பிசுமடைட்டு
பிசுமடைட்டு Bismutite | |
---|---|
செருமனியில் கிடைத்த பிசுமடைட்டு | |
பொதுவானாவை | |
வகை | கார்பனேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Bi2(CO3)O2 |
இனங்காணல் | |
நிறம் | மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறம், பசுமை,சாம்பல் பச்சை, சாம்பல் அல்லது கருப்பு |
படிக இயல்பு | மிகவும் அரிதான தகடு |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
பிளப்பு | தனித்துவம்/ {001} இல் தெளிவாக (நுண்ணோக்கி வழி பார்த்தது) |
மோவின் அளவுகோல் வலிமை | 2.5 - 3.5 |
மிளிர்வு | கண்ணாடி பளபளப்பு, வமெழுகுத் தன்மை, மண் போல மங்கலாகத் தெரியும் |
கீற்றுவண்ணம் | சாம்பல் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது மற்றும் ஒளி கசியும் சிறிய மணிகள் |
ஒப்படர்த்தி | 6.7 - 7.4 அளக்கப்பட்டது, 8.15 கணக்கிடப்பட்டது |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) (ஆனால் ஓரச்சு போல தோன்றும்) |
ஒளிவிலகல் எண் | a=2.12-2.15, b=2.12-2.15, g=2.28 |
இரட்டை ஒளிவிலகல் | 0.1300-0.1600 |
2V கோணம் | 45 |
மேற்கோள்கள் | [1][2][3][4] |
பிசுமடைட்டு அல்லது பிசுமதைட்டு (Bismutite or bismuthite) என்பது பிசுமத் தனிமத்தின் கார்பனேட்டு வகை கனிமமாகும். பிசுமத் துணைகார்பனேட்டை குறிக்கும் Bi2(CO3)O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் பிசுமடைட்டு விவரிக்கப்படுகிறது. பிசுமத்தினைட்டு, பெக்மாடைட்டு எனப்படும் தீப்பாறை போன்ற மற்ற பிசுமத் கனிமங்களின் ஆக்சிசனேற்ற விளைபொருளாக பிசுமடைட்டு தோன்றுகிறது. செஞ்சாய்சதுர படிக வடிவத்தில் படிகமாகும் பிசுமடைட்டு மண்ணோடு மண்ணாகவும் இழைகளாகவும் கிடைக்கிறது.[2] It crystallizes in the orthorhombic system and typically occurs as earthy to fibrous masses.[1]
செருமன் நாட்டின் சேக்சோனி மாநிலத்தில் 1841 ஆம் ஆண்டு பிசுமடைட்டு முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
பிசுமத்தினைட்டு என்ற கனிமத்தைக் குறிக்க பிசுமத்தைட்டு என்ற பெயர் முற்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Webmineral". Archived from the original on 2021-01-30. பார்க்கப்பட்ட நாள் 2021-01-23.
- ↑ 2.0 2.1 Mindat
- ↑ Handbook of mineralogy
- ↑ Grice, Joel D., A Solution to the Crystal Structures of Bismutite and Beyerite, The Canadian Mineralogist, Vol. 40, pp. 693-698 (2002)
- ↑ "Bismuthite". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 4. (1911). Cambridge University Press.