பாலி வினைல் ஃப்ளூரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாலி வினைல் ஃப்ளூரைடு
Polyvinylfluorid.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
poly(1-fluoroethylene) [1]
வேறு பெயர்கள்
poly(vinyl fluoride)
இனங்காட்டிகள்
24981-14-4
Abbreviations PVF
ChEBI CHEBI:53244
ChemSpider none
ம.பா.த polyvinyl+fluoride
பண்புகள்
(C2H3F)n
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பாலி வினைல் ஃப்ளூரைடு (PVF) or –(CH2CHF)n– விமானத்தின் உட்புறபூச்சில் தீப்பற்றுவதை குறைக்கவும் ஒளிமின்னழுத்த தொகுதியின் பின்புற தாளிலும் பயன்படும் ஒரு பலபடியாகும்.[2] மேலும் இது மழைகோட்கள் மற்றும் உலோக தாள்களிலும் பயன்படுகிறது. பாலி வினைல் ஃப்ளூரைடு ஒரு வெப்ப நெகிழி  வினைல் ஃப்ளூரைடு அலகின் ஃப்ளூரோ பலபடியாகும்.

Iஅமைப்பில் இது பாலிவைனைல் குளோரைடை ஒத்துள்ளது .

பாலி வினைல் ஃப்ளூரைடு ஆவியில் குறைவான உட்புகும்தன்மை உடையது. மிக மெதுவாக எரியும், மேலும் கறையேற்றுதல் , வானிலையாலழிதலில் தாங்கும் தன்மையும் அதிகம். கீட்டோன்கள் மற்றும் எசுத்தர்களை தவிற பெரும்பாலான வேதிப்பொருட்களை தாங்கும் தன்மை கொண்டது .மேலும் இது பல்வேறு நிறங்களில் படங்களாக உள்ளது மேலும் பல்வேறு இறுதி பொருட்களை உருவாக்கவும் ,சிறப்பு பூச்சுகளில் பிசினாகவும் பயன்படுகிறது .ஊசி வார்புகளுக்கு தேவையான வெப்பநிலைப்பு தன்மை இல்லாததால் வழக்கமாக வியாபார ரீதியாக இது படச்சுருளாக கிடைக்கிறது .

பாலி வினைல் ஃப்ளூரைடு வெண்பலகையில் மேற்பரப்பு பொருளாக பயன்படுகிறது மேலும் சமீபத்தில் பீனிக்ஸ் மார்ஸ் லேண்டெர்ஸ்ன் உயிர் தடுப்பான்களின் ஒரு பகுதியாக பயன்படுதப்படுகிறது .

தொடர்புடைய சேர்மங்கள் [தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "poly(vinyl fluoride) (CHEBI:53244)". பார்த்த நாள் July 14, 2012.
  2. Tedlar PVF

வெளி இணைப்புகள்[தொகு]