல் இனச் சேர்மமாகும். பிசுமத் அணுவின் வழியாக எஞ்சியிருக்கும் மூலக்கூறில் பதிலீட்டு குழுக்கள் பிணைக்கப்பட்டிருக்கும் என்பதை பிசுமைத்தல் என்ற சொல் விவரிக்கிறது. உதாரணம்:

  • [Ph2Bi−(Ge9)−BiPh2]2−என்ற அயனியில் காணப்படும் டைபீனைல்பிசுமத்தைல் (Ph2Bi–) போன்ற பிசுமத்தேன் (BiR3) வழிப்பொருட்கள்
  • ஈந்தணைவிகளாகக் (Br3Bi→) கருதப்படும் முப்புரோமோபிசுமத்தைல் போன்ற மூவிணைதிறன் பிசுமத் இனங்கள்.

ஈரணு பிசுமத்தைல் (BiO+) நேர்மின் அயனிகளைக் கொண்டிருப்பதாகக் ஊகிக்கப்படும் BiOCl போன்ற சேர்மங்களை விவரிப்பதற்கு கனிம வேதியியலில் பிசுமத்தைல் பயன்படுகிறது. (BiO+) நேர்மின் அயனிகள் நீர்த்த கரைசல்களில் இருக்கும் என்ற அனுமானமும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது[1]. இந்த ஈரணு அயனி இருப்பதாகக் கருதப்படும் நம்பிக்கை தற்பொழுது இல்லை[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Godfrey, S. M.; McAuliffe, C. A.; Mackie, A. G.; Pritchard, R. G. (1998). Nicholas C. Norman (ed.). Chemistry of arsenic, antimony, and bismuth. Springer. pp. 67–84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7514-0389-X.
  2. Wiberg, Egon; Holleman, A. F.; Wiberg, Nils (2001). Inorganic chemistry. Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுமத்தைல்&oldid=2169093" இலிருந்து மீள்விக்கப்பட்டது