உள்ளடக்கத்துக்குச் செல்

பிசாயா மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிசாயா மக்கள்
Bisaya people
பாரம்பரிய இன உடையில் சபா பிசாயா பெண்கள்
மொத்த மக்கள்தொகை
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 புரூணை: 42,000 (2026)[1]
(பெலைட் மாவட்டம், டெம்புரோங்கு மாவட்டம், துத்தோங் மாவட்டம்

 மலேசியா
 இந்தியா: 81,000 (2026)[2]
(பியூபோர்ட் மாவட்டம், கோலா பென்யூ மாவட்டம், சிபித்தாங் மாவட்டம்
 சரவாக்: 7,000 (1984)[3]
(இலாவாசு மாவட்டம், இலிம்பாங் மாவட்டம்)
லபுவான்[4]

 ஐக்கிய அமெரிக்கா: 15,000 (2026)[5]
(டெக்சஸ்)
மொழி(கள்)
சபா பிசாயா மொழி, புரூணை பிசாயா மொழி, சபா மலாய் மொழி, சரவாக் மலாய் மொழி, புரூணை மலாய் மொழி, மலேசிய மொழி
சமயங்கள்
இசுலாம் (சன்னி) (புரூணை, சபா, லபுவான்)
கிறிஸ்தவம் (கத்தோலிக்க திருச்சபை and சீர்திருத்தத் திருச்சபை) and ஆன்மவாதம் (சரவாக்)
தொடர்புள்ள இனக்குழுக்கள்
விசயன் மக்கள், டூசுன் மக்கள், புரூணை டூசுன் மக்கள், கடசான் மக்கள், கடசான்-டூசுன் மக்கள், மூருட்டு மக்கள், லுன் பாவாங் மக்கள், தயாக்கு மக்கள்

பிசாயா மக்கள் (மலாய்: Orang Bisaya; ஆங்கிலம்: Bisaya people; என்பவர்கள் கிழக்கு மலேசியா மற்றும் புரூணை நிலப்பகுதிகளை வாழ்விடமாகக் கொண்ட ஆசுத்திரோனீசிய இனக்குழுவினர் ஆவர்.

சபா மாநிலத்தின் உட்பகுதி பிரிவில், பாடாஸ் ஆறு மற்றும் கிலியாஸ் ஆறு; ஆகிய ஆறுகளின் ஆற்றங்கரைகள், பியூபோர்ட் மாவட்டம், கோலா பென்யூ மாவட்டம், சிபித்தாங் மாவட்டம் ஆகிய மாவட்டங்களிலும்; லபுவான் தீவு, சரவாக் மாநிலத்தின் லாவாஸ் மாவட்டம் மற்றும் லிம்பாங் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில், பிசாயா மக்களின் மக்கள் தொகை மிகுதியாய் காணப்படுகின்றது.[6][7] சரவாக்கில், பிசாயா இன மக்கள் ஒராங் உலு மக்கள் என்ற பொதுப் பெயரின் கீழ் வகைப்படுத்தப்பட்டு உள்ளனர்.[8][9][10]

ஆவி வழிபாடு-இயற்கை வழிபாடு ஆகியவற்றை பிசாயா மக்கள் முன்னர் கடைப்பிடித்து வந்தனர். ஒரு காலக் கட்டத்தில் பௌத்த-இந்து உள்ளூர் அரசாங்கங்களின் தாக்கத்தைப் பெற்றிருந்த அவர்கள், வலுவான ஆன்மவாத நம்பிக்கைகளைப் பின்பற்றினர். தற்போது போர்னியோவின் வடமேற்கு கடற்கரையில் ஒரு முக்கியமான வேளாண்மை மற்றும் மீன்பிடி சமூகமாக விளங்குவதோடு, புரூணை சுல்தானகத்துடன் நெருங்கிய தொடர்புகளையும் கொண்டுள்ளனர்.[11]

புரூணை, சரவாக் மற்றும் சபா ஆகிய பகுதிகளில் வாழும் அனைத்துப் பிசாயா மக்களும் ஒரே மொழி ஒரே பண்பாட்டு வேர்களைக் பகிர்ந்து கொண்டாலும், அவர்களின் மத நடைமுறைகளிலும்; பிராந்திய அடையாளங்களிலும் வேறுபடுகின்றனர். சபா பிசாயா மக்கள் பெரும்பாலும் முசுலிம்கள் ஆவர். இவர்கள் லபுவான் உட்பட தென்மேற்கு கடற்கரையோரங்களில் மிகுதியாக வாழ்கின்றனர். சரவாக் பிசாயா மக்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் ஆவர். இவர்கள் பொதுவாக லிம்பாங் ஆற்றின் கரையோரங்களில் காணப்படுகின்றனர்.[12]

சொற்பிறப்பியல்

[தொகு]

"பிசாயா" என்ற பெயரின் தோற்றம் குறித்து பல கோட்பாடுகள் உள்ளன. இது வடக்கு சரவாக் மற்றும் சபா (முன்னாள் வடக்கு போர்னியோ) மற்றும் பிலிப்பீன்சு ஆகிய இடங்களில் குடியேறிய இலொங்கோ பிசாயா (Hiligaynon people) எனும் ஓர் இனக்குழுவைக் குறிக்கிறது.[13]

போர்னியோ பிசாயா புராணத்தின்படி, வடக்கு போர்னியோவின் மேற்கில் உள்ள பிசாயா பகுதிக்கு புரூணை சுல்தான் சென்றடைந்தபோது, அங்குள்ள இயற்கை அழகைக் கண்டு ​​என்னே அழகு! என்று பொருள்படும் புரூணை மலாய்ச் சொற்களில் "பிசாயா-யா!" என்று வியந்து கூறினாராம். அப்போது இருந்து பிசாயா எனும் சொல் தோன்றியதாகவும் அறியப்படுகிறது.[14] விசாயா என்ற சொல், இந்து சாதிய அமைப்பின் மூன்றாவது சாதியைக் குறிக்கும் சமசுகிருத சொல்லாக இருக்கலாம் எனும் கருத்தும் முன்வைக்கப்படுகிறது.[15]

பண்பாடு மற்றும் சமூகம்

[தொகு]
காமத்தான் நிகழ்ச்சியில் சிறுவர்கள் (2024)
கெனிங்காவ் மாவட்டத்தில் பைத்தான் பழங்குடி மக்கள் (2024)

பிசாயா மக்கள் அரிசி, சாகோ, தேங்காய், இஞ்சி, மக்காச்சோளம், பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறி விவசாயம் போன்ற வேளாண்மை தனித்துவத்திற்காக அறியப்படுகிறார்கள்,[16] பிசாயா மக்களின் குடியிருப்புகள் பெரும்பாலும் ஆற்றங்கரைகளிலும் கடலோரப் பகுதிகளிலும் அமைந்துள்ளதால், அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வேளாண்மையையும் வணிகத்தையும் பெரிதும் சார்ந்துள்ளனர்.

மீன்பிடித்தல், வேட்டையாடுதல், கால்நடை வளர்ப்பு, கைவினைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் பிற சிறு வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். மேலும், தங்களின் அனைத்து வேளாண் பொருட்கள், கால்நடை மற்றும் வனப் பொருட்களையும் சந்தைக்குக் கொண்டு வருகின்றனர்.[16]

பண்பாட்டு மையங்கள்

[தொகு]

சபா, சரவாக் ஆகிய இரு மாநிலங்களையும் அடையாளப்படுத்தும் வகையில் இரண்டு பிசாயா பண்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பியூபோர்ட் மாவட்டத்தில் உள்ள பிசாயா பண்பாட்டு மற்றும் கலை மையம் என்பது சபா பிசாயா மக்களுக்கான முதன்மை மையமாகத் திகழ்கிறது.

லிம்பாங் மாவட்டத்தின் பத்து டானாவ் லிம்பாங் கிராமத்தில் உள்ள சரவாக் பிசாயா பண்பாட்டு மையம் என்பது சரவாக் பிசாயா மக்களுக்கான மையமாகச் செயல்படுகிறது.[17][18] இரு மையங்களும் பழங்குடியினரின் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுக் கலைகள், பாரம்பரியத்தை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு செயல்பாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றன.[19]

சரவாக் பிசாயா மக்கள் தங்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து, இசை, நடனம் மற்றும் எருமை மாட்டுப் பந்தயம் போன்ற நிகழ்ச்சிகளுடன் தங்களின் பாபுலாங் திருவிழாவை, (Babulang) [20] ஆண்டிற்கு ஒருமுறை கொண்டாடுகிறார்கள்;[21][22] அதே வேளையில், சபா பிசாயா மக்கள் அவர்களின் அடாவ் ஜானாங் காயு கொண்டாட்டம்; (Adau Janang Gayuh)[23][24] மற்றும் குலிந்தாங்கன் (Kulintangan)[25] திருவிழாவிற்குப் பெயர் பெற்றவர்கள் ஆவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tutong, Bisayan in Brunei". Joshua Project. Retrieved 27 April 2026.
  2. "Bisaya in Malaysia [Sabah]". Joshua Project. Retrieved 27 April 2026.
  3. Gordon Jr. 2005, ப. 459.
  4. Roth & Lang 1896, ப. 20.
  5. "Bisaya in the United States". Joshua Project. Retrieved 27 April 2026.
  6. Lobel 2013, ப. 36–68.
  7. Jindeh, Noorazlina (7 June 2024). "Bisaya, Kadazan Dusun Close Ties Symbol of Unity Among Sabahans". Bernama இம் மூலத்தில் இருந்து 12 August 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250812065920/https://www.bernama.com/en/news.php?id=2305326.
  8. Publicity and Film Sub-Committee 1988, ப. 216–253.
  9. "Orang Ulu Oral Tradition Collection". Council for Native Customs & Traditions, Sarawak. Archived from the original on 27 April 2026. Retrieved 27 April 2026.
  10. Cense & Uhlenbeck 1958, ப. 20–21.
  11. Dunn 2015, ப. 256.
  12. Ooi 2015, ப. 131–134.
  13. Manni & d'Errico 2026, ப. 726.
  14. Sonza 1974, ப. 40.
  15. Verstraelen & Trosdal 1974, ப. 231–237.
  16. 1 2 "Etnik Bisaya" [Bisaya Ethnic] (PDF). Sabah Cultural Board (in மலாய்). Archived (PDF) from the original on 28 April 2026.
  17. Unnip Abdullah, Mohd Izham (21 June 2019). "Pusat kebudayaan perkenal keunikan etnik Bisaya" (in ms). Berita Harian இம் மூலத்தில் இருந்து 28 April 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260428071331/https://www.bharian.com.my/berita/wilayah/2019/06/576560/pusat-kebudayaan-perkenal-keunikan-etnik-bisaya.
  18. Syahhira Hady, Noor (6 June 2022). "Bisaya culture, customs showcased in Pesta Babulang". Sarawak Tribune இம் மூலத்தில் இருந்து 28 April 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260428110101/https://www.sarawaktribune.com/bisaya-culture-customs-showcased-in-pesta-babulang/.
  19. Dzulkifli, Iskandar (21 January 2026). "Empowering Bisaya culture, identity". Daily Express இம் மூலத்தில் இருந்து 28 April 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260428070951/https://www.dailyexpress.com.my/news/274386/empowering-bisaya-culture-identity/.
  20. Sapun, Misdih & Jusilin 2024, ப. 27.
  21. "Bisaya Buffalo Race Festival in Limbang Sarawak". Sarawak Tourism. Archived from the original on 1 May 2026. Retrieved 1 May 2026.
  22. Yap, Aileen (28 May 2025). "Pesta Babulang returns to Batu Danau for 20th edition this July". The Borneo Post இம் மூலத்தில் இருந்து 29 April 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260429153343/https://www.theborneopost.com/2025/05/28/pesta-babulang-returns-to-batu-danau-for-20th-edition-this-july/.
  23. Apong, Ahmad (31 July 2019). "Manifestation by Bisaya to preserve their culture, says Minister". Daily Express இம் மூலத்தில் இருந்து 30 April 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260430235548/https://www.dailyexpress.com.my/news/138609/manifestation-by-bisaya-to-preserve-their-culture-says-minister/.
  24. Corlleus, Kenneddy (25 April 2024). "Festival Kulintangan berupaya angkat martabat etnik" (in ms). Utusan Borneo இம் மூலத்தில் இருந்து 29 April 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260429135941/https://www.utusanborneo.com.my/2024/04/25/festival-kulintangan-berupaya-angkat-martabat-etnik.
  25. Unnip Abdullah, Mohd Izham (26 July 2019). "Lumba kerbau antara acara meriahkan Adau Janang Gayuh" (in ms). Berita Harian இம் மூலத்தில் இருந்து 1 May 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260501011354/https://www.bharian.com.my/berita/wilayah/2019/07/589404/lumba-kerbau-antara-acara-meriahkan-adau-janang-gayuh.

நூல்கள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசாயா_மக்கள்&oldid=4618703" இலிருந்து மீள்விக்கப்பட்டது