பால தேவராயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பால தேவராய சுவாமிகள்
பிறப்புஅண். 1857
சமயம்இந்து சமயம்
தலைப்புகள்/விருதுகள்தமிழ்ப் புலவர்
தத்துவம்கௌமாரம்
குருதிருசிபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

பால தேவராய சுவாமிகள் என்பவர் ஒரு தமிழ்ப் புலவராவார். இவரது இயற்பெயர் தேவராயன் ஆகும். இவர் 1857 இல் தொண்டை மண்டலம் வல்லூரில் பிறந்தார்.[1][2] இவருடைய தந்தையார் வீரசாமிப்பிள்ளை பெங்களூரில் மைசூர் அரசரிடம் கணக்கர் (துபாஷ்) வேலை பார்த்தவர் என்று சில நூல்களில் குறிப்புகள் உள்ளன.[3] [4] தேவராய சுவாமிகள் தமிழின் மீது உள்ள ஆர்வத்தினால் திருவாவடுதுறை ஆதினத்தில் பெரும் புலவராகத் திகழ்ந்த திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் கீழ் தமிழ் பயின்றார்.[5] ஆனால் உ. வே. சாமிநாதையர் அவர்கள் எழுதிய மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வரலாற்றில் தேவராயர் இவரது மாணவர் என்பதற்கான குறிப்பு எதுவும் காணப்பெறவில்லை.[3] தணிகாசல மாலை, பஞ்சாக்ர தேசிகர் பதிகம், சேட மலை மாலை முதலிய நூல்களை தேவராயர் இயற்றினார் என்பர்.[5] இவர் இயற்றியவற்றுள் மிகவும் புகழ் பெற்றது கந்த சஷ்டி கவசம் ஆகும். இவர் இயற்றிய பிற கவசங்கள்: சிவ கவசம், சண்முக கவசம். சக்தி கவசம் மற்றும் நாராயண கவசம் ஆகும்.[6]

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "பால தேவராய சுவாமிகள்". தி இந்து, சூரசம்கார சிறப்பு மலர். அக்டோபர் 25 2017. 
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
  3. 3.0 3.1 "சஷ்டி கவசம் பிறந்த கதையை தெரிஞ்சுக்கோங்க!". ரா.கிருஷ்ணன். பார்த்த நாள் 26 திசம்பர் 2020.
  4. "பால தேவராய சுவாமிகள் [Bala Devaraya Swamigal]" (in en-IN). தி இந்து, சூரசம்கார சிறப்பு மலர் (The Hindu—Tamil). 25 October 2017. 
  5. 5.0 5.1 Alagesan, Serndanur Ramanathan (2013) (in ta, en). Skanda Shasti Kavacham (4th ). Sivakasi, Tamil Nadu: Nightingale. பக். 3, 10–11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-80541-08-2. 
  6. M. Arunachalam (2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு (Tamil Ilakkiya Varalaru, 12th century) (Volume 1) [Tamil]. Chennai: The Parker, Tamil Research and Publishing Group, Chennai. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால_தேவராயன்&oldid=3079378" இருந்து மீள்விக்கப்பட்டது