பால்வண்ணம் பிள்ளை (சிறுகதை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பால்வண்ணம் பிள்ளை, புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை. புதுமைப் பித்தனின் சிறுகதைகள் பொழுதுபோக்குப் புனைவு வகையைச் சேர்ந்தவை அல்ல. அவை ஒவ்வொன்றும் சமுதாயப் பிரச்சனைகளை முன்னிறுத்தி அவரது நகைச்சுவையானச் சாடலுடன் அமைந்தவை. இச்சிறுகதையும் ’பால்வண்ணம் பிள்ளை’ என்ற தனி மனிதனிரின் வாழ்க்கையின் சிலநாள் நிகழ்வுகளை அடிப்படைப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.


கதைச் சுருக்கம்[தொகு]

பால்வண்ணம் பிள்ளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர். கையில் மூன்றும் வயிற்றில் ஒன்றுமாக அவரது சந்ததிகள் நான்கு. 35 ரூபாய் மாத வருமானத்துக்காக பயமும் பணிவுமான உழைப்பு. ஆனால் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று சொல்லக்கூடிய வீண்பிடிவாதத்துடன் அலுவலகத்தில் பசுவாகவும் வீட்டில் ஹிட்லராகவும் இருந்தார். ஒருநாள் அலுவலகத்தில் மெக்சிகோ எங்குள்ளது என்பது குறித்து அவருக்கும் உடன் வேலை பார்க்கும் மற்றொருவருக்குமிடையே ஒரு சின்ன வாக்குவாதம். இவர் தென்னமெரிக்காவில் என்று சொல்ல, மற்றொருவர் புவி வரைபடத்தில் அது வட அமெரிக்காவில் உள்ளது என்றார். வீடு திரும்பிய அவர் வீட்டில் அவர் பள்ளியில் படிக்கும்போது பயன்படுத்திய புவிவரைபடப் புத்தகத்தைத் தேடி எடுத்து தனது கருத்துக்குச் சான்று தேட, அதில் மெக்சிகோ வட அமெரிக்காவில் இருந்தது. அவ்வளவுதான், அவரது கோபம் மனைவியின் மேல் பாய்ந்தது.

அந்த சமயம் பார்த்து, குழந்தைகளின் பால் கணக்கு மாதம் நான்கு ரூபாய்க்கு மேல் ஆனதால், ஒரு மாடு வாங்கிவிட்டால் நல்லது என எண்ணிய அவரது மனைவி அவரிடம் மாடு வாங்க சம்மதம் கேட்கப்போக, ”மாடு கீடு வாங்க முடியாது என் புள்ளையெ நீச்சுத்தண்ணியை குடிச்சு வளரும்” என்று சொல்லிவிட்டார்.

மனது கேட்காத அவரது மனைவி தனது கையில் கிடந்த காப்பை விற்று ஒரு மாடு வாங்கிவிட, பால்வண்ணம் பிள்ளை, தனது வீண் கோபத்தால் அம்மாட்டை என்ன செய்தார் என்பதுதான் கதையின் முடிவு.

குறிப்பிடத்தக்க பகுதிகள்[தொகு]

நடுத்தர மக்களின் வாழ்வின் அவலமும், அறியாமையும். அதன் விளைவும் கேலியான நகைச்சுவையாகச் சொல்லப்பட்டுள்ளது போல மேலோட்டமாகத் தோன்றினாலும் சமுதாய நிலை குறித்த கருத்துக்கள் முன்னிலைப்படுத்தப் படுகின்றன.

கதையின் சில பகுதிகள்:

பால்வண்ணம் பிள்ளை[தொகு]

குடும்பம்[தொகு]

மனைவி[தொகு]

குழந்தைகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]