உள்ளடக்கத்துக்குச் செல்

பிங்கால் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிங்கால் மாகாணம்
Bingöl ili
துருக்கியில் பிங்கால் மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் பிங்கால் மாகாணத்தின் அமைவிடம்
நாடுதுருக்கி
பகுதிமையக்கிழக்கு அனதோலியா
துணைப்பகுதிமாலத்யா
அரசு
 • தேர்தல் மாவட்டம்பிங்கால்
 • ஆளுநர்கதிர் எக்கின்சி
பரப்பளவு
 • மொத்தம்8,125 km2 (3,137 sq mi)
மக்கள்தொகை
 (2018)[1]
 • மொத்தம்2,81,205
 • அடர்த்தி35/km2 (90/sq mi)
Area code0426
வாகனப் பதிவு12

பிங்கால் மாகாணம் (Bingöl Province, துருக்கியம்: Bingöl ili  ; Zazaki , [2] Kurdish , ஆர்மீனியம்: Ճապաղջուր ) என்பது கிழக்கு அனத்தோலியாவில் உள்ள ஒரு துருக்கி மாகாணமாகும். இந்த மாகாணம் 1936 ஆம் ஆண்டில் எலாஸ் மற்றும் எர்சின்கானின் சில பகுதிகளிலிருந்து உருவாக்கப்பட்டது. [3] புதிய மாகாணம் 1945 ஆம் ஆண்டு பிங்கால் மாகாணம் என பெயர் மாற்றப்படும் வரை சபகூர் மாகாணம் (ஆர்மீனிய பெயரான "சபாக்ஜூர்" என்பதிலிருந்து "முரட்டுத்தனமான நீர்" என்று பொருள்) என்று அழைக்கப்பட்டது. இதன் அண்டை மாகாணங்களாக துன்செலி, ஏர்சுரம், மியூ, தியர்பாகர், எர்சின்கான், எலாசோ போன்றவை உள்ளன. இந்த மாகாணம் 8,125 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகையானது 255,170 ஆகும். இங்கு பேசப்படும் முக்கிய மொழிகளாக துருக்கியம், சசாகி மற்றும் குர்தி போன்றவை உள்ளன. மாகாணத்தின் தலைநகராக பிங்கல் உள்ளது. மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்கள் ஜாசாக்கள் ஆவர். [4] மாகாணத்தின் தற்போதைய ஆளுநரான, கதிர் எக்கின்சி 5 நவம்பர் 2018 அன்று சனாதிபதியால் நியமிக்கப்பட்டார். [5]

வரலாறு[தொகு]

1935 திசம்பரில் துன்செலி சட்டம் நிறைவேற்றப்பட்டது, இது பிராந்தியத்தில் மிகவும் சக்திவாய்ந்த அரசாங்கத்தை நிறுவக் கோரியது. [6] ஆகையால், தற்போதைய பிங்கால் மாகாணப் பகுதியானது துன்செலி, எர்சின்கான், எலாஜிக் மாகாணங்களுடன் 1936 ஜனவரியில் சேர்த்து நான்காவது இன்ஸ்பெக்டரேட் ஜெனரல் (உமுமி மெஃபெட்டிக்லிக், யுஎம்) பிராந்திய நிர்வாகப் பிரிவில் சேக்ககபட்டது. [7] [8] இது நான்காவது யுஎம் ஆளுநர் தளபதியால் நிர்வகிக்கப்பட்டது. இத்னபடி நகராட்சிகளில் உள்ள அனைத்து ஊழியர்களும் இராணுவத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர். ஆளுநர் தளபதிக்கு அனைத்து கிராமங்களில் உள்ள மக்களை வெளியேற்றி இப்பகுதிக்கு மாகாணத்தின் பிற பகுதிகளில் இருந்து மக்களை மீள்குடியேற்றம் செய்ய அதிகாரம் இருந்தது. 1946 இல் துன்செலி சட்டம் ரத்து செய்யப்பட்டு அவசரகால நிலை நீக்கப்பட்டது, ஆனால் நான்காவது யுஎம் அதிகாரம் இராணுவத்திற்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டரேட் ஜெனரல் 1952 இல் ஜனநாயகக் கட்சி அரசாங்கத்தின் போது கலைக்கப்பட்டது. [9]

மாவட்டங்கள்[தொகு]

பிங்கால் மாகாணம் 8 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து சுட்டபட்டுள்ளது):

 • அடக்லே
 • பிங்கால்
 • ஜெனீ
 • கார்லோவா
 • கியோ
 • சோல்ஹான்
 • யேலடரே
 • யெடிசு

குறிப்புகள்[தொகு]

 1. "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
 2. Zazaca -Türkçe Sözlük, R. Hayıg-B. Werner
 3. "Valilik Tarihçesi". www.bingol.gov.tr. பார்க்கப்பட்ட நாள் 2020-04-12.
 4. Zaza people not kurd and turk[தொடர்பிழந்த இணைப்பு]
 5. "Valimiz". www.bingol.gov.tr. பார்க்கப்பட்ட நாள் 2020-04-12.
 6. Cagaptay, Soner (2006-05-02). Islam, Secularism and Nationalism in Modern Turkey: Who is a Turk? (in ஆங்கிலம்). Routledge. pp. 108–110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-17448-5.
 7. Bayir, Derya (2016-04-22). Minorities and Nationalism in Turkish Law (in ஆங்கிலம்). Routledge. pp. 139–141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-09579-8.
 8. Cagaptay, Soner (2006-05-02). Islam, Secularism and Nationalism in Modern Turkey: Who is a Turk? (in ஆங்கிலம்). Routledge. p. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-17448-5.
 9. Fleet, Kate (2008-04-17). The Cambridge History of Turkey (in ஆங்கிலம்). Cambridge University Press. p. 343. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-62096-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிங்கால்_மாகாணம்&oldid=3220868" இலிருந்து மீள்விக்கப்பட்டது