உள்ளடக்கத்துக்குச் செல்

பா. த. மிசுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால் தத் மிசுரா
2வது இலடாக்கின் துணைநிலை ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 பிப்ரவரி 2023
குடியரசுத் தலைவர்திரௌபதி முர்மு
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்இராதாகிருஷ்ண மாத்தூர்
19வது அருணாச்சலப் பிரதேச ஆளுநர்
பதவியில்
3 அக்டோபர் 2017 – 15 பிப்ரவரி 2023
முன்னையவர்பத்மநாபா ஆச்சாரியா
பின்னவர்கைவாலியா திரிவிக்ரம் பர்னாயக் (ஓய்வு)
மேகாலயா ஆளுநர்
(கூடுதல் பொறுப்பு)
பதவியில்
4 அக்டோபர் 2022 – 12 பிப்ரவரி 2023
முன்னையவர்சத்யபால் மாலிக்
பின்னவர்பாகு சொளகான்
மிசோரம் ஆளுநர்
(கூடுதல் பொறுப்பு)
பதவியில்
11 ஆகத்து 2021 – 5 நவம்பர் 2021
முன்னையவர்கம்பம்பதி அரி பாபு
பின்னவர்கம்பம்பதி அரி பாபு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 சூலை 1939 (1939-07-20) (அகவை 87)[1]
காதாதுதா, சந்து ரவிதாஸ் நகர் மாவட்டம், ஐக்கிய மாகாணம், இந்தியா (உத்தரப் பிரதேசம், இந்தியா)
துணைவர்நீலம் மிசுரா
பிள்ளைகள்1 மகன், 1 மகள்
இராணுவ சேவை
பற்றிணைப்புஇந்தியா
கிளை/சேவைஇந்தியத் தரைப்படை
சேவை ஆண்டுகள்1961 - 1995
போர்கள்/யுத்தங்கள்இந்திய சீனப் போர்,
இந்தியா-பாகிஸ்தான் போர், 1965 &
வங்காளதேச விடுதலைப் போர்

படைப்பகுதித் தலைவர், பால் தத் மிசுரா (B. D. Mishra) இந்தியத் தரைப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியும் தற்போது இலடாக்கின் துணைநிலை ஆளுநராகப் பதவி வகிப்பவரும் ஆவார்.[2][3] முன்னதாக அருணாச்சலப் பிரதேச ஆளுநர், மேகாலயா ஆளுநர், மிசோரம் ஆளுநர் பதவிகளை வகித்துள்ளார்.

பணி

[தொகு]

மிசுரா இந்தியத் தரைப்படையிலிருந்து 31 சூலை 1995 அன்று ஓய்வு பெற்றார். நிரந்தர வழக்கமான காலாட்படை அதிகாரியாக 17 திசம்பர் 1961 தொடங்கிய வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் சூலை 20,1939 இல் பிறந்தார்.

1993 ஏப்ரல் 24 அன்று அமிர்தசரசில் உள்ள ராஜா சான்சி வானூர்தி நிலையத்தில் கடத்தப்பட்ட இந்தியன் விமானச்சேவை வானூர்தியினைத் தாக்கி, மீட்பு நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்திய கருப்பு படையின் தளபதியாக மிசுரா பணியாற்றியுள்ளார். இந்த நடவடிக்கையில் 124 பயணிகளும் வானூர்தி பணியாளர்கள் அனைவரும் எந்த உயிரிழப்பும் சேதமும் இல்லாமல் மீட்கப்பட்டனர். இந்தக் கடத்தல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் மிசுரா ஆற்றிய பங்கிற்குப் பிரதமரின் பாராட்டு கிடைத்தது.

செயல்பாடுகள்

[தொகு]

மிசுரா பல்வேறு போர்கள், இந்திய அணிக்காகச் செயல்பட்டு பணியாற்றியுள்ளார்.

  • இந்தியா மீது சீனாவின் தாக்குதல் (1962)
  • நாகாலாந்தில் நாகா கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான பணி (1963-1964)
  • சியால்கோட் பகுதியில் பாக்கித்தானுக்கு எதிராக (1965)
  • வங்காளதேச விடுதலையில் பாக்கித்தானுக்கு எதிராக (1971)
  • பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாக்கித்தானுக்கு எதிராக, பட்டாலியன் தளபதியாக (1979-1981)
  • இலங்கை யாழ்ப்பாணத்திலும், வவுனியா, திருக்கோணமலை இந்திய அமைதி காக்கும் படை முன்னணிப் படைப்பிரிவு தளபதியாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக (1987-1988)
  • சம்மு-காசுமீர், பஞ்சாப் பயங்கரவாதிகளுக்கு எதிராக, என். எஸ். ஜி படைத் தளபதியாக
  • கார்கில் போரில் தன்னார்வத் தொண்டு, ஓய்வு பெற்ற பிறகு

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் துணிச்சலான இவருடைய பங்களிப்பிற்காக இவர் பாராட்டைப் பெற்றுள்ளார்.

கல்வி

[தொகு]

மிசுரா அலகாபாத் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் பட்டமும், குவாலியர் சிவாஜி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். மோவில் உள்ள போர்க் கல்லூரி, வெலிங்டனில் உள்ள இராணுவ அதிகாரிகளுக்கான கல்லூரியில் ஐந்து ஆண்டு முதுநிலை, பட்டதாரி நிலை கற்பித்தல் அனுபவம் பெற்றுள்ளார். இவர் முதுநிலை சட்டப் பட்டமும் பெற்றுள்ளார். தில்லி பல்கலைக்கழகத்தில் இளநிலைச் சட்டப் பட்டம் பெற்றார்.[4][5]

இராணுவ விருதுகள்

[தொகு]
பொது சேவை பதக்கம் 1947 சமார் சேவா நட்சத்திரம் கிழக்கு நட்சத்திரம் சிறப்பு சேவை பதக்கம்
ரக்ஷா பதக்கம் சங்க்ராம் பதக்கம் பராக்ரம் பதக்கம் சைன்யா சேவா பதக்கம்
25வது சுதந்திர தினப் பதக்கம் 30 ஆண்டுகள் சேவை பதக்கம் 20 ஆண்டுகள் சேவை பதக்கம் 9 ஆண்டுகள் சேவை பதக்கம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "His Excellency Brigadier (Dr.) B. D. Mishra... (Retd) (Governor of Arunachal Pradesh wef. 3rd October 2017)". Arunachal Pradesh Government. Retrieved 1 December 2018.
  2. ↑ "BD Mishra appointed as new lieutenant governor of Ladakh". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-02-12. Retrieved 2023-02-12.
  3. ↑ Desk, Web (23 September 2024). "I might be 85, but I will go to border with a gun to oppose China, says Ladakh LG". The Week. Retrieved 22 December 2024. {{cite web}}: |last= has generic name (help)
  4. ↑ "Who is B D Mishra?". 30 September 2017. Retrieved 30 September 2017.
  5. ↑ "President appoints new governors". 30 September 2017. Retrieved 30 September 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._த._மிசுரா&oldid=4389916" இலிருந்து மீள்விக்கப்பட்டது