உள்ளடக்கத்துக்குச் செல்

பால்கா கல்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாலிக் பால்கா கல்ஜி (Malik Balka Khalji) ( 1230 – தில்லி சுல்தான் சம்சுத்தீன் இல்த்துத்மிசின் கீழ் 1231 ஆம் ஆண்டு வரை வங்காளத்தின் ஆளுநராக இருந்தார்.[1]

வரலாறு

[தொகு]

பால்கா அலி ஷேர் கல்ஜியின் மகனாவார்.[2] அலாவுதீன் தௌலத் ஷா கல்ஜியின் மரணத்திற்குப் பிறகு, பால்கா வங்காளத்தின் அரியணையைக் கைப்பற்றினார். மாலிக் பால்கா தன்னை வங்காளத்தின் சுதந்திர ஆட்சியாளராகக் காட்டிக் கொண்டார். இதனால் கோபமடைந்த சுல்தான் இல்த்துத்மிசு 1231 இல் வங்காளத்தின் மீது படையெடுத்தார்.[1] பால்கா பின்னர் தோற்கடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதன் மூலம்வங்காளத்தின் கல்ஜி வம்சத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

இதனையும் காண்க =

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Ahmed, ABM Shamsuddin (2012). "Balka Khalji, Ikhtiyaruddin". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  2. Far East Kingdoms : South Asia
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்கா_கல்ஜி&oldid=3827688" இலிருந்து மீள்விக்கப்பட்டது