பால நாகம்மா (தெலுங்கு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால நாகம்மா
Bala Nagamma
இயக்கம்சி. புல்லையா
தயாரிப்புஎஸ். எஸ். வாசன்
கதைபாலஜுபாலி லட்சுமிகாந்த கவி
இசைஎம். டி. பார்த்தசாரதி
எஸ். ராஜேஸ்வர ராவ்
நடிப்புகாஞ்சனமாலா
கோவிந்தராஜூலு சுப்பா ராவ்
ஒளிப்பதிவுசைலென் போசு
பி. எஸ். இரங்கா
படத்தொகுப்புசந்துரு
என். கே. கோபால்
கலையகம்ஜெமினி ஸ்டூடியோஸ்
விநியோகம்ஜெமினி ஸ்டூடியோஸ்
வெளியீடு17 திசம்பர் 1942 (1942-12-17)(India)
ஓட்டம்220 நிமிடங்கள்
மொழிதெலுங்கு

பால நாகம்மா (Bala Nagamma) என்பது 1942ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை இயக்கியவர் சி. புல்லையா.இதனைத் தயாரித்தவர் சு. சீனிவாசன் எனப்படும் எஸ். எஸ். வாசன். பாலா நாகம்மா கதை மிகவும் பிரபலமான புர்ரகதாக்களில் ஒன்றாகும். தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட தெலுங்கில் ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரித்த வெற்றிகரமான ஆரம்பப் படங்களில் இதுவும் ஒன்று. ஜெமினி ஸ்டுடியோஸ் இப்படத்தை இந்தியில் மதுபாலா நடித்த பஹுத் தின் ஹுவே (1954) என்ற பெயரில் வெளியிட்டது.[1] இந்தப் படம் பின்னர் 1959-ல் வேதாந்தம் ராகவய்யாவின் இயக்கத்தில் அதே பெயரில் மீண்டும் தயாரிக்கப்பட்டது.

கதை[தொகு]

இத்திரைப்படத்தின் கதைப் பாலா நாகம்மா என்ற இளம் இளவரசியைப் பற்றியது. மன்னன் நவபோசராசாவின் இராணி பூலக்ஷ்மி, சந்ததிக்காக சடாங்கி முனியிடம் பிரார்த்தனை செய்து ஏழு குழந்தைகளைப் பெற்றாள். இவர்களில் இளையவரின் பெயர்ப் பாலா நாகம்மா (காஞ்சனமாலா). இவள் காரியவர்தி ராஜுவை (பண்டா) மணந்தாள். இவள் மாயலா மராத்தியால் (கோவிந்தராஜுல சுப்பாராவ்) கடத்தப்படுகிறாள். மாயலா மராத்தி பாலா நாகம்மாவை நாயாக மாற்றி, நகுல்லபுடி காட்டில் உள்ள தனது குகைக்கு அழைத்துச் செல்கிறான். அங்குச் சென்றதும், அவளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயல்கிறான். பாலா நாகாமமாவின் விரதம் (புனித சடங்குகள்) மற்றும் பூசைகளை மேற்கோள் காட்டி அவனை விலக்கி வைக்கிறாள். அவள் பதினான்கு வருடங்கள் குகையில் கைதியாக இருக்கிறாள். அந்த நேரத்தில் பகீரின் எஜமானி சங்கு (புஷ்பவல்லி) பொறாமைப்படுகிறாள். இதற்கிடையில், இவரது மகன் பாலவர்த்தி ராஜு வளர்ந்து, மாயலா பக்கீரின் கைதியாக நாகல்புடி காட்டில் தனது தாயார் இருப்பதைப் பற்றிய உண்மையைக் கண்டுபிடிக்கின்றார். பூ விற்கும் பெண்ணான தம்பாலி பெடி மூலம் தன் பேரனாகக் காட்டிக்கொண்டு பக்கீரைத் தேடுகிறான். பின்னர், அவர் பகீரைத் தோற்கடித்தார்.

நடிகர்கள்[தொகு]

ஆண் நடிகர்கள்[தொகு]

  • மயில மராத்தியாக மருத்துவர் கோவிந்தராஜுல சுப்பா ராவ்
  • பண்டா கனக லிங்கேஸ்வர ராவ், காரியவர்த்தி ராஜுவாக
  • நவபோஜ ராஜுவாக பலிஜேபள்ளி லட்சுமிகாந்த கவி
  • பாலவர்த்தி ராஜுவாக மாஸ்டர் விஸ்வம்
  • இராமவர்த்தி ராஜுவாக பொதிலா வெங்கட கிருஷ்ணமூர்த்தி
  • கோட்வால் ராம சிங்காக ரேலங்கி வெங்கட்ராமையா
  • சாகலி திப்புடாக லங்கா சத்தியம்
  • ஜோதிடராக வி. லட்சுமிகாந்தம்
  • நாகேந்திருடாக அட்டாலா நாராயண ராவ்
  • புலி ராஜுவாக கர்ரா சூர்யநாராயணா

நடிகைகள்[தொகு]

  • பாலநாகம்மாவாக காஞ்சனமாலா
  • இராணி சங்குவாக புஷ்பவல்லி
  • பூலட்சுமியாக பெல்லாரி லலிதா
  • மண்டுல மாணிக்யமாக கமலா தேவி
  • துர்காவாக சீதாபாயம்மா
  • சீதாலியாக ரத்னமாலா (சாகலி திப்புடுவின் மனைவி)
  • தம்பாலி பெடியாக அஞ்சனி பாய்
  • இளம் பாலநாகம்மாவாக சரஸ்வதி
  • இளம் சூர்யநாகம்மாவாக கமலா
  • தாசியாக கமலாகுமாரி

ஒலிப்பதிவு[தொகு]

இப்படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன.[2]

  1. "நா சொகசே கனி மருதே தாசுது கட" – புஷ்பவல்லி
  2. "நன்னா மேமு டெல்லி போதம்"
  3. "ஸ்ரீ ஜெய ஜெய கௌரி ரமணா" - பெல்லாரி லலிதா

வரவேற்பு[தொகு]

திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டோர் கையின் கூற்றுப்படி, பாலா நாகம்மா 40 இலட்சம் (US$50,000) (லாபம்) பெற்றது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Randor Guy (23 May 2003). "With a finger on people's pulse". தி இந்து இம் மூலத்தில் இருந்து. பரணிடப்பட்டது.. Error: If you specify |archiveurl=, you must also specify |archivedate=. https://web.archive.org/web/20030629133534/http://www.thehindu.com/thehindu/fr/2003/05/23/stories/2003052301510600.htm. பார்த்த நாள்: 3 May 2018. 
  2. "Lyrical details of Bala Nagamma at Ghantasala Galamrutamu". 18 April 2012. பார்க்கப்பட்ட நாள் 15 July 2021.
  3. Randor Guy (December 2008). "... And thus he made Chandralekha sixty years ago". Madras Musings XVIII இம் மூலத்தில் இருந்து 24 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130524070957/http://madrasmusings.com/Vol%2018%20No%2017/and_thus_he_made_chandralekha_sixty_years_ago.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால_நாகம்மா_(தெலுங்கு)&oldid=3811848" இலிருந்து மீள்விக்கப்பட்டது