பால்மர் லாரி
கொல்கத்தாவிலுள்ள பால்மர் லாரி நிறுவனத்தின் தலைமையகம் | |
| வகை | பொதுத்துறை நிறுவனம் |
|---|---|
| நிறுவனர்(கள்) | ஸ்டீபன் ஜார்ஜ் பால்மர் அலெக்சாண்டர் லாரி |
| முதன்மை நபர்கள் | அதிப் நாத் பாலச்சவுத்ரி (தலைவர் & மேலாண் இயக்குநர்) |
| தொழில்துறை |
|
| உரிமையாளர்கள் | இந்திய அரசு |
| தாய் நிறுவனம் | பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்திய அரசு |
பால்மர் லாரி & கோ லிமிடெட் (Balmer Lawrie & Co. Ltd.) என்பது இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு மத்திய பொதுத்துறை கூட்டு நிறுவனமாகும். இது வகை-I மினிரத்னா நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் 1867-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் கல்கத்தாவில் ஜார்ஜ் ஸ்டீபன் பால்மர் மற்றும் அலெக்சாண்டர் லாரி ஆகியோரால் நிறுவப்பட்டது. தற்சமயம் இந்நிறுவனம் எட்டு முக்கிய வணிகப் பிரிவுகளையும், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நான்கு கூட்டு முயற்சிகளையும், இந்தியாவில் ஒரு துணை நிறுவனத்தையும் கொண்டு இயங்கி வருகிறது.
வரலாறு
[தொகு]பால்மர் லாரி நிறுவனம் 1867 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் கல்கத்தாவில் ஜார்ஜ் ஸ்டீபன் பால்மர் மற்றும் அலெக்சாண்டர் லாரி ஆகிய இரண்டு ஸ்காட்லாந்துகாரர்களால் ஒரு கூட்டு நிறுவனமாகத் தொடங்கப்பட்டது.[1][2][3]
இந்நிறுவனம் 1924 ஆம் ஆண்டில் ₹40 லட்சம் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்துடன் ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமாகவும், பின்னர் 1936 ஆம் ஆண்டில் பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாகவும் மாற்றப்பட்டது. தொடர்ந்து 1972 ஆம் ஆண்டில் இது இந்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனமாக மாறியது.[4][5] தற்சமயம் இந்நிறுவனம் வகை-I மினிரத்னா பொதுத்துறை நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[6]
கூட்டு முயற்சிகள் மற்றும் துணை நிறுவனங்கள்
[தொகு]பால்மர் லாரி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கூட்டு நிறுவனங்களையும், இந்தியாவில் ஒரு துணை நிறுவனத்தையும் கொண்டுள்ளது.
இந்தியாவில் கூட்டு முயற்சிகள்
[தொகு]- பால்மர் லாரி-வான் லீர் லிமிடெட் (Balmer Lawrie-Van Leer Ltd)
- ஏவி-ஆயில் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Avi-Oil India Pvt. Ltd)
வெளிநாடுகளில் கூட்டு முயற்சிகள்
[தொகு]- பி. டி. பால்மர் லாரி இந்தோனேசியா (PT Balmer Lawrie Indonesia)
- பால்மர் லாரி (யு. ஏ. இ.) எல். எல். சி. (Balmer Lawrie (UAE) LLC)
துணை நிறுவனம்
[தொகு]- விசாகப்பட்டினம் போர்ட் லாஜிஸ்டிக்ஸ் பார்க் லிமிடெட் (Visakhapatnam Port Logistics Park Ltd)
வணிகச் சேவைகள்
[தொகு]இந்நிறுவனம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அலுவலகங்களைக் கொண்டு, எட்டு முக்கிய மூலோபாய வணிகப் பிரிவுகளின் கீழ் இயங்கி வருகிறது:[சான்று தேவை]
- தொழிற்முறை சிப்பமிடுதல்
- கிரீஸ் மற்றும் மசகு எண்ணெய்
- தோல் இரசாயனங்கள்
- பயணம் மற்றும் விடுமுறைச் சுற்றுலா
- தளவாடக் கட்டமைப்பு
- தளவாடச் சேவைகள்
- குளிர்சங்கிலிக் கட்டமைப்பு
- சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் வயல் சேவைகள் [1]
நிதி நிலை மற்றும் சமீபத்திய முன்னேற்றங்கள்
[தொகு]2024–25 நிதியாண்டில் (2025 மார்ச் 31 நிலவரப்படி), பால்மர் லாரி நிறுவனம் ₹2,404 கோடி வருவாயையும் (விற்றுமுதல்), ₹203 கோடி நிகர லாபத்தையும் ஈட்டியுள்ளது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Balmer Lawrie's eight units may be sold off separately" இம் மூலத்தில் இருந்து 16 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210116103439/https://www.livemint.com/companies/news/balmer-lawrie-s-eight-units-may-be-sold-off-separately-11610418647657.html.
- ↑ "Welcome to Balmer Lawrie Driven by Diversity Lead by Change". balmerlawrie.com (in ஆங்கிலம்). Archived from the original on 20 January 2017. Retrieved 31 January 2017.
- ↑ "Financial Results of Balmer Lawrie". balmerlawrie.com (in ஆங்கிலம்). Archived from the original on 18 January 2017. Retrieved 31 January 2017.
- ↑ "Balmer Lawrie & Company Chairman Speech | Balmer Lawrie & Company Ltd Chairman Speech". The Economic Times. Archived from the original on 6 February 2017. Retrieved 31 January 2017.
- ↑ "Milestones of Balmer Lawrie". balmerlawrie.com (in ஆங்கிலம்). Archived from the original on 25 November 2016. Retrieved 31 January 2017.
- ↑ "70 companies with pre-1947 roots" இம் மூலத்தில் இருந்து 4 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230604225747/https://www.livemint.com/Companies/IvqNiC0KHlZg9ZOXhFbe4O/70-companies-with-pre1947-roots.html.
- ↑ "Balmer Lawrie and Company Ltd". Moneycontrol (in ஆங்கிலம்). Archived from the original on 14 December 2021. Retrieved 13 February 2022.