பிகாலா கணேசு குப்தா
பிகாலா கணேஷ் குப்தா | |
|---|---|
बीगला गणेश गुप्ता | |
| தெலங்காணா சட்டமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 2014–2023 | |
| முன்னையவர் | எண்டல இலட்சுமிநாராயணன் |
| பின்னவர் | தன்பால் சூரியநாராயணன் |
| தொகுதி | நிசாமாபாத் நகர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1969 நிசாமாபாத், தெலங்காணா, இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பாரத் இராட்டிர சமிதி |
| பெற்றோர் |
|
| முன்னாள் மாணவர் | குல்பர்கா பல்கலைக்கழகம் (B.E.) |
| பணி | அரசியல்வாதி, பொறியாளர் |
பிகாலா கணேஷ் குப்தா (Bigala Ganesh Gupta, பிறப்பு: 1969) என்பவர் தெலங்காணாவைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரத் இராட்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியின் சார்பில், நிசாமாபாத் மாவட்டத்தின் நிசாமாபாத் நகர சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 2018 தெலங்காணா சட்டமன்றத் தேர்தலில் தெலங்காணா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
குடும்பம்
[தொகு]இவர் நிசாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்; இவரது தந்தையின் பெயர் கிருஷ்ண மூர்த்தி பிகாலா ஆகும். இவர் 1996 ஆம் ஆண்டு குல்பர்கா பல்கலைக்கழகத்தில் பொறியியலில் இளங்கலைப் பட்டம் (B.E.) பெற்றார்.
அரசியல்
[தொகு]இவர் 2014 ஆம் ஆண்டு தேர்தலில் தெலுங்காணா இராட்டிர சமிதி கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 10,308 (7.62%) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தப் பதிவான வாக்குகளில் 31.15% வாக்குகளைப் பெற்று, 2018ஆம் ஆண்டிலும் பாரத் இராட்டிர சமிதி கட்சிக்கு இத்தொகுதியைத் தக்கவைத்துக் கொடுத்தார்.[2] எனினும், 2023-ல் நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தன்பால் சூரியநாராயணனிடம் இவர் இத்தொகுதியை இழந்தார்; இத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் முகமது அலி சப்பீர் இரண்டாம் இடத்தைப் பிடிக்க, பிகாலா கணேசு குப்தா மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ganesh Bigala(BRS):Constituency- NIZAMABAD (URBAN)(NIZAMABAD) - Affidavit Information of Candidate:". www.myneta.info. Retrieved 2026-01-23.
- ↑ Mohan, P. Ram (2018-12-11). "It’s 8 out of 9 for TRS in old Nizamabad dist." (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Hyderabad/its-8-out-of-9-for-trs-in-old-nizamabad-dist/article25721148.ece.
- ↑ https://www.news18.com/news/politics/nizamabad-urban-election-result-2018-live-updates-bigala-ganesh-of-trs-wins-1968907.html
- ↑ "Nizamabad (Urban) Constituency Election Results 2023: Nizamabad (Urban) Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2026-01-23.