உள்ளடக்கத்துக்குச் செல்

பிங்கல்ஷி மேகானந்த் காத்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிங்கல்ஷி மேகானந்த் காத்வி
தொழில்நாட்டுப்புற எழுத்தாளர், நாட்டுப்புற பாடகர்
மொழிகுஜராத்தி
குறிப்பிடத்தக்க விருதுகள்சங்கீத நாடக அகாதமி விருது (1990)
துணைவர்ஜிபாபென் உத்தாஸ் காத்வி
பிள்ளைகள்8 குழந்தைகள் - 4 மகன்கள் மற்றும் 4 மகள்கள்

பிங்கல்ஷி மேகானந்த் காத்வி (27 ஜூலை 1914 - 31 மே 1998) ஒரு இந்திய நாட்டுப்புற பாடகர் மட்டுமல்லாமல் குஜராத்தி மொழியின் நாட்டுப்புற எழுத்தாளர் ( சாஹித்யகர் ) ஆவார். குஜராத் நாட்டுப்புற  இலக்கியத்திற்கு பங்காற்றியவர்களுள் முக்கியமானவர்.

சுயசரிதை[தொகு]

காத்வி 1914 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி ஜுனாகத்திற்கு அருகிலுள்ள சத்ரவா என்ற கிராமத்தில் பிறந்தார். அவர் முறையான கல்வியை சிறிதளவே பெற்றிருந்தாலும் அனுபவ அறிவின் காரணமாக பல்வேறு வகைகளில் குஜராத் நாட்டுப்புற இலக்கியங்களை எழுதினார். அதுமட்டுமல்லாமல் குஜராத்தி தொலைக்காட்சி ஒளியலைகளில் மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து இடம்பெற்று நாட்டுப்புற  பாடல்கள் மற்றும் இலக்கிய பங்களிப்புகளை பற்றி பகிர்ந்துள்ளார்.அவர் 31 மே 1998 அன்று குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் இறந்தார். [1]

முக்கிய படைப்புகள்[தொகு]

 • காமிர்வந்த மனவி (1972),
 • சந்தா தர்ஷன் (1991),
 • வேணுதாதா (1978),
 • காந்திகுலா (1969, மகாத்மா காந்தியின் முன்னோர்கள் பற்றிய சில பாடல்கள்),
 • காமிர்வந்தி கத்தாவோ (1996),
 • பவ்னி பேட் (1998),
 • பஹர்வதியோ பூபத் (1978) ,
 • ஜிவதர்னா ஜோக் (1996),
 • ம்ருத்யுனோ மல்கட் (1996, சிறுகதைகள்) ஆகியவற்றை எழுதியுள்ளார்

சௌராஷ்டிரா: சத்தியம் சிவம் சுந்தரம் (2000) அவரது மகன் லக்ஷ்மனால் அவரை கௌரவிக்கும் வகையில் வெளியிடப்பட்டது.

அங்கீகாரம்[தொகு]

குஜராத்தி நாட்டுப்புற இசைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 1990 இல் சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார். [1]

மேலும் பார்க்கவும்[தொகு]

 • குஜராத்தி மொழி எழுத்தாளர்களின் பட்டியல்

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 "Pingaḷshi Gaḍhvi", The Oxford Encyclopaedia of the Music of India (in ஆங்கிலம்), Oxford University Press, 2011, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acref/9780195650983.001.0001/acref-9780195650983-e-3829, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-565098-3, பார்க்கப்பட்ட நாள் 2020-03-29