பால் போர்மாரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பால் பிரெடெரிக் யோசப் போர்மாரியர் (Paul Frédéric Joseph Fourmarier) பெல்சியம் நாட்டைச் சேர்ந்த ஒரு புவியியலாளர் மற்றும் கண்டத்தட்டு இயக்கவியல் நிபுணரும் ஆவார்[1]. இவர் 1877 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் பிறந்தார். போர்மாரியரைட்டு என்ற கனிமம் இவரால் கண்டுபிடிக்கப்பட்டு இவரது பெயரே சூட்டப்பட்டது[2]. பெல்சியம் நாட்டின் பிராபண்டு மாகாணத்திலுள்ள லா அல்பே நகராட்சியில் பிறந்தார்[1]. 1899 ஆம் ஆண்டு இலீக் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இதே பல்கலைக்கழகத்தில் 1920 ஆம் ஆண்டு நிலவியல் பேராசிரியராக பணியாற்றினார். நிலவியலின் மடிப்பு கட்டமைப்புகள் மற்றும் பிளவு பற்றிய ஆய்வுகளில் இவர் நிபுணத்துவம் பெற்றார். அங்கிருந்த கானக மண்டலத்தின் மிகையமுக்க மலைத்தொடர்கள் குறித்து விவரித்தார்[1].1957 ஆம் ஆண்டு வொல்லாசுட்டன் பதக்கத்தையும்[3] 1952 ஆம் ஆண்டு பென்ரோசு தங்கப் பதக்கத்தையும் போர்மாரியர் வென்றார்.[4]. 1970 ஆம் ஆன்டு சனவரி மாதம் 20 ஆம் நாள் இவர் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Fourmarier, Paul Frédéric Joseph". TheFreeDictionary. 15 May 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Fourmarierite Mineral Data". webmineral.com. 15 May 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Geological Society medal winners". The Geological Society of London. 19 ஆகத்து 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 மே 2012 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Penrose Gold Medal". Society of Economic Geologists. 28 திசம்பர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 மே 2012 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_போர்மாரியர்&oldid=2942810" இருந்து மீள்விக்கப்பட்டது