பிகானேர் இல்லம்
பிகானேர் இல்லம் | |
---|---|
![]() | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
உரிமையாளர் | முன்னர்: பிகானேர் இராச்சியம் தற்பொழுது: இராசத்தான் அரசு |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தளப்பரப்பு | 8 ஏக்கர் |

பிகானேர் இல்லம் (Bikaner House) என்பது புது தில்லியில் உள்ள பிகானேர் இராச்சியத்தின் மகாராஜாவின் முன்னாள் இல்லமாகும். இது இந்தியாவின் வாயில் அருகில் அமைந்துள்ளது.[1][2]
வரலாறு
[தொகு]பிரித்தானிய இந்தியாவில் இளவரசர்களின் அறையை அமைத்த பிறகு, ஆட்சியாளர்களுக்குத் தலைநகரில் ஒரு குடியிருப்பு தேவைப்பட்டது. புது தில்லியில் உள்ள பிரின்சஸ் பூங்காவில் பல அரண்மனைகள் கட்டப்பட்டன. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் சிலையைச் சுற்றி ஐதராபாத்து இல்லம், பரோடா இல்லம், பட்டியாலா இல்லம், ஜெய்ப்பூர் இல்லம், தர்பங்கா இல்லம் ஆகியவை உள்ளன.[3]
இது சார்லஸ் ஜி ப்லோம்ஃபீல்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.[4] சுதந்திரத்திற்குப் பிறகு இது இராசத்தான் மாநில அரசால் வாங்கப்பட்டது. இது 2014-15-இல் கலை, கலாச்சாரத்திற்கான இடமாகப் பயன்படுத்தப் புதுப்பிக்கப்பட்டது.

கட்டிடக்கலை
[தொகு]பிகானேர் இல்லம் லுடியன்ஸ் தில்லியில் 8 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அனைத்து சமசுதான குடியிருப்புகளிலும், பிகானேர் இல்லம் ஓர் அரண்மனையை விட மாளிகை போன்ற வடிவமைப்பில் மிகவும் பிரமாண்டமாக உள்ளது.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mahapatra, Dhananjay (27 January 2006). "Bikaner House in occupancy row". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/delhi/Bikaner-House-in-occupancy-row/articleshow/1388175.cms.
- ↑ Smith, R. V. (7 February 2016). "Stories behind the royal abodes". The Hindu. https://www.thehindu.com/features/metroplus/stories-behind-the-royal-abodes/article8203558.ece.
- ↑ Sharma, Manoj (2011-06-08). "Of princes, palaces and plush points". Hindustan Times. https://www.hindustantimes.com/delhi/of-princes-palaces-and-plush-points/story-mKjxnswBZVzbKMinScJsvK.html.
- ↑ Ibrar, Mohammad (6 December 2016). "Lost Glory of Bikaner House Restored". The Times of India. http://timesofindia.indiatimes.com/articleshow/55820680.cms.
மேலும் வாசிக்க
[தொகு]- Bhowmick, Sumanta K (2016). Princely Palaces in New Delhi. Delhi: Niyogi Books. p. 264. ISBN 978-9383098910.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் பிகானேர் இல்லம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.