பிகே (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிகே
முதல் சுவரொட்டி
இயக்கம்ராஜ்குமார் ஹிரானி
தயாரிப்புராஜ்குமார் ஹிரானி
விது வினோத் சோப்ரா
சித்தார்த் ராய் கபூர்
கதைராஜ்குமார் ஹிரானி
அபிஜத் ஜோஷி
நடிப்பு
ஒளிப்பதிவுசி. கே. முரளிதரன்
படத்தொகுப்புராஜ்குமார் ஹிரானி
கலையகம்வினோத் சோப்ரா பிலிம்ஸ்
ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ்
யுடிவி மோஷன் பிக்சர்ஸ்
விநியோகம்யுடிவி மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடு19 திசம்பர் 2014 (2014-12-19)
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு85 கோடி (US$11 மில்லியன்)
மொத்த வருவாய்792 கோடி (US$99 மில்லியன்)

பிகே (ஆங்கில மொழி: PK) 2014ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய நாட்டு இந்தி நகைச்சுவை திரைப்படம். இந்தத் திரைப்படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்க, ஆமிர் கான், அனுஷ்கா சர்மா, ஹர்பஜன் சிங் ராஜ்புத், போமன் இரானி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

கதை[தொகு]

வேற்றுகிரக மனிதனாகிய பிகே (அமீர்கான்) பூமியில் இறங்குகிறார். அவரின் விண்கலத்தின் தொலை இயக்கி (ரிமோட் கண்ட்ரோல்) திருட்டுபோனதால் அவர் இராச்சசுத்தானில் மாட்டிக்கொள்கிறார். அதை மீட்க முயலும் போது வானொலி பதிப்பியை மட்டுமே திருடனிடம் இருந்து பெறமுடிகிறது. முதலில் அம்மணமாக இருக்கும் பிகே அது பூமியில் ஒத்துக்கொள்ளப்படாது என்று அறிந்து மகிழுந்தில் இருந்து உடைகளை திருடுகிறார்.

பிகே பைரோன் சிங்கிடம் (சஞ்சய் தத்) நட்பாகிறார். அவர் பூமியின் நடைமுறைகளை பிகேவுக்கு சொல்லித்தருகிறார். மனிதர்களை தொடுவதன் மூலம் அவர்கள் நினைவுகளை இவர் உள்வாங்குகிறார். ஆனால் தெரியாத அடுத்தவர் மேல் கை வைப்பது அநாகரிகம் என்று பைரோன் சிங் சொல்லுவதால் அப்பழக்கத்தை நிறுத்துகிறார். பிகே அடுத்தவர் மேல் கை வைப்பது காம உணர்ச்சியின் காரணமாக என்று தவறாக புரிந்துகொள்ளும் பைரோன் சிங் அவரை விபச்சார விடுதிக்கு அழைத்து செல்கிறார். விபச்சார பெண் மீது கை வைக்கும் பிகே அப்பெண்ணின் போஜ்புரி மொழியை அறிந்துகொள்கிறார்.

களவு போன தொலை இயக்கியை கண்டுபிடிக்க டெல்லி செல்லவேண்டும் என்று அடுத்தவர் கூறியதால் டெல்லிக்கு பயணமாகிறார். இவரின் பழக்கவழக்கத்தால் மக்கள் இவரை குடிகாரர் என்று நினைத்து பிகே என்று அழைக்கிறார்கள். சாமியாரிடம் சென்றால் தொலை இயக்கி கிடைக்கும் என இவருக்கு மக்கள் கூறுகிறார்கள். சாமியை அடைய முற்படும் பிகே இந்தியாவின் பல்வேறு சமயங்களால் குழம்புகிறார். பின்பு இவர் தபஸ்வி மகாராஜ் என்னும் சாமியார் (சருப் சுக்லா) தன்னுடைய தொலை இயக்கியை வைத்திருப்பதை கண்டறிகிறார். ஆனால் தபஸ்வி மகாராஜ் தொலை இயக்கியை இமய மலையில் கடவுளிடம் இருந்து பெற்றதாக கூறி அதை பிகேவிடம் தர மறுத்துவிடுகிறார். குழப்பமடையும் பிகே தபஸ்வியும் மற்ற சமய தலைவர்களும் கடவுளை சரியான எண்ணில் அழைக்காமல் தவறாக எண்ணை அழைத்து வேறு யாரிடமோ பேசியதால் வேறுபாடுகளையும் பொருளற்ற சடங்குகளையும் பரப்புவதாக எண்ணுகிறார்.

இதனிடையே தொக்கா நிருபர் ஜக்கு (அனுசுக்கா சர்மா) சர்பார்சு (சுசுகந் சிங் ராஜ்புட்) என்பவரிடம் காதல் கொள்கிறார். சர்பார்சு பாக்கித்தானை சேர்ந்த முசுலிம் என்பதால் அக்காதலுக்கு ஜக்குவின் தந்தை மறுப்பு தெரிவிக்கிறார். தபஸ்வி இக்காதல் நிறைவேறாது என்று ஜக்குவின் தந்தையிடம் கூறுகிறார். திருமண மண்டபத்தில் வேற்றுமைகளை காரணம் கூறி திருமணம் நடக்காது என்று சர்பார்சிடம் இருந்து கடிதம் வருகிறது. இதனால் மனமொடிந்த ஜக்கு இந்தியா திரும்புகிறார். பிகே கடவுள் தொலைந்துவிட்டார் என்று துண்டு வெளியீடுகளை மக்களிடம் கொடுப்பதை பார்க்கிறார். பிகேவின் கதையை கேட்ட ஜக்கு தபஸ்வி ஏமாற்றுக்காரர் என்று மக்களிடம் வெளிப்படுத்தவும் பிகேவின் தொலை இயக்கியை மீட்கவும் திட்டம் வகுக்கிறார்.

தபஸ்வி பிகேவை தொலைக்காட்சி படப்பிடிப்பு நிலையத்தில் சந்திக்கிறார், இது நேரலையாக ஒளிபரப்படுகிறது. தபஸ்வி தான் கடவுளிடம் நேரடையாக பேசுவதாகவும் சர்பார்சு ஜக்குவை திருமணம் செய்ய மறுப்பார் என தான் கூறியது போல் நடத்தது அதை உறுதிபடுத்துவதாகவும் சொல்கிறார். ஜக்குவின் நினைவுகளை அறிந்த பிகே அம்மாதிரி கடித்தத்தை சர்பார்சு எழுதவில்லை என அறிகிறார். ஜக்கு சர்பார்சு பணிபுரியும் பெல்சியத்திலுள்ள பாக்கித்தான் தூதரகத்தை தொடர்பு கொள்கிறார். சர்பார்சு இன்னும் ஜக்கு நினைவாக இருப்பதை அறிகிறார். இருவரும் இணைகிறார்கள். தபஸ்வியின் குட்டு வெளிப்படுகிறது. பிகேவிடம் அவரின் தொலை இயக்கியை ஒப்படைக்கிறார்.

பிகே ஜக்கு மேல் காதல் கொள்கிறார் ஆனால் ஜக்கு சர்பார்சை விரும்புவதால் அதை கூறவில்லை. தன் கிரகத்தில் இருந்து வேண்டும் போது அவர் குரலை கேட்பதற்காக ஜக்குவின் குரலை பதிவு செய்து நிறைய மின்கலங்களுடன் தன் பெட்டியில் வைத்துக்கொள்கிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிகே_(திரைப்படம்)&oldid=2706190" இலிருந்து மீள்விக்கப்பட்டது