பிக்ரம் கிரெவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிக்ரம் கிரெவால் (Bikram Grewal) இந்தியாவின் தில்லியைச் சேர்ந்த ஒரு பறவையியல் நிபுணராவார். ஓர் எழுத்தாளராகவும், பறவை நோக்குநராகவும், பறவைகள் பாதுகாவலராகவும் இவர் அறியப்படுகிறார். இந்திய பறவைகள் குறித்து பல வழிகாட்டி நூல்களை பிக்ரம் எழுதியுள்ளார். இவரது தந்தை இந்திய அரசாங்கத்தில் பணியாற்றிய மூத்த அரசு ஊழியராவார். மத்தியப் பிரதேசம், அருணாச்சலம் மற்றும் நாகாலாந்தில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக பிக்ரம் அரசாங்கங்கள் மற்றும் தனியார் குழுக்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.[1] இவரது 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய பறவைகள்[2] என்ற புத்தகம் அதிகம் விற்பனையான புத்தகங்களில் ஒன்றானது.[3] சரணாலய ஆசியா என்ற பத்திரிகையில் கொண்டுவரப்பட்ட பரம்பரைத் தொடரின் ஒரு பகுதியாகவும் பிக்ரம் இருந்தார்.

எழுதிய புத்தகங்கள்[தொகு]

 1. உள்நோக்கு வழிகாட்டிகள் : இந்தியா (1988)
 2. இமயமலையின் பறவைகளுக்கு ஒரு புகைப்பட வழிகாட்டி [4] (ஆட்டோ பிசுட்டருடன், 1999)
 3. இந்தியப் பறவைகளின் புகைப்பட வழிகாட்டி (2002)
 4. தில்லி மற்றும் அரியானா பறவைகளின் பட ஏடு[5] (2006)
 5. சுந்தரவனம் மரபுரிமை [6] (பிட்டு சாகல் மற்றும் சிமித்து சென்னுடன்),
 6. பாரத்பூர் மரபுரிமை [7](with Bittu Sahgal), and
 7. கார்பெட்டு மரபுரிமை [8] (பிரியேந்திர சிங் மற்றும் பிட்டு சாகலுடன்)

மேற்கோள்கள்[தொகு]

 1. "Call of the wild". The Hindu (Chennai, India). 25 April 2011. http://www.thehindu.com/life-and-style/metroplus/article1766372.ece. 
 2. Grewal, Bikram; Harvey, Bill; Pfister, Otto (2002). Photographic guide to birds of India. Periplus editions. 
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-21. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
 4. A Photographic Guide to Birds of the Himalayas (1999). Bikram Grewal, Otto Pfister. New Holland. 
 5. Atlas of the Birds of Delhi and Haryana, Bill Harvey, N Devasar & Bikram Grewal, Rupa & Co., 2006
 6. Bittu Sahgal, Sumit Sen; Bikram Grewal (2007). The Sundarbans Inheritance. Sanctuary Books. 
 7. Bittu Sahgal; Bikram Grewal (2006). The Bharatpur Inheritance. Sanctuary Asia. 
 8. Brijendra Singh; Bittu Sahgal; Bikram Grewal (2007). The Corbett Inheritance. Sanctuary Asia. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்ரம்_கிரெவால்&oldid=3850543" இலிருந்து மீள்விக்கப்பட்டது