பிங்குவிய்குலா பசைக் காகிதம்
![]() | இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ பசைக் காகிதம் (தாவரம்) உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
பசைக் காகிதம் | |
---|---|
![]() | |
பிங்குய்குலா மொரானென்சிஸ் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலை
|
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Lamiales
|
குடும்பம்: | லண்டிபுளோரேசியீ
|
பேரினம்: | பிங்குய்குலா |
இனம் | |
ஏறத்தாழ 80. |

வகைப்பாடு
[தொகு]பிங்குவிய்குலா Pinguicula இத்தாவரம் லென்டிபுளேரேசியேயீ (Lentibulariaceae) என்னும் குடும்பத்தைச் சார்ந்தது. இச்செடிகள் ஈரம் நிறைந்த சதுப்பு பகுதிகளில் நன்கு வளர்கிறது. இச்செடிகள் தரையை ஒட்டி வளர்கின்றன. ரோஜாவின் இதழடுக்கு போல் இலைகள் அமைந்துள்ளன. இச்செடியில் சல்லி வர்கள் மட்டுமே இருக்கின்றன.
உணவு ஊட்டமுறை
[தொகு]இந்த தாவரங்கள் பூச்சிகளைப் பிடிக்கப் பின்பற்றும் முறைகள் மிகவும் வியப்பானவை. ஈ-யின் தொந்தரவைக் குறைக்க அதை பிடிப்பதற்கு பயன்படுத்தும் பசை காகிதத்தைப் போன்ற (Fly paper) இலைகளைப் பெற்றுள்ளன. இச்செடியின் இலைகள் கொத்துக் கொத்தாக உள்ளன. இலைப்பரப்பு முழுவதும் பசைப் பொருளைச் சுரக்கும் காம்புள்ள சுரப்பி முடிகள் உள்ளன. பூச்சிகள் பசையால் கவரப்படுகின்றன. பூச்சிகள் இலைப் பரப்பில் வந்து அமரும்பொழுது பசையில் பூச்சி ஒட்டிக்கொள்கிறது. மீண்டும் பூச்சியால் பறக்க முடிவதில்லை. இலையின் விளிம்புகள் உள்நோக்கி சுருண்டு பூச்சியை சிறைப்படுத்துகிறது. பிறகு பூச்சிகள் செரிக்கப்படுகிறது. பூச்சிகள் செரிக்கப்படுகிறது. பூச்சகள் செரிக்கப்பட்ட பின்னர் இலை மீண்டும் மெல்லத் திறந்து கொள்கிறது.
இலையின் அமைப்பு
[தொகு]இலையின் மேல் பரப்பில் இரண்டு வகையான சுரப்பி முடிகள் உள்ளன. ஒன்று ஜீரண சுரப்பிகள். இது இரண்டு செல்கள் கொண்ட காம்பும், 8 செல்கள் கொண்ட தலைப்பகுதியும் உடையது. மற்றொன்று பசைப் பொருளைச் சுரக்கும் முடிகள் இது நீண்ட காம்பும், குடை போன்ற தலையும் கொண்டது. இலையின் மீது பசை பொருளைச் சுரக்கும் செல்கள் அதிகப்படியான பசையை சுரக்கின்றன. இதனால் கவரப்பட்ட பூச்சிகள் இலையின் மீது வந்து உட்கார்கிறது. இதனால் பூச்சி பசையில் ஒட்டிக் கொள்கிறது. பூச்சிகள் அமர்ந்த உணர்வால் இலையின் விளிம்பு உள்நோக்கி சுருண்டு பூச்சியை சிறை பிடிக்கிறது. பிறகு செரிமான சுரப்பிகள் செரிப்பு நீரை சுரந்து பூச்சியை செரிக்கிறது.
காணப்படும் பகுதிகள்
[தொகு]இச்செடிகள் மெக்சிகோ, தென் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவில் வளர்கிறது.
இந்த இனத்தில் சுமார் 30 முதல் 40 வகை தாவரங்கள் உள்ளன. இச்செடிகளை பசைகாகிதச் செடி (Fly paper plant and butterwort) என்று அழைப்பார்கள். இவ்வினச் செடிகளை வீடுகளில் வளர்ப்பதில்லை. பூங்காவில் மட்டுமே வளர்க்கிறார்கள்.இது அழிந்து வரும் தாவரம் ஆகும்[1]
மேற்கோள்கள்
[தொகு]| 1 || அதிசய தாவரங்கள் || அறிவியல் வெளியீடு || மார்ச் 2000
| 2 || அதிசய தாவரங்களும் அற்புத தகவல்களும் || சாரதா பதிப்பகம் || டிசம்பர் 2002
| 3|| சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001
- ↑ சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.