பாவக்காய் மண்டபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மதுரை சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாள் விழாவின் போது, மீனாட்சியம்மன், சொக்கநாதர், வில்லாபுரம் பாவாக்காய் மண்டபத்தில் எழுந்தருளி மக்களுக்கு அருள்பாளிக்கின்றனர்.

திருவிழாவின் நான்காம் நாள் காலையில் மீனாட்சியம்மன் கோயிலிருந்து, மீனாட்சியம்மனுடன், சோமசுந்தேரஸ்வர் தங்கபல்லக்கில் புறப்பட்டு, கிழக்கு சித்திரை வீதி, தெற்காவனி மூல வீதி, மறவர் சாவடி, சின்னக்கடைத் தெரு, தெற்கு வாசல் வழியாக வில்லாபுரத்தில் உள்ள பாவாக்காய் மண்டபத்தில் காலை பத்து மணிக்கு எழுந்தருளுகின்றனர்.

பாவாக்காய் மண்டகப்படியில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிசேகங்கள் முடிந்த பின் அழகிய பட்டுத் துணிகளால் அலங்கரிக்கப்படுகின்றனர். பின்னர் மாலையில் மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் மீண்டும் தங்கப்பல்லாக்கில் புறப்பட்டு, இரவு ஒன்பது மணிக்கு மீண்டும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எழுந்தருளுகின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படியில் இன்று சுவாமி, அம்மன் அருள்பாலிப்பு

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவக்காய்_மண்டபம்&oldid=2404412" இருந்து மீள்விக்கப்பட்டது