உள்ளடக்கத்துக்குச் செல்

பால் வெய்ஸ் (கணிதவியலாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால் வெயிஸ்
படிமம்:Paul weiss.jpg
பிறப்பு (1911-04-09)ஏப்ரல் 9, 1911
சாகன், செருமானியப் பேரரசு
இறப்புசனவரி 19, 1991(1991-01-19) (அகவை 79)
டிட்ராயிட், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
குடியுரிமைசெருமானிய மற்றும் பிரிட்டீஸ்
துறைகணித இயற்பியல்
Alma materகோட்டிங்கன் பல்கலைக்கழகம்
துறை ஆலோசகர்மாக்ஸ் போர்ன், பால் டிராக்

பால் வெயிஸ் (ஏப்ரல் 9, 1911 – ஜனவரி 19, 1991)என்பவர், ஜெர்மன் மற்றும் பிரித்தானிய நாடுகளைச் சேர்ந்த கணித மற்றும் கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார், இவர் நியமன குவாண்டமாக்கல் துறையின் முன்னோடி என கருதப்படுகிறார்.[1]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

பால் வெயிஸ் சிலேசியாவின் (தற்போதைய போலந்து நாட்டில் உள்ள) ஜெர்மன் பகுதியான சாகனில் பணக்கார யூத தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்தவர்.1929-1933 ஆம் ஆண்டுகளில் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுள்ளார், 1930-31 கல்வியாண்டில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பாரிஸ் மற்றும் சூரிச்சிலும் சில காலம் படித்துள்ளார். 1936 ஆம் ஆண்டில் "பல தொகையீடுகளுக்கான மாறுபாடுகளின் கால்குலஸில் இணை மாறிகளின் கருத்து மற்றும் புல இயற்பியலின் குவாண்டமயமாக்கலுக்கான அதன் பயன்பாடு" என்ற ஆய்வறிக்கையுடன் இவர் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

1941 ஆம் ஆண்டில், வெஸ்ட்ஃபீல்ட் கல்லூரியில் பயன்பாட்டு கணிதத்தில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்ட இவர், 1950 வரை அங்கு பணிபுரிந்துள்ளார். ஆகஸ்ட் 1946 இல், விஞ்ஞானி குடியுரிமைக்கு விண்ணப்பித்ததன் அடிப்படையில், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல், பிரித்தானிய குடிமகனானார். 1950-51 ஆம் ஆண்டில் அவர் பிரின்ஸ்டனில் உள்ள மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். 1957 வரை ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் பயன்பாட்டுக் கணிதவியலாளராகப் பணியாற்றியுள்ளார். இந்த நேரத்தில் அவரது பணிகளில் ஒன்று வணிக சிக்கல்களைத் தீர்க்க செயல்பாட்டு ஆராய்ச்சி முறைகளைப் பயன்படுத்துவதாகும். 1958-1960 ஆண்டுகளில், டெட்ராய்டில் உள்ள வெய்ன் மாநில பல்கலைக்கழகத்தின் கணித பீடத்தில் சேருவதற்கு முன்பு, ஏவியேஷன் கார்ப்பரேஷனில் பணிபுரிந்தார், இங்கு இவர் 1991 ஆம் ஆண்டு இறக்கும் வரை பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rickles, Dean; Blum, Alexander (6 October 2015). "Paul Weiss and the genesis of canonical quantization". European Physical Journal H 40 (4–5): 469–487. doi:10.1140/epjh/e2015-60001-5. Bibcode: 2015EPJH...40..469R.