பாவா இலட்சுமணன்
பாவா இலட்சுமணன் (Bava Lakshmanan) என்பவர் இந்தியத் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.
தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்தவர் இலட்சுமணன். இவருக்கு வேண்டியவரான ஒருவர் அலைகள் ஓய்வதில்லை படத்தில் நாயகனாக நடிக்க சென்னைக்கு அழைத்துவந்தார். ஆனால் சிறுவன் போல இருந்ததால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.[1] இதனால் மதுரைக்குத் திரும்பிச் சென்ற இவர் சிலகாலம் கழித்து மீண்டும் படவாய்புக்காக சென்னைக்கு வந்து வீடுகளுக்கு வெள்ளையடிக்கும் வேலையைச் செய்து திரைப்பட வாய்ப்புகளையும் தேடிவந்தார். பிறகு திரைப்பட தயாரிப்பு மேலாளராக பல படங்களில் பணியாற்றினார். ஓரிரு படங்களில் சில காட்சிகளில் வந்துபோன நிலையில் மாயி படத்தில் இவர் வடிவேலுவுடன் நடித்து இவர் பேசிய வாம்மா மின்னல் என்ற காட்சியினால் பிரபலமானார்.[2] அடுத்து ஆனந்தம் படத்தில் திருடனாக வந்து வீட்டு வேலைக்காரனாக மாறும் பாத்திரம் இவருக்கு நல்ல பெயரைத் தேடித்தந்தது. அதன் பிறகு தயாரிப்பு மேலாளர் பணியை விட்டுவிட்டு முழுமையாக நடிப்பதில் கவனம் செலுத்தினார். அதன் பிறகு பல படங்களில் வடிவேலுவுடன் காட்சிகளில் நடித்தார்.
இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. நீரிழிவு நோய் பாதிப்பால் இவருக்கு கால் கட்டைவிரல் அகற்றப்பட்டது.[3]
நடித்த சில படங்கள்
[தொகு]- மாயி (2000)
- ஆனந்தம் (2001)
- ரோஜாக்கூட்டம் (2002)
- ஏப்ரல் மாதத்தில் (2002)
- அரசு (2003)
- காதல் சடுகுடு (2003)
- வின்னர் (2003)
- கோவில் (2004)
- பம்பரக்கண்ணாலே (2005)
- எல்லாம் அவன் செயல் (2008)
- மனுசனா நீ (2008)
- வெடி (2011)
- ஒஸ்தி (2011)
- கலகலப்பு (2012)
- பாண்டிய நாடு (2013)
- அதிபர் (2015)
- ஆவி குமார் (2015)
- கத்தி சண்டை (2016)
- வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் (2016)
- சரவணன் இருக்க பயமேன் (2017)
- போங்கு (2017)
- காத்திருப்போர் பட்டியல் (2018)
- டார்ச்லைட் (2018)
- ஓவியாவ விட்டா யாரு (2019)
- சத்ரு, (2019)
- பொட்டு (2019)
- தேன், (2021)
- ஈஸ்வரன், (2021)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bava Lakshmanan : Biography, Age, Movies, Family, Photos, Latest News" (in ஆங்கிலம்).
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ மலர், மாலை (2023-06-15). "பிரபல நகைச்சுவை நடிகர் பவா லட்சுமணன் கால் கட்டை விரல் அகற்றம்".
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ சர்பனா, வினி (2023-06-15). ""கட்டை விரலை எடுத்துட்டாங்க; பொண்டாட்டி, புள்ளகுட்டி இருந்திருந்தா..." - பாவா லட்சுமணன் வருத்தம்".
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help)