பாலி நீரிணை
பாலி நீரிணை Bali Strait Selat Bali | |
---|---|
![]() பாலி - ஜாவா தீவுகளை இணைக்கும் பாலி நீரிணை (2017) | |
அமைவிடம் | தென்கிழக்கு ஆசியா |
ஆள்கூறுகள் | 8°18′S 114°25′E / 8.300°S 114.417°E |
வகை | நீரிணை |
வடிநில நாடுகள் | இந்தோனேசியா |
அதிகபட்ச நீளம் | 60 கிலோமீட்டர்கள் (37 mi) |
குறைந்தபட்ச அகலம் | 2.4 கிலோமீட்டர்கள் (1.5 mi) |
சராசரி ஆழம் | 60 மீட்டர்கள் (200 அடி) |
மேற்கோள்கள் | நீரிணை: இந்தோனேசியா National Geospatial-Intelligence Agency, Bethesda, MD, U.S. |
பாலி நீரிணை (ஆங்கிலம்: Bali Strait; இந்தோனேசியம்: Selat Bali;) என்பது ஜாவா மற்றும் பாலி தீவுகளைப் பிரிக்கும் ஒரு நீர்ப் பகுதியாகும். குறுகிய நீர்ப்பரப்பைக் கொண்ட இந்த நீரிணையின் அகலம் 3 கிமீ.; மிகக் குறுகிய இடத்தில் 2.4 கிலோமீட்டர் (1.5 மைல்) அகலம் கொண்டது.[1]
பாலி தீவின் கிழக்கே லோம்போக் நீரிணை, தென்கிழக்கே படுங் நீரிணை, வடக்கே பாலி கடல், தென்மேற்கே இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கே பாலி நீரிணை ஆகிய நீர்நிலைகள் உள்ளன. பாலி தீவும்; மற்றும் ஜாவா தீவும் பாலி நீரிணையால் பிரிக்கப்படுகின்றன. அதே கட்டத்தில் இந்தியப் பெருங்கடலும் பாலி கடலும் இந்த நீரிணையால் இணைக்கப்படுகின்றன.
பாலிக்கும் ஜாவாவுக்கும் இடையே முதல் வழக்கமான படகுச் சேவை 1930-ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது.[1]
பொது
[தொகு]புவியியல் ரீதியாக பாலி மற்றும் ஜாவா ஆகிய இரண்டு தீவுகளும்; கடைசி பனி யுகத்தின் இறுதி வரை இணைந்திருந்தன. அதன் பின்னர் கடல் மட்டம் உயர்ந்ததால் இரண்டு தீவுகளையும் இணைத்த நிலப்பாலம் கடலுக்குள் மூழ்கியது. இந்த இரன்டு தீவுகளும் சுந்தா நிலத்தகடு எனப்படும் டெக்டோனிக் நிலத் தட்டின் ஒரு பகுதியைப் பகிர்ந்து கொள்கின்றன.[2]
போக்குவரத்து
[தொகு]பாலி நீரிணையின் குறுக்கே ஒரு பாலம் கட்டுவதைப் பற்றி இந்தோனேசிய அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.[2][3][4][5] பாலியில் உள்ள உள்ளூர்வாசிகள் சிலரின் எதிர்ப்புகள்; மற்றும் பொருளாதார நெருக்கடிகளினால் இந்தத் திட்டம் தடைபட்டுள்ளது.[3][4]
தற்போது பாலிக்கும் ஜாவாவுக்கும் இடையே தரவழியிலான இணைப்புகள் எதுவும் இல்லை. ஜாவாவில் உள்ள கெத்தப்பாங் (Ketapang) படகு துறைக்கும்; பாலியின் ஜெம்பரானா பிராந்தியத்தின் கிலிமானுக் (Gilimanuk) படகு துறைக்கும்; இடையே ஒரு படகு சேவை மட்டுமே உள்ளது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Bali and Java (Indonesia) are separated by the Bali Strait, a narrow stretch of water only 3km across". steamcommunity.com (in ஜெர்மன்). Retrieved 11 March 2025.
- ↑ "The Bali Strait". Retrieved 26 June 2012.
- ↑ "Sejarah Kontroversi Proyek Jembatan Selat Sunda". Tempo. 2012-07-30. Retrieved 2015-08-05.
- ↑ Suhendra (2009-05-31). "Mega Proyek Jembatan Sunda dan Bali Belum Jadi Prioritas". Detik. Retrieved 2010-02-03.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் பாலி நீரிணை தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.