பாலி வழிநடப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பாலி வழிநடப்பு என்ற ஆவணம் திசம்பர்,2007இல் இந்தோனேசியாவின் பாலி தீவில் நடந்த 2007 ஐக்கிய நாடுகள் வானிலை மாற்றம் மாநாட்டில் பங்கெடுத்த நாடுகள் உடன்பாடு கண்டதாகும்.இது இரண்டாண்டுகளுக்குப் பிறகு டென்மார்க் நாட்டில் கூடவிருந்த வானிலைமாற்ற மாநாட்டின்போது உறுதிசெய்ய வேண்டிய உடன்பாட்டிற்கு வழி கோலும் ஆவணமாக அமைந்தது.இம்மாநாடு ஐக்கிய நாடுகள் வானிலை மாற்றம் கட்டமைப்பு கூட்டத்தைச் சேர்ந்த 13ஆம் மாநாட்டு அங்கத்தவர்களையும் (COP 13)கியோட்டோ நெறிமுறையின் மூன்றாம் கூட்ட அங்கத்தவர்களையும்(COP/MOP 3) உள்ளடக்கி யிருந்தது.

பாலி வழிநடப்பு பாலி செயலாக்கத் திட்டம் (Bali Action Plan, BAP)உள்ளடக்கியது.தவிர கியோட்டோ நெறிமுறை கீழான அதற்கமை செயற்குழு(AWG-KP)யின் செயற்திட்டங்களையும் 2009க்கான அவர்களது இலக்குகளையும் உள்வாங்கியது.[1] மேலும் இது மாற்ற பழகு நிதி (Adaptation Fund)நிறுவுதல், கியோட்டோ நெறிமுறையின் ஒன்பதாம் அங்கத்தின் வீச்சையும் உள்ளடக்கத்தையும் மீளாய்வு செய்தல்,தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் காடுகள் அழிப்பை தடுத்து கரிம உமிழ்வுகளை குறைத்தல் முதலியனவும் அடக்கியுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலி_வழிநடப்பு&oldid=1354363" இருந்து மீள்விக்கப்பட்டது