பிஎன்பி பரிபாஸ்
பிஎன்பி பரிபாஸ் (BNP Paribas) என்பது பாரிசைத் தலைமையிடமாக கொண்ட பிரஞ்சு நாட்டு வங்கியும் நிதி சேவைகள் நிறுவனமும் ஆகும். இதன் உலக தலைமையகம் இலண்டனில் உள்ளது. இது 2000 ஆம் ஆண்டு பாங்க் நாஷ்னல் டி பாரிஸ் (BNP) மற்றும் பாரிபாஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் மூலம் உருவாக்கப்பட்டது. இது உலகின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றாகும். புளூம்பெர்க் மற்றும் ஃபோர்ப்ஸ் ஆகியவற்றின் மூலம் 2012ஆம் ஆண்டின் இதன் மொத்த சொத்துக்கள் அளவிடப்பட்டன. இந்த தகல்வகளின் அடிப்படையில், உலகின் மூன்றாவது பெரிய வங்கியாக தரவரிசையில் இடம் பிடித்தது.[1][2]
பிஎன்பி பரிபாஸ் நான்கு உள்நாட்டு சந்தைகளில் (பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், மற்றும் லக்சம்பர்க்) இயங்குகின்றது. இது அமெரிக்கா, போலந்து, துருக்கி, உக்ரைன், மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் குறிப்பிடத்தக்க சில்லறை செயல்பாடுகளையும், அதே போல் பெரிய அளவிலான முதலீட்டு வங்கி நடவடிக்கைகளை நியூயார்க், லண்டன், ஹாங்காங், மற்றும் சிங்கப்பூர் ஆகிய நகரங்களிலும் கொண்டுள்ளது.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Key figures 2011". BNP Paribas. 2012. 8 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 January 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ WORLD'S 50 BIGGEST BANKS 2012 | Global Finance. Gfmag.com (27 August 2012). Retrieved on 6 December 2013.
- ↑ "Annual Registration Document 2009". BNP Paribas. 11 March 2010. 2 ஆகஸ்ட் 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 April 2010 அன்று பார்க்கப்பட்டது.