பாஷாஇந்தியா
Appearance
பாஷாஇந்தியா இந்திய மொழிகளை இணையமூடாக தாய் மொழியூடாக ஒருங்குறியில் சரளமாகப் பாவிப்பதற்காக உதவியாக மைக்ரோசாப்டினால் உருவாக்கப்பட்டுப் பராமரிக்கப்படும் ஓர் இணையத்தளமாகும். இவ்விணையத்தளம் சாதாரண பாவனையாளர்கள் மற்றும் வல்லுனர்களுக்கு என்று இருபகுதிகளைக் கொண்டுள்ளது. இவ்விணையத்தளம் விவாதமேடைகளையும் கொண்டுள்ளது இது மொழிரீதியாகவும் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள பொதுவான விவாதங்களையும் கொண்டுள்ளது. பாஷாஇந்தியாவின் முயற்சியிலேயே வின்டோஸ் மொழி இடைமுகப் பொதி மற்றும் ஆபிஸ் தமிழ் மொழி இடைமுகப் பொதியாகியவை வெளிவந்தன.
இத்தளத்தில் கணினி உள்ளீடுக் கருவிகளுடன் ஆபிஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களுக்கான இடைமுகப் பொதிக்கான இணைப்புக்களையும் கொண்டுள்ளது.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- பாஷாஇந்தியா பரணிடப்பட்டது 2010-12-14 at the வந்தவழி இயந்திரம் (தமிழில்)
- அதிகாரப்பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2011-02-22 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)