உள்ளடக்கத்துக்குச் செல்

பா. பரமேசுவரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பா. பரமேசுவரன் (பி. பரமேஸ்வரன், B. Parameswaran; பி. ஜனவரி 20, 1913, -இ.?) ஒரு தமிழக அரசியவாதி. இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், இரு முறை மாநில அமைச்சராகவும், ஒரு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

ஆதி திராவிடர் சாதியினைச் சேர்ந்த பரமேசுவரன் பறையர் முன்னோடி இரட்டைமலை சீனிவாசனின் பேரர். இவரது தந்தை பெயர் எம். பாலசுப்ரமணியன். சென்னை புனித கேப்ரியல் பள்ளியிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் பணியாற்றிய இவர் எம். சி. ராஜாவிடம் பத்தாண்டுகள் தனிச் செயலாளராக வேலை பார்த்தார். 1946 தேர்தலில் வெற்றி பெற்று சென்னை மாகாணத்தின் சட்டமன்றக் கீழவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எப்ரல் 7, 1949 - ஏப்ரல் 9, 1952 காலகட்டத்தில் பி. எஸ். குமாரசுவாமிராஜா அமைச்சரவையில் காதி, குடிசைத் தொழில், மீன்வளம் மற்றும் அரிஜன நலத்துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார். 1952-54ல் சென்னை நகரின் மேயராகப் பணியாற்றினார். ஏப்ரல் 13, 1954 - மார்ச் 31, 1957 காலகட்டத்தில் காமராஜர் அமைச்சரவையில் போக்குவரத்து, அரிஜனர் நலம், இந்து அறநிலையத் துறைகளுக்கான அமைச்சராக இருந்தார். 1958-62ல் இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராகப் பணியாற்றினார். 1952 மற்றும் 1962 சட்டமன்றத் தேர்தல்களில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3][4][5][6][7][8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Who's who of Indian Parliament. Parliament Secretariat, India. 1958. p. 190.
  2. 1951/52 Madras State Election Results, Election Commission of India
  3. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2011-02-14.
  4. . V. Rama Rao, G. D. Binani (1954). India at a glance: a comprehensive reference book on India. p. 505.
  5. Justice Party golden jubilee souvenir, 1968. Justice Party. 1968. pp. 50–65. ISBN.
  6. "dated April 12, 1954: New Madras Cabinet". Archived from the original on ஜூலை 11, 2011. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 14, 2011. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  7. "A Review of the Madras Legislative Assembly (1952-1957)" (PDF). Archived from the original (PDF) on 2013-10-17. பார்க்கப்பட்ட நாள் 2011-02-14.
  8. Rajya Sabha biography
முன்னர் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1953
பின்னர்
ஆர். முனுசாமி பிள்ளை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._பரமேசுவரன்&oldid=3943902" இலிருந்து மீள்விக்கப்பட்டது