உள்ளடக்கத்துக்குச் செல்

பால்வழி-அந்திரொமேடா மோதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பால்வழி-அந்திரொமேடா மோதல் (Andromeda–Milky Way collision) என்பது கிட்டத்தட்ட 4 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் என்று நம்பப்படும் ஒரு பேரடை மோதல் நிகழ்வாகும்.[1][2] இதன்படி 4 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு உட் குழுவில் உள்ள பால் வழி மற்றும் அந்திரொமேடா பேரடை போன்ற இரு விண்மீன் பேரடைகள் மோதி குழைந்து ஒன்றாகிவிடும். ஒவ்வொரு பேரடைக்கும் 100 மில்லியன் ட்ரில்லியன் மோதும் வாய்ப்புகள் உள்ளன.

விண்மீன்சார் மோதல்கள்

[தொகு]

அந்திரொமேடா பேரடை கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் (1012) விண்மீன்களையும், மானிடர் வாழும் புவி இருக்கும் பால் வழி 300 பில்லியன் (3x1011) விண்மீகளையும் கொண்டுள்ளன. விண்மீன்களுக்கிடையேயான தூரம் மிக அதிகமாக இருப்பதால் இரண்டு விண்மீன்களே ஒன்றுடன் ஒன்று மோதுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகும். எடுத்துக்காட்டாக, சூரியனுக்கு மிகக் கிட்டவாக உள்ள புரோக்சிமா செண்ட்டாரி என்ற விண்மீன் கிட்டத்தட்ட 3x107 சூரிய விட்ட (4x1013 கிமீ அல்லது 4.2 ஒஆ) தூரத்தில் அமைந்துள்ளது. விண்மீன் பேரடையின் நடுப்பகுதியில் உள்ள விண்மீன்கள் மிகவும் அடர்த்தி அதிகமாக இருந்தாலும், விண்மீன்களுக்கு இடையேயான சராசரியான தூரம் 1.6x1011 கிமீ ஆகும். இது கிட்டத்தட்ட 3.2 கிமீ தூர இடைவெளிகளில் உள்ள இரண்டு மேசைப்பந்துகளைப் போன்றதாகும். இதனால் இரண்டு விண்மீன்கள் மோதும் சாத்தியம் இல்லை என்றே கருதப்படுகிறது.


கருந்துளை மோதல்

[தொகு]

இந்த இரு பேரடைகளிலும் மத்தியில் கருந்துளை உள்ளது. இது இந்த மோதல் நிகழ்வின் விளைவாக ஒன்றிணையும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hazel Muir, "Galactic merger to 'evict' Sun and Earth," New Scientist 4 May 2007 பரணிடப்பட்டது 2008-10-10 at the வந்தவழி இயந்திரம்
  2. Astronomy, சூன் 2008, பக். 28, Abraham Loeb and T. J. Cox