பிங்கி பிரமானிக்
பிங்கி பிரமானிக் (Pinki Pramanik: பிறப்பு 10 ஏப்ரல், 1986) ஒரு இந்திய முன்னாள் தடகள வீராங்கணை ஆவார், இவர் 400 மீட்டர், 800 மீட்டர் போட்டிகளில் நிபுணத்துவம் பெற்றவர். தேசிய 4×400 மீட்டர் தொடர் அணியின் ஒரு பகுதியாக, பிரமானிக் 2006 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும், 2005 ஆசிய உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகளிலும், 2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கப் பதக்கத்தையும் வென்றார். 2006 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் வெற்றி பெற்று மூன்று தங்கப் பதக்கங்களைவென்றார்.
பிங்கி தனது 17 வயதில் ஆசிய உள்ளரங்க தடகள வாகையாளர் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார், மேலும் ஐ. ஏ. ஏ. எஃப் உலகக் கோப்பையில் ஆசியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். அகில இந்திய திறந்தநிலை தேசிய வாகையாளர் பட்டத்தை அவர் மூன்று முறை வென்றார்.
தொழில் வாழ்க்கை
[தொகு]பிங்கி 2002 ஆம் ஆண்டில் நான்கு இளையோருக்கான மாநில சாதனைகளை படைத்தார்.[1] 2003 ஆம் ஆண்டு தடகளத்தில் உலக இளையோர் வாகையாளர் போட்டியில் உலக அளவில் அறிமுகமானார்.[2] அங்கு அவர் 800 மீ அரையிறுதிக்கு முன்னேறினார். பின்னர் விரைவில் அகில இந்திய திறந்தநிலை தேசிய வாகையாளர் பட்டம் வென்றார்.[2] பிங்கி தேசிய இளையோர் தடகளப் போட்டியில் 400 மீட்டரில் 54.92 விநாடிகளில் ஓடி சாதனை படைத்தார், இருப்பினும் அவர் 1986 அல்லது 1987 இல் பிறந்தாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.[3]
சர்வதேச பதக்கங்கள்
[தொகு]2004 ஆசிய உள்ளரங்க தடகள வாகையாளர் போட்டியில் 400 மீ மற்றும் 800 மீட்டரில் பிங்கி இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்.[2] 2004 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஒரு இளைஞர் குழு அவர் மீது துப்பாக்கியை வைத்து காவல்துறையை அழைத்தது. அந்த இளைஞர்கள் பிங்கியை துன்புறுத்தியதாகவும், துப்பாக்கியை அவரது பையில் வைத்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் சாட்சியமளித்தனர். பிங்கி குற்றச்சாட்டு இல்லாமல் விடுவிக்கப்பட்டார். சம்பவத்தின் மன அழுத்தத்திலிருந்து மீண்டு வருவதற்காக அவர் போட்டிகளில் இருந்து மூன்று மாதங்கள் ஓய்வு எடுத்தார்.[4]
2005-ல் பிங்கி மீண்டும் போட்டிக்குத் திரும்பியபோது, ஐலீன் சமந்தா, சாந்தி சௌந்தரராஜன் மற்றும் மந்தீப் கவுர் ஆகியோருடன் இணைந்து 2005 ஆசிய உள்ளரங்கப் போட்டிகளில் 4×400 மீட்டர் தொடரோட்ட அணியில் ஒரு தங்கப் பதக்கம் வென்றார். அதே ஆண்டில், அகில இந்திய திறந்தநிலை தேசிய வாகையாளர் போட்டிகளில் 400 மற்றும் 800 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தங்கப் பதக்கங்களை வென்றார்.[5] 2006 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்தான் பிங்கியின் மூத்தோர் மட்டத்திலான முதல் உலகப் போட்டியாகும். அவர் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் அரையிறுதிக்கு முன்னேறினார்.[6] மேலும் ராஜ்விந்தர் கவுர், சித்ரா சோமன் மற்றும் மன்ஜீத் கவுர் ஆகியோருடன் இணைந்து 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்காக ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.[7]
அந்த ஆண்டு மே மாதம் பெங்களூரில் நடந்த ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் கூட்டத்தில், பிங்கி பிரமானிக் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று தனது 400 மீட்டர் தனிப்பட்ட சிறந்த ஓட்டத்தை 52.46 விநாடிகளுக்கு மேம்படுத்தினார்.[8] சில மாதங்களுக்குப் பிறகு, 2006 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், அவர் 400 மற்றும் 800 மீட்டர் தங்கப் பதக்கங்களை வென்றார்.[9] மேலும் மூன்றாவது தங்கத்திற்காக தொடர் ஓட்ட அணியை வழிநடத்தினார்.[10] பிங்கி பிரமானிக் தனது நேரம் போதவில்லை என்று ஏமாற்றமடைந்ததாகவும், இலங்கை விளையாட்டு வீரர்களிடமிருந்து அதிக போட்டியை எதிர்பார்க்கிறேன் என்றும் கூறினார்.[4]
2006 இல் ஐ. ஏ. ஏ. எஃப் உலகக் கோப்பையில் ஆசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 800 மீட்டரில் ஏழாவது இடத்தைப் பிடித்தார். பிரமானிக் அந்த ஆண்டின் பிற்பகுதியில் தனது முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 400 மீட்டர் மற்றும் தொடர் ஓட்டப்போட்டிகளில் போட்டியிட்டார். அவர் தனிநபர் இறுதிப் போட்டியை அடைந்தார. மேலும் ஜப்பானின் அசாமி டான்னோவுக்குப் பின்னால் வினாடிக்கு இருநூறு மீட்டர் ஓடி நான்காவது இடத்தைப் பிடித்தார். சதி கீதா, சித்ரா சோமன் மற்றும் மஞ்சீத் கவுர் ஆகியோருடன் தொடரோட்ட விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் ஒரே தடகளத்திற்கான தங்கத்தை வென்றார்.[11]
காயங்கள்
[தொகு]காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரமானிக் 2007 தொடரின் பெரும்பகுதியை இழந்தார். ஆகஸ்ட் மாதத்திற்குள் உடற்தகுதிக்குத் திரும்பிய அவர், கொல்கத்தாவில் நடந்த ஒரு பிராந்திய போட்டியில் பங்கேற்கத் தொடங்கினார், மேலும் 100 மீட்டர் நேரத்தை 11.07 விநாடிகளில் பதிவு செய்தார். 2008 கோடைக்கால ஒலிம்பிக் தகுதி பெறுவதற்காக 2008 இந்திய மாநிலங்களுக்கு இடையேயான வாகையாளர் வெற்றி பெறுவதில் பிரமானிக் தனது கவனத்தைச் செலுத்தினார். இருப்பினும், தொடை எலும்பு காயம் காரணமாக அவர் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டார்.[12]
2010 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பிரமானிக் உள்ளூர் புருலியா தடகள வாகையாளர் போட்டியைத் தொடங்கி வைத்தார். வீட்டிற்கு செல்லும் வழியில், அவரது வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதியது, மேலும் அவரது முகம் மற்றும் முழங்கால்களில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. அவரது உடல்நிலை மோசமாக இல்லை என்றாலும், அவருக்கு முதுகுவலி இருந்தது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[13]
ஊக்கமருந்து
[தொகு]2012 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், பிரமானிக் தனது செயல்திறனை மேம்படுத்த டெஸ்டோஸ்டிரோன் ஊசி போட வேண்டும் என்று தனது பயிற்சியாளர்கள் கூறியதாகத் தெரிவித்தார்.[5]
பாலியல் சர்ச்சை
[தொகு]2012 ஆம் ஆண்டில், பிங்கி பிரமானிக்கின் பெண் நண்பர் ஒருவரின் கற்பழிப்பு குற்றச்சாட்டு அவரது பாலினத்தை தீர்மானிக்க மருத்துவ பரிசோதனைகளுக்கு வழிவகுத்தது. ஆரம்ப தனியார் சோதனைகள் அவர் ஆண் என்று சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது. பிங்கி இந்த முடிவுகளுடன் உடன்படவில்லை, மேலும் அவரது விசாரணையின் ஒரு பகுதியாக அரசாங்கம் தலைமையிலான ஒரு தனி சோதனைக்கு காவல்துறை உத்தரவிட்டது.[14][15] எஸ். எஸ். கே. எம் அரசு மருத்துவமனை முடிவுகள் எந்த தெளிவையும் எட்டவில்லை.[16] பின்னர் நீதிமன்றம் குரோமோசோம் வடிவச் சோதனைக்கு உத்தரவிட்டது.[17] அந்த ஆண்டு நவம்பரில், பிரமானிக் ஒரு "போலி இருபால் உயிரினம்" என்பதைக் மருத்துவ பரிசோதனைகள் மூலம் தெரிவிக்கப்பட்டன.[18] பிரமானிக் ஊடுருவும் உடலுறவு கொள்ள இயலாது என்றும் மருத்துவ அறிக்கை சுட்டிக்காட்டியது.[19]
பிங்கி ஒரு நேர்காணலில் கூறினார், "இந்த குற்றச்சாட்டுகளைக் கொண்டுவந்த பெண் எனது துணைவி அல்ல, நாங்கள் காதலிக்கவில்லை. அவள் தனது காதலன் மற்றும் அவரது ஐந்து வயது குழந்தையுடன் வாடகைக்கு வசித்து வந்தாள். அவள் என்னைப் நிர்வாண புகைப்படங்களை எடுத்து அவற்றை பகிரங்கப்படுத்துவதாக அச்சுறுத்தியிருந்தாள். அவள் சில காலமாக என்னை மிரட்டி வந்தாள். ஆனால் நான் என்று குற்றம் சாட்டப்பட்டு அவளைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுப்பட்ட குற்றாச்சாட்டால் நான் அதிர்ச்சியடைந்தேன். நான் ஆண் அல்ல. நான் எப்போதும் பெண்ணாகத் தான் இருந்தேன். நான் இப்போது ஆணாக இருக்கிறேன், ஏனெனில், சர்வதேச தடகளத்தில் போட்டியிட எனது பயிற்சியின் ஒரு பகுதியாக, எனக்கு தொடர்ந்து டெஸ்டோஸ்டிரோன் ஊசி போடப்பட்டது. இவற்றை எடுப்பது அவசியம் என்று என்னிடம் கூறப்பட்டது, இவை சட்டபூர்வமானதா இல்லையா என்று நான் ஒருபோதும் கேள்வி எழுப்பவில்லை. நான் வெல்வதில் கவனம் செலுத்தினேன், என் பயிற்சியாளர்களால் சொன்னதைச் செய்யும்படி கேட்கப்பட்டேன், எனக்கு எது சிறந்தது என்று தெரியும். ஆனால், அதன் பிறகு, எனது குரல் மாற்றமடைந்து ஆண்களைப் போல் உடலில் மயிர்கள் வளர்ச்சியடைந்தன."[20] குற்றச்சாட்டிற்கு பின்னான சோதனையின் பொது சுயநினைவின்றி மயக்கத்திற்கு உட்படுத்தப்பட்டேன். என்னிடம் எந்த அனுமதியும் கேட்கப்படவில்லை. எனது உடலுக்குள் செல் வைக்கப்பட்டு, ஆண்களின் அறையில் வைக்கப்பட்டேன்.[20] 2006 தெற்காசிய மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவரது செயல்திறனுக்காக மேற்கு வங்க அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலம் குறித்த சர்ச்சையின் ஒரு பகுதியாக பிரமானிக்கை சிக்க வைக்கும் முயற்சியின் பின்னணியில் ஒரு சக்திவாய்ந்த தரகர் மற்றும் வங்காள தடகள வீரர் ஜோதிர்மயி சிக்தாரின் (முன்னாள் சிபிஎம் எம். பி.) கணவர் அவதார் சிங் இருப்பதாக அவரது நண்பர் கூறினார்.[21]
பிரபலமான கலாச்சாரத்தில்
[தொகு]பிங்கி-ஏக் சத்யகதா (பிங்கி-ஒரு உண்மையான கதை) சுதீன் தாக்கூர் இயக்கி, சாரா சிரவன் நடித்த 2014ல் வெளிவந்த இந்திய மராத்தி மொழி நாடகத் திரைப்படம், பிரமானிக்கின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.[22][23] இது விளையாட்டுகளில் பாலினச் சோதனையின் எதிர்மறையான அம்சங்களை முன்னிலைப்படுத்த முயல்கிறது. பாலின சோதனை பிரச்சினையைப் பற்றிய 2021 ஆம் ஆண்டின் இந்திய விளையாட்டு நாடகத் திரைப்படமான ராஷ்மி ராக்கெட், பிரமானிக் மற்றும் டூட்டி சந்த் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்களை உதாரனமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.[24]
தனிப்பட்ட சிறப்புகள்
[தொகு]| நிகழ்வு | நேரம் (மத். | இடம். | தேதி |
|---|---|---|---|
| 400 மீ. | 52.46 | பெங்களூர், இந்தியா | 22 மே 2006 |
| 800 மீ. | 2:02.49 | சென்னை, இந்தியா | 5 நவம்பர் 2006 |
| 400 மீ. (இந்தோர்) | 53.89 | பட்டாயா, தாய்லாந்து | 13 நவம்பர் 2005 |
| 800 மீ. (இந்தூர்) | 2:15.06 | தெஹ்ரான், ஈரான் | 6 பிப்ரவரி 2004 [2] |
குறிப்புகள்
[தொகு]- ↑ Pistol pops out of shooting-star athlete's kit. The Telegraph India (2004-11-23). Retrieved on 2010-03-05.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Paramanik, Pink Biography பரணிடப்பட்டது 2011-07-26 at the வந்தவழி இயந்திரம். IAAF. Retrieved on 2010-03-05.
- ↑ Pinki Pramanik's efforts to the fore. தி இந்து (2003-12-22). Retrieved on 2010-03-05.
- ↑ 4.0 4.1 From police custody to podium, Pinki primed for higher glory. One India (2006-08-28). Retrieved on 2010-03-05.
- ↑ 5.0 5.1 All-India Open National Championships. GBR Athletics. Retrieved on 2010-03-05.
- ↑ 2006 Melbourne Women's 800m Semifinal 2 பரணிடப்பட்டது 2009-10-28 at the வந்தவழி இயந்திரம். 2006 Commonwealth Games. Retrieved on 2010-03-05.
- ↑ Melbourne 2006 Women's 4x400m Relay Final பரணிடப்பட்டது 2006-10-10 at the வந்தவழி இயந்திரம். 2006 Commonwealth Games. Retrieved on 2010-03-05.
- ↑ Asian Grand Prix – Bangalore. IAAF (2006-05-22). Retrieved on 2010-03-05.
- ↑ Weerawansa, Dinesh (2006-08-25). South Asian Games – Day 2. IAAF. Retrieved on 2010-03-04.
- ↑ Weerawansa, Dinesh (2006-08-26). South Asian Games – Day 3. IAAF. Retrieved on 2010-03-04.
- ↑ Foursome strikes gold. The Tribune India (2006-12-12). Retrieved on 2010-03-05.
- ↑ Runner Pinky Pramanik seriously injured in road accident பரணிடப்பட்டது 2011-07-14 at the வந்தவழி இயந்திரம். MSN/PTI (2010-01-24). Retrieved on 2010-03-05.
- ↑ Pinki shifted to city-based B R Singh Hospital. Zee News. Retrieved on 2010-03-05.
- ↑ Gold medallist Pinki Pramanik accused of being male, held for `rape`
- ↑ "Confirmed: Indian athlete Pinki Pramanik is male". Archived from the original on 15 June 2012. Retrieved 15 June 2012.
- ↑ Pinki's SSKM gender test inconclusive
- ↑ Court directs chromosome pattern test for Pinki Pramanik
- ↑ "Tests show athlete Pinki Pramanik, charged with rape, is male". Archived from the original on 2013-02-05. Retrieved 2012-11-12.
- ↑ "Medical experts doubt Pinki Pramanik can rape". The Times of India இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103180851/http://articles.timesofindia.indiatimes.com/2012-11-14/athletics/35111300_1_pinki-pramanik-medical-experts-medical-report.
- ↑ 20.0 20.1 . 2012-07-30. http://www.outlookindia.com/article.aspx?281677.Mitra, Dola (30 July 2012). "I Am A Female, And Once Loved A Man". Outlook India (Magazine). Retrieved 13 November 2012.
- ↑ "Jyotirmoyee Sikdar's husband asked me to frame Pinki Pramanik: Ex-partner". The Times of India இம் மூலத்தில் இருந்து 2013-12-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131231141108/http://articles.timesofindia.indiatimes.com/2012-07-14/kolkata/32674719_1_pinki-pramanik-prime-land-asian-games-gold.
- ↑ Pinky - Ek Satyakatha. pinkyeksatyakatha.com.
- ↑ Marathi film Pinky - Ek Satyakatha is based on Pinki Pramanik's life. Times of India.
- ↑ Movie Rashmi Rocket reminds you of Pinki Pramanic and Dutee Chand. Afternoon Voice.