பால் டப்பா
பால் டப்பா | |
---|---|
இயற்பெயர் | அனிஷ் |
பிற பெயர்கள் | பால் டப்பா |
பிறப்பு | சனவரி 17, 2000 |
இசை வடிவங்கள் | ஹிப் ஹாப், பாப் |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடனக்காரர், நடன அமைப்பாளர் |
வெளியீட்டு நிறுவனங்கள் | திங் மியூசிக் இந்தியா |
பால் டப்பா (Paal Dabba, பிறப்பு: 17 ஜனவரி 2000), சென்னையைச் சேர்ந்த ஒரு சொல்லிசைப் பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குனர் ஆவார்.[1] இவருடைய இயற்பெயர் அனிஷ் என்பதாகும். 170CM, கலாட்டா, மக்காமிஷி, ஓ மாறா போன்ற பாடல்களுக்காக மிகவும் பிரபலமானவர்.[2]
இளமைக்காலம்
[தொகு]அனிஷ் சென்னையில் உள்ள புளியந்தோப்பில் பிறந்தார். பின்னர், வியாசர்பாடிக்குக் குடிபெயர்ந்தார். இசைத் துறைக்கு வருவதற்கு முன்பு இவர் ஒரு தொழில்முறை நடனக் கலைஞராக இருந்தார். Bfab என்னும் நடனக் குழுவின் ஒரு உறுப்பினராக, பல்வேறு நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ப்ரீசர் விவிட் ஷஃபிள் 2019 போன்ற தேசிய அளவிலான போட்டிகளிலும் வென்றார்.[3] இதன் பிறகு, சொல்லிசைப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். இவருக்குக் குளிர்ந்த பால் மிகவும் பிடிக்கும் என்பதால், அதையே அடிப்படையாகக் கொண்டு "பால் டப்பா" என்ற பெயரில் பாடலானார்.
பாடல்கள்
[தொகு]தலைப்பு | ஆண்டு | வகை |
---|---|---|
3SHA | 2022 | தனிப்பாடல் |
ஐ. | ||
ஹிஸ் நேம் இஸ் ஜான் (துருவ நட்சத்திரம்) | 2023 | திரைப்படம் |
காட்டு பயபுள்ள (Let's Get Married) | ||
170CM | தனிப்பாடல் | |
SAB | ||
பிஞ்ச் அண்ட் கிரிஞ்ச் | 2024 | |
கலாட்டா (ஆவேஷம்) | திரைப்படம் | |
OCB | தனிப்பாடல் | |
காத்து மேல | ||
மக்காமிஷி (பிரதர்) | திரைப்படம் | |
God Bless U (குட் பேட் அக்லி) | 2025 | |
ஓ மாறா (ஃப்ரம் தக் லைஃப்) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Iyengar, Mahalaxmi (2019-06-03). "From Chennai streets to World of Dance" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/entertainment/dance/from-chennai-streets-to-world-of-dance/article27414750.ece.
- ↑ "Paal Dabba – Future of Music". Rolling Stone India (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-08-23.
- ↑ Sudeep, Theres. "Popular dance crew wins hiphop event". Deccan Herald (in ஆங்கிலம்). Retrieved 2024-08-24.