பாவை பொறியியல் கல்லூரி
குறிக்கோளுரை | Prosper Excel Conquer |
---|---|
வகை | கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் |
உருவாக்கம் | 2001 |
தலைவர் | என். வி நடராசன் |
முதல்வர் | முனைவர் எம். பிரேம்குமார் |
பட்ட மாணவர்கள் | 1200 |
அமைவிடம் | , , |
வளாகம் | 12.18 ஏக்கர்கள் (0.0493 km2) |
இணையதளம் | pec |
பாவை பொறியியல் கல்லூரி (Paavai Engineering College) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், நாமக்கல்லில், உள்ள பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது 2001 இல் நிறுவப்பட்டது. இது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பாவை கல்வி நிறுவனங்களின் ஒரு பகுதியாக பாவை பொறியியல் கல்லூரி, பாவைய் தொழில்நுட்பக் கல்லூரி போன்றவை உள்ளன. இது தேசிய அங்கிகார வாரியத்தால் (என்பிஏ) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வரலாறு
[தொகு]பாவைய் பொறியியல் கல்லூரி 2001 இல் தொடங்கப்பட்டது. இக்கல்லூரியைத் தொடங்குவதற்கு முன்னர் பாவை கல்வி நிறுவனத்தால் 1998 இல் பாவை பல தொழில்நுட்பக் கல்லூரியானது தொடங்கப்பட்டது. பாவைய் பொறியியல் கல்லூரியின் முதல் தொகுதி மாணவர்கள் 2005 இல் வெளிவந்தனர். [1]
கல்வி
[தொகு]இக்கல்லூரியியல் பத்து இளநிலை துறைகள் உள்ளன அவை இளங்கலைப் பொறியியல் குடிசார் பொறியியல், கனிணி அறிவியல் பொறியியல், மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல், மின் மற்றும் மின்னணு பொறியியல், எந்திரவியல் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், வேளாண் பொறியியல், விண்வெளிப் பொறியியல், வேதிப் பொறியியல். [2] முதல் நான்கு படிப்புகள் என்பிஏ அங்கீகாரம் பெற்றவை. இங்கு வழங்கப்படும் முதுநிலை படிப்புகள், எம்.இ. கணினி அறிவியல், பொறியியல் வடிவமைப்பு, ஆற்றல் மின்னணு மற்றும் செயலி, பேரளவு ஒருங்கிணைச் சுற்று வடிவமைப்பு ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. மேலும் இக்கல்லூரியானது மாஸ்ர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் மற்றும் முதுநிலை வணிக மேலாண்மை போன்ற படிப்புகளை வழங்குகிறது.
இங்கு பயில 65% மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒற்றை சாளர முறை மூலம் சேர்க்கப்படுகின்றனர். மீதமுள்ளவர்கள் நுழைவுத் தேர்வுகள் (PEEE) மூலம் சேர்க்கப்படுகின்றனர். [ மேற்கோள் தேவை ]
காலக்கோடு
[தொகு]- 2008-இல் மூன்றாவது பட்டமளிப்பு நாள் விழா நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சி. சுப்பிரமணியம் கலந்து கொண்டார். [3]
- 2009-இல் 4 வது பட்டமளிப்பு விழா மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் விஐடி பல்கலைக்கழக அதிபர் கோ. விஸ்வநாதன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். [4]
- 2010-இல் 5 வது பட்டமளிப்பு விழா மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.தங்கராஜு, முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். பாவை கல்வி நிறுவனங்களின் முப்பெரும் விழா, பட்டமளிப்பு நாள் மற்றும் கலாச்சார விழா ஆகியவை கொண்டாடப்பட்டன. [5] குடிசார் பொறியியலாளர் சங்கம் (எஸ்.சி.இ) திறக்கப்பட்டது. [6] பாவை கல்வி குழும நிறுவனங்களில் முதுகலை பட்டப்படிப்பு பிரிவை கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் கே.கருணாகரன் திறந்து வைத்தார். [7]
- 2011-இல் 6 வது பட்டமளிப்பு விழா மார்ச் மாதம் நடைபெற்றது. திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழக அதிபரும், இந்திய ஜனநாயக்க கட்சி (ஐ.ஜே.கே) நிறுவனர் டி. ஆர். பச்சமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். [8] பிசினஸ்லைன் சங்கம் அக்டோபரில் தொடங்கப்பட்டது. [9]
- 2012-இல் கல்லூரியின் 11 வது ஆண்டு நாள் பிப்ரவரியில் ஏற்பாடு செய்யப்பட்டது. கவிஞர், சொற்பொழிவாளர் மற்றும் எழுத்தாளர் கபிலன் வைரமுத்து முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். [10] ஏழாவது பட்டமளிப்பு நாள் மே மாதம் நடைபெற்றது. சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். [11] [12]
- 2014-இல் 13 வது ஆண்டு பட்டமளிப்பு விழாவானது பிப்ரவரி 6 அன்று நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக கிரண் பேடி கலந்து கொண்டார்.
வேலைவாய்ப்பு
[தொகு]2006-2007 கல்வியாண்டில் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கையானது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தாதாக கல்லூரி தெரிவித்துள்ளது. [13] [14] 2006 சனவரியில், பாவை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு திருவிழா நடைபெற்றது, இதில் எம்ஃபாஸிஸ், ஹூரிக்ஸ் சிஸ்டம்ஸ், எச்.சி.எல், எஸ்பிஐ டெக்னாலஜிஸ் மற்றும் கேஜிஐஎஸ்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. [15] 2007 ஆம் ஆண்டில் வளாகத்தில் ஆட்சேர்ப்பு இயக்கத்தை நடத்திய ஒரு நிறுவனம் சென்னையைச் சேர்ந்த கேர் வோயன்ட் டெக்னாலஜிஸ் ஆகும். மேலும் பாவை கல்லூரியானது "find your own job program" என்று ஊக்குவிக்கிறது, அங்கு மாணவர் தங்களுக்கான வேலையைக் கண்ட்டைய வேண்டும். [16]
குறிப்புகள்
[தொகு]- ↑ [1] பரணிடப்பட்டது 10 சூலை 2012 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Paavai Engineering College Website". Archived from the original on 10 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 21 February 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ [2] பரணிடப்பட்டது 24 திசம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "'Enhance quality of school education'. | HighBeam Business: Arrive Prepared". Business.highbeam.com. 2009-03-29. Archived from the original on 2012-07-08. பார்க்கப்பட்ட நாள் 2012-07-07.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-03-29 இம் மூலத்தில் இருந்து 2010-04-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100408080134/http://www.hindu.com/edu/2010/03/29/stories/2010032950900200.htm.
- ↑ . 2010-08-16. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-educationplus/article573054.ece.
- ↑ காப்பகப்படுத்தப்பட்ட நகல். 2010-09-11. http://www.hindu.com/2010/09/11/stories/2010091151010300.htm. பார்த்த நாள்: 2019-09-06.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-03-06 இம் மூலத்தில் இருந்து 2011-03-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110309081323/http://www.hindu.com/2011/03/06/stories/2011030652270500.htm.
- ↑ . 2011-10-28. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2575992.ece?css=print/.
- ↑ . 2012-03-05. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-educationplus/article2961589.ece.
- ↑ . 2012-05-06. http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/article3389737.ece.
- ↑ . 2012-05-06. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3389751.ece.
- ↑ "Placement Record Engineering Colleges Campus Placement Information Technology Placement Training Emerging Technologies". winentrance.com. 2010. Archived from the original on 18 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 20 February 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2007-04-16 இம் மூலத்தில் இருந்து 2007-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070418070608/http://www.hindu.com/2007/04/16/stories/2007041608560100.htm.
- ↑ "Appointment letters given". Archived from the original on 2006-11-12. பார்க்கப்பட்ட நாள் 2019-09-06.
- ↑ "The Hindu : Education Plus Madurai : 'Develop skills in chosen domains' Campus Connect". hindu.com. 16 July 2007. Archived from the original on 5 நவம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 20 February 2011.