உள்ளடக்கத்துக்குச் செல்

பிசுமத்தினைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிசுமத்தினைட்டு
Bismuthinite
பிசுமத்தினைட்டு - செக்குடியரசின் ஆர்னி சிலாவ்கோ - பொகிமியா (XX 1.1செ.மீ)
பொதுவானாவை
வகைசல்பைடு கனிமம்
வேதி வாய்பாடுBi2S3
இனங்காணல்
நிறம்ஈயச்சாம்பல் முதல் வெள்ளீய வெண்மை, ,மஞ்சள் நிறத்துடன் அல்லது மாறுபடும் வானவில் நிறம்.
படிக இயல்புமெல்லிய பட்டகம் முதல் ஊசி வடிவம் வரை, பெருத்த மடிப்புகள்
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
பிளப்பு[010] சரிபிளவு
முறிவுநொறுங்கும் - வெட்டலாம்
மோவின் அளவுகோல் வலிமை2
மிளிர்வுஉலோகம்
கீற்றுவண்ணம்ஈயச்சாம்பல்
ஒப்படர்த்தி6.8 - 7.2
ஒளியியல் பண்புகள்ஒளிபுகாது
மேற்கோள்கள்[1][2][3]

பிசுமத்தினைட்டு (Bismuthinite) என்பது Bi2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பிசுமத்தின் முக்கியத் தாதுவான இக்கனிமத்தில் பிசுமத் சல்பைடாக பிசுமத் காணப்படுகிறது. எஃகு சாம்பல் நிறத்திலும் அரை வெண்மை நிறத்திலும் உலோகப்பளபளப்பில் பிசுமத்தினைட்டு படிகங்கள் காணப்படுகின்றன. விரல் நகத்தால் கீறப்படும் அளவுக்கு மென்மையும் அடர்த்தியும் கொண்டதாக பிசுமத்தினைட்டு கனிமம் உள்ளது. ஈயம், தாமிரம், பிசுமத் கனிமம் அய்கினைட்டு ((PbCuBiS3)) ஆகியவற்றுடன் சேர்ந்து பிசுமத்தினைட்டு ஒரு தொடர் வரிசை கனிமங்களை உருவாக்குகிறது[3].

பன்னாட்டு கனிமவியல் சங்கம் பிசுமத்தினைட்டு கனிமத்தை Bin[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

போரான் சிலிக்கேட்டு கனிமமான டூர்மலைனுடன் கூடிய நீர்வெப்ப விளிம்புகள், தாமிரத்தை கொண்டுள்ள கிரானைட்டு நிலப்பகுதிகள், சில உயர் வெப்ப தங்கம் கொண்ட நிலப்பரப்புகள், சமீபத்திய எரிமலை வெளியிடும் ஆவிப்படிவுகள் போன்ற இடங்களில் பிசுமத்தினைட்டு காணப்படுகிறது. அய்கினைட்டு, ஆர்சனோபைரைட்டு, சிடானைட்டு, கலீனா, பைரைட்டு, சால்கோபைரைட்டு, டூர்மலைன், உல்பிரமைட்டு, கேசிட்டரைட்டு, குவார்ட்சு, தாயக பிசுமத் போன்ற கனிமங்களுடன் சேர்ந்து பிசுமத்தினைட்டு கிடைக்கிறது[1].

பொலிவியாவில் கிடைத்த பிசுமத்தினைட்டு படிகக் குழு (அளவு: 2.9 x 1.9 x 1.5 செ.மீ)

பொலிவியா நாட்டில் முதன்முதலாக 1832 ஆம் ஆண்டு போட்டோசி சுரங்கத்தில் பிசுமத்தினைட்டு கண்டறியப்பட்டது[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 http://rruff.geo.arizona.edu/doclib/hom/bismuthinite.pdf Mineral Handbook
  2. 2.0 2.1 http://webmineral.com/data/Bismuthinite.shtml Webmineral Site
  3. 3.0 3.1 http://www.mindat.org/min-686.html Mindat mineral data
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுமத்தினைட்டு&oldid=4092017" இலிருந்து மீள்விக்கப்பட்டது