பால் காய்ச்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கழுத்து வளைந்த மாடு

பால் காய்ச்சல் (Milk fever) ஒரு கால்நடை நோய். அதிகப் பால் உற்பத்தி செய்யும் கறவை மாடுகள் கன்று ஈன்ற 2-3 நாட்களில் பால் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றன. இது கன்று ஈனுவதற்குச் சற்று முன்னும் அல்லது உச்சகட்ட பால் உற்பத்தியை அடையும் நேரத்திலும் உண்டாகலாம். இரத்தத்தில் சுண்ணாம்புச் சத்து குறைந்து உடலின் தசைகள் பாதிக்கப்படுவதால் பால் காய்ச்சல் உண்டாகிறது.

அறிகுறிகள்[தொகு]

மாடுகளில் காய்ச்சல் இருக்காது உடல் வெப்பம் குறைந்து காணப்படும். மாடுகள் தீவனம் உட்கொள்ளாது. காதுகள், மடி, கால்கள் குளிர்ந்து காணப்படும். நடையில் தடுமாற்றம், தரையில் விழுந்து அதன் கழுத்தை வயிற்றுப்பக்கமாகத் திருப்பி வைத்திருத்தல் அல்லது நீட்டி வைத்திருத்தல் கழுத்தை நேராக இருக்குமாறு சரிசெய்தாலும் மீண்டும் வளைத்துத் திருப்பிக் கொள்ளும். மூச்சுத் திணறல் காணப்படும்.

தடுப்பு முறை[தொகு]

பருவ நிலைக்கேற்றவாறு மாடுகளை சிறிது நேரம் வெயிலில் இருக்க வைக்கலாம். சுண்ணாம்பு மற்றும் மணிச்சத்து (பாஸ்பரஸ்) நிறைந்த தீவனத்தைக் கன்று ஈனும் ஒரு மாத காலத்திற்கு முன்னிருந்து அளித்தால் பால் காய்ச்சலைத் தவிர்க்க உதவும். காயவைத் புல் மற்றும் தீவனப் பயிர்களை அளிப்பது பலன் தரும்.

சிகிச்சை[தொகு]

கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் சில மணி நேரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

துணை நூல்கள்[தொகு]

1. கறவை மாடுகள் பராமரிப்புக் கையேடு, தேசிய பால்வளத்துறை, ஆனந்த்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_காய்ச்சல்&oldid=2245431" இருந்து மீள்விக்கப்பட்டது