பால் டேனியல் தினகரன்
பால் டேனியல் தினகரன் பிரேம்குமார் | |
|---|---|
| தலைமை நீதிபதி, சிக்கிம் உயர் நீதிமன்றம் | |
| பதவியில் 8 ஆகஸ்டு 2008[1] – 29 சூலை 2011[2] | |
| பரிந்துரைப்பு | இந்தியக் குடியரசுத் தலைவர் |
| முன்னையவர் | பரின் கோஷ் |
| பின்னவர் | பிரமோத் கோக்லி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 9 மே 1950[3] அரக்கோணம், தமிழ்நாடு |
பால் டேனியல் தினகரன் பிரேம்குமார் (சுருக்கமாக:பி. டி. தினகரன்) (Paul Daniel Dinakaran Premkumar) (பிறப்பு: 9 மே 1950), இந்தியாவின் சிக்கிம் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 8 ஆகஸ்டு 2008 முதல் 29 சூலை 2011 வரை பணியாற்றியவர். இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு, 218ன் கீழ் நாடாளுமன்றத்தின் பதவி நீக்க நடவடிக்கைக்கு முன்னரே 29 சூலை 2011 அன்று பதவி விலகியவர்.[4][2]
ஊழல், நில அபகரிப்பு மற்றும் நீதித்துறை பதவியை தவறாக பயன்படுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், சிக்கிம் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.டி. தினகரன் எனும் பால் டேனியல் தினகரன் பிரேம்குமாருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மாநிலங்களவை தலைவரால் ஒரு நீதித்துறை குழு அமைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எதிராகப் பதவி நீக்க நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பே சூலை 2011-ல் பதவி விலகினார்.
இளமை & கல்வி
[தொகு]தலித் குடும்பத்தில் தற்கால வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் பிறந்தவர் பால் டேனியல் தினகரன்.[5]பள்ளிப்படிப்பை முடித்த பால் தினகரன் சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். பின் அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாம் குறித்த படிப்பில் முதுகலை பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டம் பயின்றார்.[3]
தொழில்
[தொகு]சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு சட்டப்பணி ஆற்றினார். படிப்படியாக பால் டேனியல் தினகரன் உயர் நீதிமன்ற நீதிபதி பதவியை அடைந்தார். ஆகஸ்டு 2009ல் பால் டேனியல் தினகரன் கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியில் இருக்கையில், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக விடுப்பில் செல்ல உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியால் பணிக்கப்பட்டார்.[6]
ஏப்ரல் 2010ல் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு, 218ன் கீழ் நீதிபதி பால் டேனியல் தினகரனை பதவி நீக்க நடவடிக்கை நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர் கே. ஜி. பாலகிருஷ்ணன் நீதிபதி பால் டேனியல் தினகரனை சிக்கிம் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்தார்[7][8].
பதவி விலகல்
[தொகு]இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு, 218ன் கீழ் ஊழல் மற்றும் நீதித்துறை முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிபதி பால் டேனியல் தினகரன் நாடாளுமன்றத்தின் பதவி நீக்க நடவடிக்கைகளை எதிர்கொண்டு வந்த நிலையில், 2011ஆம் ஆண்டு சூலை 29 அன்று நீதிபதி பால் டேனியல் தினகரன் சிக்கிம் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியில் இருந்து பதவி விலகினார்.[2]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "PD Dinakaran sworn in as Karnataka CJ".
- ↑ 2.0 2.1 2.2 "I am a victim of politics and legal system: Justice Dinakaran". The Times of India. 30 July 2011. http://economictimes.indiatimes.com/news/politics/nation/i-am-a-victim-of-politics-and-legal-system-justice-dinakaran/articleshow/9423077.cms.
- ↑ 3.0 3.1 "Profile of Paul Daniel Dinakaran on Karnataka High Court website". Archived from the original on 23 செப்டெம்பர் 2009.
- ↑ Number of Times Impeachment Proceedings were Initiated against a SC or HC Judge
- ↑ "Dinakaran targeted for being a South Indian and a Dalit". The Indian Express (in ஆங்கிலம்). 2009-09-23. Retrieved 2020-06-02.
- ↑ "SC asks Karnataka Chief Justice Dinakaran to go on leave". The Times of India. 3 April 2010. http://timesofindia.indiatimes.com/india/SC-asks-Karnataka-Chief-Justice-Dinakaran-to-go-on-leave/articleshow/5756749.cms.
- ↑ Mahapatra, Dhananjay (10 April 2010). "Dinakaran to go to Sikkim, protests begin". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Dinakaran-to-go-to-Sikkim-protests-begin/articleshow/5779584.cms.
- ↑ Paul Dinakaran to go to Sikkim, protests begins