பால்மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
   இம்மீன் சானஸ் சானஸ் என்ற இனத்தைச் சேர்ந்தது. இம்மீன் துள்ளுகெண்டை எனவும் அழைக்கப்படுகிறது. இது ஒரு நளினமான உடல் உருவம் கொண்ட மீனாகும். இவை பொதுவாக வேகமான வளர்ச்சியைப் பெற்று சுமார் 1.5 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது.

உடல் அமைப்பு[தொகு]

   உடலானது சிறிய வழவழப்பான செதில்களால் மூடப்பட்டிருக்கும். வாய் சிறியதாகவும் பற்கள் அற்றும் காணப்படும். முன்முகத்தின் மேலும் கண்ணின் அண்மையிலும் ஒரு செறிந்த கூழ் போன்ற பொருள் படர்ந்து இருக்கும். முதுகு சற்று வளைந்தும், ஒற்றைத் துடுப்புடனும் காணப்படும். வால்துடுப்புப் பெரியதாகவும், ஆழ பிளவுபட்டும் இருக்கும். இம்மீன்கள் வெள்ளி மயமாக காணப்படுகிறது. கடலிலிருந்து பிடிபட்ட மீன்கள் முதுகின் மேல் பளிச்சென்ற நீல நிற பளபளப்பைப் பெற்றிருக்கின்றன. ஆனால் மீன்கள் இறந்த பின்னர் அந்நீலநிறம் மறைந்து விடுகின்றது. 

உணவு மற்றும் வாழிடம்[தொகு]

   பால் கெண்டை மீன்கள் மிதவை உயிரிகளையும், கடல் பாசிகளையும் உட்கொள்கிறது. இது கழிமுகம் மற்றும் உப்புநீர் நிலைகளில் ஆழமற்ற பகுதிகளில் காணப்படும் ஓர் பொதுவான கடல் மீன் ஆகும்.வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பின்னர் இம்மீனின் இளம் உயிரிகள் ஆறுகளையும், கழிமுகங்களையும் சென்றடைகின்றன. வளர்ச்சியுற்ற மீன்கள் திறந்த கடல்வெளியில் வாழ்கிறது. இவை வேகமாக நீந்தும் ஆற்றல் படைத்தவை. இது அவ்வப்போது நீரிலிருந்து காற்று வெளியில் துள்ளுவதைக் காணலாம். [1]

மேற்கோள்கள்[தொகு]

 1. ரெங்கராஜன், இரா.(2008), மீனின உயிரியல் மற்றும் நீரின வளர்ப்பு, சாரதா பதிப்பகம், சென்னை, ப. 98, 99.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்மீன்&oldid=2385583" இருந்து மீள்விக்கப்பட்டது