பால்டிக் தற்காப்பு
நகர்வுகள் | 1.d4 d5 2.c4 Bf5 |
---|---|
பெயரிடப்பட்டது | பால் கீரசு |
மூலம் | ராணியின் பலியாட்டம் |
ஏனைய சொற்கள் | கிராவ் தற்காப்பு சகோவிக் தற்காப்பு |
Chessgames.com opening explorer |
பால்டிக் தற்காப்பு (Baltic Defense) என்ற சதுரங்க திறப்பு ஆட்டம் பின் வரும் நகர்வுகளால் அடையாளப்படுத்தப்படுகிறது.
கிராவ் தற்காப்பு அல்லது சகோவிக் தற்காப்பு என்ற பெயர்களாலும் இத்திறப்பு அழைக்கப்படுகிறது.
பால்டிக் தற்காப்பு ஆட்டம் என்பது ராணியின் பலியாட்ட மறுப்பு திறப்பு ஆட்டத்திற்கு பதிலாக வழக்கத்திற்கு மாறாக விளையாடப்படும் ஒரு மாற்று ஆட்டமாகும். ராணியின் பலியாட்ட மறுப்பு திறப்பை எதிர்த்து விளையாடும் பெரும்பாலான நகர்வுகளில் ராணியின் அமைச்சரை முன்னே கொண்டுவருவதில் பிரச்சினைகள் இருக்கின்றன. இப்பிரச்சினையைத் தீர்க்கும் விதமாக இத்திறப்பில் ஓர் அடிப்படை அனுகுமுறையாக ராணியின் அமைச்சர் உடனடியாக வெளியே கொண்டு வரப்படுகிறது.
பால்டிக் திறப்பின் இந்த அணுகுமுறை சதுரங்க மாசுட்டர்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கண்டறிய முடியவில்லை. ஆனால் சில உலக சதுரங்க வீர்ர்கள் இத்திறப்பு ஆட்டத்தை பயன்படுத்தியுள்ளனர். பால் கீரசு, அலெக்சி சிரோவ் போன்ற கிராண்டு மாசுட்டர்களும் பால்டிக் திறப்பைக் கொண்டு விளையாட்டைத் தொடங்கியுள்ளனர்.
பால்டிக் திறப்பு சதுரங்க திறப்புகளுக்கான கலைக்களஞ்சியக் குறியீட்டு எண் (இ.சி.ஓ) டி06 ஆகும்.
வெள்ளையின் எதிர் ஆட்டங்கள்[தொகு]
கருப்பு நிறக்காயின் இந்த தற்காப்பு ஆட்டத்திற்கு எதிராக விளையாட வெள்ளைக்கு 3.Nf3, 3.Qb3, 3.cxd5, மற்றும் 3.Nc3 என்ற நகர்வுகள் உள்பட பல நகர்வு சாத்தியங்கள் உள்ளன. விளையாட்டு இவ்வாறு தொடர்கிறது.
3.Nf3 e6[தொகு]
- 4.Qb3 Nc6
- 4.e3 Nf6 5.Qb3 Nc6
- 4.Nc3 Nf6 5.Qb3 Nc6
- 4.cxd5 exd5 5.Qb3 Nc6
3.Qb3[தொகு]
- 3...e5 4.Qxb7 Nd7 5.Nf3 Rb8 6.Qxd5 Bb4+ 7.Nfd2 (7.Bd2வார்ப்புரு:Chesspunc Ne7வார்ப்புரு:Chesspunc வெப்–சிங்ளேர், இங்கிலாந்து 1971) Ne7 8.Qf3 exd4 மற்றும் கருப்புக்கு முன்னேற்றமும் அவருடைய சிப்பாயை முன்செலுத்தும் முயற்சிக்கும் வழி கிடைக்கிறது.
3.cxd5 (பிரதானத் திட்ட வரிசை)[தொகு]
- 3...Bxb1 4.Qa4+ Qd7 5.Qxd7+ Nxd7 6.Rxb1 Ngf6 7.Nf3
3.Nc3[தொகு]
- 3...e6 4.Qb3வார்ப்புரு:Chesspunc (4.Nf3) Nc6 5.cxd5 exd5 6.Qxd5 (இது தவறாகும். கருப்பு 6...Nxd4, வெற்றி) Qxd5 7.Nxd5 0-0-0வார்ப்புரு:Chesspunc
மேற்கோள்கள்[தொகு]
- Nunn, John (1999), Nunn's Chess Openings, Everyman Chess, ISBN 1-85744-221-0
- Polugajewski, Lev (1984), Damengambit, Tschigorin System bis Tarrasch-Verteidigung, Sportverlag Berlin
மேலும் படிக்க[தொகு]
![]() |
The Wikibook Chess Opening Theory மேலதிக விவரங்களுள்ளன: Baltic Defense |
- Baltic Defense to the Queens Gambit, by Andrew Soltis, Chess Digest, ISBN 0-87568-228-6.
- Keres Defence, by Giovanni Falchetta, 1992, ISBN 88-86127-07-3.