பா. வே. மாணிக்க நாயக்கர்
பா. வே. மாணிக்க நாயக்கர் (2 பெப்ரவரி 1871 – 25 திசம்பர் 1931 பாகல்பட்டி, சேலம், தமிழ்நாடு) அறிவியல் தமிழ் வளர்த்த தமிழறிஞர் ஆவார். சென்னையில் பொறியியல் கல்வி கற்ற இவர் சென்னை அரசின் அளவைப் பெரும் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒலி நூலாராய்ச்சியில் ஈடிணையற்று விளங்கியவர். தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உலகின் கண்ணுள்ள எல்லா மொழிச் சொற்களையும் எழுத முடியுமென்று காட்டியவர். அறிவியற் கலைச்சொற்களுக்குத் தனித் தமிழ்ச் சொற்கள் அமைத்தவர். தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து பல அறிவியற் சொற்களை ஆக்கிப் பயன்படுத்தியவர்.
வரலாறு[தொகு]
பா. வே. மாணிக்க நாயக்கர் சேலம், பாகல்பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவராவார். பெற்றோர் வேங்கடசாமி நாயக்கர் - முத்தம்மையார் ஆவர். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்றவரவார். 1896ல் தமது 24ம் வயதில் பொதுப்பணித் துறையில் கட்டுமானப் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார்.
இவர் தமிழ்ப்படுத்திய சொற்கள் சில[தொகு]
பின்வரும் சொற்கள் இவர் தமிழ்ப்படுத்திய சொற்களாகும்:[1]
- புள்ளி அல்லது குற்று - point
- ஒன்றுவிட்ட, இடைவிட்ட - alternate
- அடுத்த - adjacent
- இடைவெட்டு - intersection
- குவியம் - focus
- நிலத்தின் அளவைக் கணிப்பது, வடிவ அளவை நூல் - geometry
- கதிர் - ray
- இயக்கம் - movement
- தொகுப்பு - summary
- நீர்மட்டம் - spirit level
- விளம்பு தாள் - tracing paper
- குறியளவை - algebra
எழுதிய நூற்கள்[தொகு]
- தமிழ் ஒலியிலக்கணம்
- கம்பன் புளுகும் வால்மீகியின் வாய்மையும் [1]
- தமிழ் எழுத்துக்களின் நுண்மை விளக்கம்
- தமிழலகைத் தொடர்
- தமிழ் மறை விளக்கம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தமிழ்ப்ரியன் என்.ஏ. (2005). இரு நூற்றாண்டுகளும் 50 தமிழ் அறிஞர்களும். சென்னை: நர்மதா பதிப்பகம். பக்கம் 306.