பிங்குவிய்குலா லூட்டி
பிங்குவிய்குலா லூட்டி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | ஆஞ்சியோஸ்பெர்ம்
|
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | லாமினியேல்ஸ்
|
குடும்பம்: | லெண்டிபுலேரியேசி
|
பேரினம்: | பிங்குவிய்குலா
|
இனம்: | P. lutea
|
இருசொற் பெயரீடு | |
பிங்குவிய்குலா லூட்டி தாமஸ் வால்ட்டர் |
பொதுவாக மஞ்சள் பசை காகிதம் என்று அழைக்கப்படும் பிங்குய்குலா லூடியா (Pinguicula lutea) என்பது லெண்டிபுலேரியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணித் தாவர வகையைச் சேர்ந்த ஒரு இனமாகும்.[1] இதனை தெற்கத்திய பசைக்செடி என்றும் அழைப்பார்கள். இது தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவின் புன்னிலங்கள் மற்றும் மணல் பகுதிகளில் வளர்கிறது.
இதன் மலர் பொதுவாக பிரகாசமான மஞ்சள் அல்லது வைக்கோல்-மஞ்சள் நிறத்தில் இருக்கும். சில இடங்களில் வெள்ளை நிறத்திலும் மிகவும் அரிதாக காணப்படும்.[2] பிங்குய்குலா இனத்தின் அனைத்து ஊனுண்ணித் தாவரங்களையும் போலவே, இதுவும் அதன் இலைகளின் மேற்பரப்பில் சிறப்பு சுரப்பிகளைப் பயன்படுத்தி சிறிய பூச்சிகளைப் பிடிக்கிறது.[3]
காணப்படும் பகுதிகள்
[தொகு]இது தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவின் தென் கரொலைனா முதல் தென் புளோரிடா வரை வளர்கிறது.
செடியின் அமைப்பு
[தொகு]இச்செடி சதுப்பு பகுதியில் நன்கு வளர்கிறது. இதன் இலைகள் முட்டை வடிவத்திலும், சதைப் பற்றுடன் கூடியதாகவும், தரையை ஒட்டி ரோஜாப்பூ இதழடுக்கில் அமைந்திருக்கும்.[4] இதன் இலைகள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருப்பதால் இதை மஞ்சள் பசைச்செடி என்றும் அழைப்பார்கள். இதன் இலைகள் 6 முதல் 8 செ.மீ. நீளம் வரை வளரும். இதன் இலைப்பரப்பில் பசை போன்ற ஒட்டக்கூடிய திரவம் சுரக்கிறது. இதனால் கவரப்பட்ட பூச்சிகள்
இலைப்பரப்பில் ஒட்டிக் கொள்கின்றன. பிறகு இலை சுருண்டு பூச்சியை செரிக்கிறது. இச்செடியில் மஞ்சள் நிறப்பூக்கள் பூக்கின்றன.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.
- ↑ Barry Rice, The Carnivorous Plant FAQ, January 2011
- ↑ Sagebud, Yellow Butterwort (Pinguicula Lutea), April 28, 2012
- ↑ eNature, Yellow Butterwort, 2007
- ↑ "Botanical Society of America, the Butterworts, April 28,2012". Archived from the original on 2013-01-03. பார்க்கப்பட்ட நாள் 2012-04-29.