உள்ளடக்கத்துக்குச் செல்

பால்குரிகி சோமநாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால்குரிகி சோமநாதர்
பால்குரிகி சோமநாதரின் சிலை
பால்குரிகி சோமநாதரின் சிலை
பிறப்புதெலங்காணா அல்லது கருநாடகம், இந்தியா
தொழில்கவிஞர்
தேசியம்இந்தியர்
வகைசைவ சமயம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்பசவ புராணம் (தெலுங்கு), சிலசம்பாடனே (கன்னடம்), சோமநாதபாஸ்யம் (சமசுகிருதம்)

Mahakavi palakurthy somanathudu).JPG பால்குரிகி சோமநாதர் (Palkuriki Somanatha) தெலுங்கு, கன்னடம் மற்றும் சமசுகிருத மொழிகளில் கவிஞராக இருந்தார். மேலும் அந்த மொழிகளில் பல படைப்புகளை எழுதினார்.[1] 12 ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதியான பசவண்ணாவைப் பின்பற்றிய வீரசைவராக இருந்தார். இவரது எழுத்துக்கள் முதன்மையாக சைவ நம்பிக்கையை பரப்புவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.[2] மேலும் சோமநாதர் சைவக் கவிஞராகவும் இருந்தார்.[3] நன்னே சோடர், மல்லிகார்ஜுன பண்டிதராத்யர் மற்றும் சோமநாதர் ஆகிய மூவரும் சிவகவித்ராயம் (அதாவது சைவ கவிஞர் மூவர்) என்று குறிப்பிடப்படுகிறார்கள். இந்த மூவரும் பிதுபார்த்தி கவிஞர்கள் மற்றும் யாதவக்குள அன்னமையா ஆகியோருடன் இணைந்து ஆந்திரப் பிராந்தியத்தில் வீரசைவ இயக்கத்தின் முன்னோடியாக இருந்தனர்.[4]

வாழ்க்கை

[தொகு]

சோமநாதர் தனது முதல் படைப்பான பசவ புராணத்தில் தனது பெற்றோரின் பெயர்களை விஷ்ணுராமிதேவர் மற்றும் சிறியாதேவி என்று குறிப்பிடுகிறார்.[5] இதன்மூலம் இவர் பிறப்பால் ஒரு சைவர் அல்ல என்பதை அறிய முடிகிறது. பொதுவாக சைவ எழுத்தாளர்கள் இவ்வாறு பெயர் வைப்பது நடைமுறையில் இல்லை. அவர்கள் தங்கள் உண்மையான பெற்றோரைக் குறிப்பிடுவதில்லை. மாறாக கடவுள் சிவனை தந்தையாகவும், அவரது மனைவி பார்வதியை தாயாகவும் கருதுகின்றனர்.தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்திலும், கன்னடம் பேசும் பகுதியிலும் ( கருநாடகம் ) பால்குரிகி என்ற கிராமம் இருப்பதால், இவர் பிறந்த இடம் நிச்சயமற்றது.[6] கருநாடகாவின் இராமநகர மாவட்டத்தில் உள்ள மகடி வட்டத்தில் அமைந்துள்ள கால்யா என்ற கிராமத்தில் இவர் தனது கடைசி நாட்களைக் கழித்தார். காள்யா என்கிற கல்யாணபுரத்தில் வசித்து வந்த சர்வசிலே சென்னம்மா என்ற பெண் சந்நியாசியைப் பார்க்க விரும்பிய பால்குரிகி சோமநாதர், கிராமத்திற்கு வந்து, அவரது வேண்டுகோளின் பேரில் தான் இறக்கும் வரை அதே கிராமத்தில் தங்கியிருந்தார். இவரது கல்லறை அங்கே அமைந்துள்ளது. மேலும், இன்றுவரை பக்தர்களால் வணங்கப்படுகிறது.

எழுத்துக்கள்

[தொகு]
தெலுங்கு மொழி

பசவ புராணம், பண்டிதராத்ய சரித்திரம், மலமாதேவி புராணம், அனுபவாசரம், சென்னமல்லு சிசமலு, விருஷாதிப சதகம் மற்றும் சதுர்வேதசாரம் (வசனங்களில்) பசவோதாரனம் ,பசவராகதை ஆகியவை இவரது தெலுங்கு மொழி எழுத்துக்களில் முக்கியமானவை.[7]

கன்னட மொழி

பசவராகதை, பசவதயாராகதை, சத்குருகதை, சிலசம்பாதனே, சகஸ்ரகானநாமா, பஞ்சரத்னம் ஆகியவை கன்னட இலக்கியத்திற்கு இவர் செய்த பங்களிப்புகள் ஆகும்.

சமசுகிருத மொழி

சோமநாதபாஷ்யம், உருத்ரபாஷ்யம், விருசாபஸ்தகம், பசவோதாரனம், பசவாஷ்டகம், பசவ பஞ்சகம், அஷ்டோத்தர சதநாம கட்யம், பஞ்சப்பிரகர கட்யம் மற்றும் ஆசாரங்க கட்யம் ஆகியவை இவரது சமசுகிருத மொழி எழுத்துக்களில் முக்கியமானவை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sahitya Akademi (1992), p. 4133
  2. Sahitya Akademi (1992), p. 4133
  3. "T votaries cry foul over 'neglect' of T contribution to Telugu pride". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 March 2011 இம் மூலத்தில் இருந்து 5 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105013056/http://articles.timesofindia.indiatimes.com/2011-03-13/hyderabad/28685273_1_telangana-region-statues-t-region. 
  4. R., Sri Hari, ed. (2003). Major Genres and Trends in Dravidian Literature (in English). Dravidian University. p. 49.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  5. Encyclopaedia of Indian Literature: Sasay to Zorgot Edited by Mohan Lal, Sahitya Akademi, 1992 p. 4133
  6. Shastri (1955), p. 362
  7. Shatiya Akademi (1992), p. 4133

நூல் குறிப்புகள்

[தொகு]
  • Various (1992) [1992]. Encyclopaedia of Indian literature – vol 5. Sahitya Akademi. ISBN 81-260-1221-8.
  • Sastri, Nilakanta K. A. (2002) [1955]. A history of South India from prehistoric times to the fall of Vijayanagar. New Delhi: Indian Branch, Oxford University Press. ISBN 0-19-560686-8.
  • Narasimhacharya, R (1988) [1988]. History of Kannada Literature. New Delhi, Madras: Asian Educational Services. ISBN 81-206-0303-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்குரிகி_சோமநாதர்&oldid=4403234" இலிருந்து மீள்விக்கப்பட்டது