பால திரிபுரசுந்தரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பால திரிபுரசுந்தரி (Bālā Tripurasundarī) , குமாரிகா ('அற்புதமான தெய்வம்') அல்லது பாலா ('குழந்தை') எனவும் அழைக்கப்படும் ஒரு இந்து பெண் தெய்வமாகும். இவர், திரிபுரசுந்தரி மற்றும் காமேஸ்வர பகவான் (சிவன்) ஆகியோரின் மகளாக கருதப்படுகிறார். இவர், அசோக சுந்தரி தெய்வத்தின் ஒரு வடிவம் என நம்பப்படுகிறது.

இந்து இலக்கியங்களில் குறிப்புகள்[தொகு]

பிரம்மாண்ட புராணத்தில், உள்ள லலிதா மகாத்மியத்தின் 26 ஆம் அத்தியாயத்தில் பால திரிபுரசுந்தரி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், இவர் பாண்டாசுரனின் சக்திகளுக்கு எதிரான போரில் இணைகிறார்: [1]

புராணத்தில் பால திரிபுரசுந்தரி பற்றிய குறிப்பு[தொகு]

தைத்ய பாண்டாவின் மகன் கதுர்பாஹு என்பவர் திரிபுரசுந்தரியை எதிர்த்து போரிட வந்திருந்தார் என்று கேள்விப்பட்டதும், பாலா (லலிதாவின் மகள்) அதில் ஆர்வம் காட்டினார். இவர் லலிதா தேவியின் தங்க கவசத்திலிருந்து வந்தவர் என்கிற குறிப்பு இப் புராணத்தில் காணப்படுகிறது. மேலும், இவர் எப்போதும் தேவியின் அருகில் இருப்பவர் எனவும், எல்லா சக்திகளாலும் வணங்கப்படுவதற்கு தகுதியானவராகவும் இருந்தார். இவர் தற்காப்பு சாதனைகள் மற்றும் எதிரிகளை வெல்வதில் திறமையானவர். இவரது வடிவமும் அம்சங்களும் தேவி லலிதாவைப் போலவே இருந்தன. இவர், எப்போதுமே ஒன்பது வயதுப் பெண்ணைப் போலவே காட்சியளித்தார். இவரது உடல் உதய சூரியனைப் போல இருந்தது. இவர் எப்போதும் பெரிய தேவியான லலிதாவின் பாதத்திற்கு அருகே நிரந்தரமாக இருந்தார்.

இவரின் அன்னையாகிய லலிதா தெய்வத்தின் முக்கிய சுவாசமாகவும், அவரின் நான்காவது கண்ணாகவும் இருந்தார் என்பது போன்ற தகவல்கள் இந்த புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்னை லலிதா தேவிக்கும் பாலதிரிபுரசுந்தரிக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்களும் இப் புராணத்தில் காணப்படுகிறது.

உரையாடல்[தொகு]

அம்மா, பாண்டாசுரனின் மகன்கள், பெரிய தைத்யா, போர் செய்வதற்கு வந்திருக்கிறார்கள். நான் அவர்களுடன் போராட விரும்புகிறேன். நான் ஒரு இளம் பெண் என்பதால் இதில் ஆர்வமாக உள்ளேன். போரிடும் உணர்வோடு என் கைகள் துடிக்கின்றன. இது எனது விளையாட்டுத்தனமான செயல்பாடு ஆகும். தடைக்கான உங்கள் உத்தரவுகளால் அதைக் கட்டுப்படுத்தக்கூடாது. உண்மையில் நான் பொம்மைகளையும், விளையாட்டுத்தனமான பொழுது போக்குகளையும் விரும்பும் ஒரு பெண். ஒரு கணம் போராடும் இந்த நாடகத்தின் மூலம், நான் மனதளவில் மகிழ்ச்சியடைவேன். என்னை அசுரர்களை எதிர்த்து போரிட அனுமதியுங்கள் என்று பாலா தன் அன்னையிடம் வேண்டுகிறார்.

அன்புள்ள மகளே, உந்தன் கைகால்கள் மிகவும் மென்மையாகவும் இளமையாகவும் இருக்கின்றன. உனக்கு ஒன்பது வயதுதான் ஆகிறது. இது உந்தன் முதல் படி மற்றும் செயல்திறன்; மேலும், போரிடுவதில் உனக்கு பயிற்சி இல்லை. நீ என் ஒரே மகள். நீ இல்லாமல், என் சுவாச செயல்பாடு ஒரு கணம் கூட செல்லாது. நீ என் மிக முக்கியமான உயிர் மூச்சாக இருக்கிறாய். அதனால், அசுரர்களை அழிக்கும் பெரும் போருக்கு நீ செல்ல வேண்டாம். எங்களிடம் தந்திரிணி, மந்திரிணி மற்றும் கோடிக்கணக்கான பிற பெரிய சக்திகள் உள்ளனர். அதனால் மகளே, நீ ஏன் இந்த தவறு செய்கிறாய்? என இவரின் தாயான திரிபுரசுந்தரி பதில் கூறுவதாக புராணத்தில் உள்ளது.

குமாரிகாவின் போர்த்திறன்[தொகு]

ஆதி பராசக்தியான லலிதா தேவியால் இவ்வாறு தடுக்கப்பட்டாலும், சிறுமியான பாலாவின் ஆர்வத்தால் தாயார் அகமகிழ்ந்தார். அதனால், லலிதா தேவி, தனது கைகளில் இவரை நெருக்கமாகப் பிடித்தபின் இவருக்கு போர் செய்வதற்கு அனுமதி வழங்கினார். அவரின் கவசங்களில் ஒன்றை கழற்றி இவரிடம் கொடுத்தார். மேலும், அவருடைய ஆயுதங்களிலிருந்து, இவருக்கு தேவையான ஆயுதங்களைக் கொடுத்து, போருக்கு அனுப்பினாள். லலிதா தேவியின் சக்தியால் வரவழைக்கப்பட்ட ஒரு பல்லக்கில் குமாரிகா எனப்படும் பாலா போர்களத்தில் இறங்கினார். பண்டாசுர அரக்கனின் 30 மகன்களையும் இவர் போரில் கொன்றார்.

இந்து ஆன்மீகம் குறித்த சமீபத்திய புத்தகங்கள்[தொகு]

எழுத்தாளர் டேவிட் ஃப்ராவ்லி பால திரிபுரசுந்தரியை இவ்வாறு விவரிக்கிறார்: [2]

பால திரிபுரசுந்தரி பெரும்பாலும் பதினாறு வயதுடைய ஒரு பெண்ணாக குறிப்பிடப்படுகிறார். எனவே இவர் "பதினாறு" எனும் பொருளுடைய 'ஷோடாஷி' அல்லது "இளம்பெண்" என்பதைக் குறிக்கும் "பாலா" என்று அழைக்கப்படுகிறார். ஒரு பெண்ணின் வாழ்க்கையில், பதினாறு வயதிற்குரிய மகிழ்ச்சியான அம்சம் இந்த நூலில் குறிப்பிடப்படுகிறது. இளம் வயதிற்குரிய, விளையாடுவது, புதிய அனுபவங்களைத் தேடுவது, மற்றவர்களை அவரிடம் கவர்ந்திழுப்பது போன்றவை பாலாவின் இயல்பாக உள்ளது எனவும், இவருடைய அப்பாவித்தனம் அனைவரையும் இவரிடம் ஈர்க்கிறது எனவும் ஆசிரியர் கூறியுள்ளார். அது உண்மை மற்றும் நல்லதாக கருதப்படுகிறது. ஒரு இளம்பெண்ணாக, பால திரிபுர சுந்தரி, இளம் ஆர்வலரை சரியான பாதையில் வழிநடத்துகிறார் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

கர்நாடக இசையில் பால திரிபுரசுந்தரி[தொகு]

மண்டேரி ராகத்தில் கல்யாணி வரதராஜன் என்பவர் பால திரிபுரசுந்தரி குறித்து பாடல்கள் எழுதியுள்ளார்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Shastri, J.L.: "The Brahmanda Purana - Part IV" pages=1174-1175. Motilal Barnasidass Publishers, reprint 1999
  2. Frawley, David: "Tantric Yoga and the Wisdom Goddesses", page 90. Motilal Banarsidass Publishers, reprint 2005

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால_திரிபுரசுந்தரி&oldid=2913430" இருந்து மீள்விக்கப்பட்டது