பாலைவன மெழுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாலைவன மெழுகு[தொகு]

பாலைவன மெழுகு அல்லது பாறை மெழுகு என்பது வறண்ட சூழலில் காணப்படும் பாறைகளின் மேல் காணப்படும்,.ஆர’ஞ்சு – மஞ்சள் நிறத்திலிருந்து கருப்பு நிறம் வரையிலான மேற்பூச்சாகும். பாலைவன மெழுகு என்பது வழக்கமாக ஒரு மைக்ரோமீட்டர் அடர்த்தியும் நானோமீட்டர் அளவு பதியமும் செய்யப்பட்டிருக்கும். பாறைத் துரு மற்றும் பாலைவன பசுங்களிம்பு என்றும் சில சமயங்களில் அழைக்கப்படும்.

உருவாக்கம்[தொகு]

பாலைவன மெழுகு நிலையான பாறைகளின் மேற்பரப்பில் உருவாகும். இப்பாறைகளின் மேற்பரப்புகளில் வீழ்படிவாக்கலோ, உடைதலோ அல்லது காற்றால் தேய்மானமோ நடைபெறாது. இந்த மெழுகு களிமண் துகள்களாலும், இரும்பு மற்றும் மாங்கனீசு ஆக்சைடுகளாலும் ஆனது. சில கரிமச் சேர்மானங்களும் இருக்கும். மெழுகின் நிறம் பழுப்பு நிறத்திலிருந்து கருப்பு நிறம் வரை இருக்கும்.

கலவை[தொகு]

விஞ்ஞானிகள் இந்த மெழுகு எந்த பாறைகளின் மீது மேற்பூச்சாகிறதோ அந்த பாறைகளின் பொருள்களிலிருந்தே உருவாகிறது என முன்பு எண்ணினர். பின்பு மெழுகின் அதிக பாகம் காற்றால் வரும் களிமண்ணால் ஆனது என கண்டறியப்பட்டது. பின்னர் இந்த களிமண் மூலக்கூறாக செயல்பட்டு மற்ற கூடுதல் பொருள்களை இழுக்கும். இப்பொருள்கள், சூரிய வெப்பத்தால் பாறைகள் அதிக வெப்பநிலையை அடையும் போது களிமண்ணுடன் வினை புரியும். இந்த முறையில் பனித்துளியால் ஈரமாவதும் மிக முக்கியமானதாகும்.

மாங்கனீசு[தொகு]

கருப்பு பாலைவன மெழுகின் முக்கிய அம்சம் என்னவென்றால் வழக்கத்திற்கு மாறாக இதில் மாங்கனீசின் அடர்த்தி அதிகமாக உள்ளது. பூமியின் மேற்புறத்தில் மாங்கனீசு அரிதாகவே உள்ளது. இது 0.12% எடை அளவே உள்ளது. ஆனால் கருப்பு பாலைவன மெழுகில் மாங்கனீசின் அளவு 50 முதல் 60 தடவை அதிகமாக உள்ளது.

கரிம சத்துக்கள் குறைவாக உள்ள எளிய சுற்றுச்சூழலில் இருக்கும் நுண்ணுயிரிகளை மாங்கனீசு ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் பாலைவன மெழுகு உருவாகிறது. ஒரு நுண்ணிய சூழ்நிலையின் கார-அமிலத்தன்மை

 7.5க்கு மேல் இருந்தால் மாங்கனீசால் நுண்ணுயிரிகளை ஆக்சிசனேற்றம் செய்ய இயலாது. இச்சூழலில் மாங்கனீசு சத்து குறைவான ஆனால் இரும்புச்சத்து அதிகமுள்ள ஆரஞ்சு மெழுகு உருவாகும். ஈரமான மற்றும் வறண்ட காலநிலையே மாங்கனீசு மற்றும் இரும்பு நிறைந்த மெழுகு உருவாகக் காரணமாகிறது.

கற்பாறைச் செதுக்குதல்[தொகு]

பாலைவன மெழுகில் இரும்புச்சத்தும் மாங்கனீசு சத்தும் அதிகம் இருந்தும் அவற்றால் யாதொரு நவீன பயனுமில்லை. ஆனால் அமெரிக்க மக்கள் சிலர் கீழே இருக்கும் பாறை வெளிப்படும் வகையில் செதுக்கியும், அடர்ந்த மெழுகை உரசித் தேய்த்தும் கற்பாறைச் செதுக்குதலைச் செய்கின்றனர்.

கீழே இருக்கும் பாறை தெரியாத வண்ணம் இந்த பாலைவன மெழுகு மறைத்துவிடும். வெவ்வேறான பாறைகளுக்கு இந்த பாலைவன மெழுகை தக்கவைத்து கொள்ளும் திறன் வேறுபட்டு இருக்கும். எடுத்துக்காட்டாக, சுண்ணாம்புக் கல்லில் பாலைவன மெழுகு இருக்காது. ஏனென்றால் இக்கற்களுக்கு நீரில் கரையும் தன்மை உள்ளதால் ,மெழுகிற்குத் தேவையான நிரந்தர மேற்பரப்பைத் தர இயலாது. எரிமலைப் பாறை, குவார்ட்சைடு மற்றும் உருமாற்றும் மென்களிமண்ணில் பளபளப்பான மற்றும் அடர்த்தியான கருப்பு மெழுகு உருவாகும், ஏனெனில் இப்பாறைகள் அனைத்து தட்பவெப்பச் சிதைவையும் தாங்கி நிற்கும்.  [1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலைவன_மெழுகு&oldid=2722274" இருந்து மீள்விக்கப்பட்டது