பிஎஸ்ஓ ஜே318.5-22

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிஎஸ்ஓ ஜே318.5-22
புறக்கோள் புறக்கோள்களின் பட்டியல்

Imatge del telescopi Pan-STARRS1 del planeta interestel•lar PSO J318.5-22, a la constel•lació del Capricorn. Crèdit: N. Metcalfe & Pan-STARRS 1 Science Consortium

இருப்புசார்ந்த இயல்புகள்
திணிவு(m)6.5[1] MJ
ஆரை(r)1.53 RJ
வெப்பநிலை (T) 1,160 ± 30–40 கெ
கண்டுபிடிப்பு
கண்டறிந்த நாள்
கண்டுபிடிப்பாளர்(கள்)
கண்டுபிடித்த முறை புகைப்பட முறை
கண்டுபிடித்த இடம் பான்-எச்டிஎஆர்ஆர் PS1 தொலைநோக்கி, Haleakalā
கண்டுபிடிப்பு நிலை வெளியிடப்பட்டுள்ளது.
வேறு பெயர்கள்
Database references
புறக்கோள்களின்
கலைக்களஞ்சியம்
தரவு
SIMBADதரவு

பிஎஸ்ஓ ஜே318.5-22(PSO J318.5-22) என்பது ஒரு உறுதி செய்யப்பட்ட புறக்கோள் ஆகும்[2][3].இது எந்த விண்மீனையும் சுற்றி வரவில்லை.இந்தக் கோள் புவியிலிருந்து 80 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இது பீட்டா பிக்டோரிச் நகரும் குழுப் பகுதியில் அமைந்துள்ளது[4] , இது 2013ல் பான்-எச்டிஎஆர்ஆர் PS1 தொலைநோக்கி மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்தக் கோள் 12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பீட்டா பிக்டோரிச் நகரும் குழுவும் இதே வயது உடையது ஆகும்[5].

ஹவாய் பல்கலைக்கழக வானியல் பிரிவு தலைவர் டாக்டர்.மைக்கேல் லியூ கூறுகையில்,விண்வெளியில் இது போன்று விண்மீன்களின்றித் தனித்த கோள் எதையும் இதுவரை நாங்கள் கண்டதில்லை எனவும் இதன் பண்புகள் ஒரு புதிய கோளின் பண்புகளை போன்று அமைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். இது போன்ற தனித்திருக்கும் நிலைமையை விளக்க தற்போதைய கோட்பாடுகளின் படி , இவை வலிமையான கோள்களினால் அதன் குடும்பத்திலிருந்து விலக்கப்பட்டிருக்கலாம் அல்லது இவை வேறு வழிகளில் உருவாகி இருக்கலாம் என கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Liu, Michael C.; Eugene A. Magnier, Niall R. Deacon, Katelyn N. Allers, Trent J. Dupuy, Michael C. Kotson, Kimberly M. Aller, W. S. Burgett, K. C. Chambers, P. W. Draper, K. W. Hodapp, R. Jedicke, R.-P. Kudritzki, N. Metcalfe, J. S. Morgan, N. Kaiser, P. A. Price, J. L. Tonry, R. J. Wainscoat (2013-10-01). "The Extremely Red, Young L Dwarf PSO J318-22: A Free-Floating Planetary-Mass Analog to Directly Imaged Young Gas-Giant Planets". Astrophysical Journal Letters In Press. http://arxiv.org/abs/1310.0457. 
  2. Gemini Observatory (2013-10-07). "Gemini Confirms Lonely Planet Floating in Space".
  3. Star-Advertiser Staff (2013-10-09). "Astronomers using Hawaii telescopes discover planet without a star". Honolulu Star-Advertiser. Honolulu Star-Advertiser.
  4. "A Strange Lonely Planet Found Without a Star". Science Daily. October 9, 2013. http://www.sciencedaily.com/releases/2013/10/131009153455.htm. 
  5. Institute for Astronomy (2013-10-09). "A Strange Lonely Planet Found without a Star". University of Hawaii.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஎஸ்ஓ_ஜே318.5-22&oldid=2746376" இருந்து மீள்விக்கப்பட்டது