பால் டானோ
பால் டானோ | |
---|---|
![]() | |
பிறப்பு | பால் பிராங்க்ளின் டானோ சூன் 19, 1984 நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1996–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஜோ கசான் |
பிள்ளைகள் | 1 |
பால் பிராங்க்ளின் டானோ (ஆங்கில மொழி: Paul Franklin Dano)[1] (பிறப்பு: சூன் 19, 1984) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 2000 ஆம் ஆண்டில் தி நியூகமர்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகும் முன் பிராடுவே என்ற நாடக அரங்கத்தில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.
2001 இல் எல்.ஐ.இ.[2]என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிப்புக்கான இன்டிபென்டன்ட் ஸ்பிரிட் விருதை வென்றார். 2006 இல் லிட்டில் மிஸ் சன்ஷைன் என்ற படத்தில் டுவைன் ஹூவர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார். அதை தொடர்ந்து 2007 இல் தேர் வில் பி ப்ளட் என்ற திரைப்படத்தில் பால் மற்றும் எலி போன்ற இரட்டை வேடங்களில் நடித்ததற்காக இவர் சிறந்த துணை நடிகருக்கான பாஃப்டா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இதை தொடர்ந்து 12 இயர்ஸ் எ சிலேவ் (2013), லவ் அண்ட் மெர்சி (2015), தி பேட்மேன்[3][4] (2022) போன்ற பல திரைப்படங்களில் துணைக்கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
டானோ சூன் 19, 1984 இல் நியூயார்க் நகரில் ஒரு இல்லத்தரசியான கிளாடிஸ் (நீ பிப்) மற்றும் நிதி ஆலோசகரான பால் ஏ. டானோ ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[5] இவருக்கு சாரா என்ற தங்கை உண்டு.[6][7] இவர் தனது குழந்தைப் பருவத்தின் முதல் சில ஆண்டுகளை நியூயார்க் நகரில் கழித்தார் மற்றும் ஆரம்பக்கல்வியை பிரவுனிங் பள்ளியில் பயின்றார். இவரது குடும்பம் இவர் குழந்தையாக இருந்தபோது நியூ கானானுக்கு குடிபெயர்ந்தது, இறுதியாக கனெக்டிகட்டின் வில்டனில் குடியேறியது. அதை தொடர்ந்து வில்டன் உயர்நிலைப் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார், 2002 இல் பட்டம் பெற்றார் மற்றும் நியூயார்க் நகரத்தில் உள்ள யூஜின் லாங் கல்லூரியில் பயின்றார்.[8]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Cammila Collar (2015). "Paul Dano - Biography". The New York Times. https://www.nytimes.com/movies/person/1548294/Paul-Dano/biography.
- ↑ Blunt, Emily. "Stephen Ryder Tells A Lie". Blunt Review இம் மூலத்தில் இருந்து மே 28, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080528233847/http://www.bluntreview.com/reviews/ryder.htm.
- ↑ "'The Batman' Casts Paul Dano as the Riddler". October 17, 2019. https://www.hollywoodreporter.com/heat-vision/batman-casts-paul-dano-as-riddler-1248494.
- ↑ "Paul Dano to Write The Riddler in a New DC Black Label Limited Series!" (in en). 2022-03-18. https://www.dccomics.com/blog/2022/03/18/paul-dano-to-write-the-riddler-in-a-new-dc-black-label-limited-series.
- ↑ Keegan, Rebecca (March 2, 2022). "Paul Dano on His Terrifying Batman Villain and Why He's No Longer Scared of Going Hollywood". https://www.hollywoodreporter.com/movies/movie-features/paul-dano-the-batman-riddler-the-fabelmans-1235101919/.
- ↑ "Spotlight again on Wilton's Paul Dano". The Hour. 2008-03-05. https://www.thehour.com/norwalk/article/Spotlight-again-on-Wilton-s-Paul-Dano-8280423.php.
- ↑ "'Ruby Sparks' Paul Dano chills out in Pennsylvania". Morning Call. 2012-07-26. https://www.mcall.com/entertainment/mc-xpm-2012-07-26-mc-movies-paul-dano-ruby-sparks-20120726-story.html.
- ↑ "Fair Game – Paul Dano". Public Radio International. http://www.publicbroadcasting.net/fairgame/.jukebox?action=viewMedia&mediaId=665825/.[தொடர்பிழந்த இணைப்பு]