உள்ளடக்கத்துக்குச் செல்

பாலி சத்திரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலி சத்திரியர் (Balinese Kshatriya) என்போர் இந்தோனேசியாவின் பாலி தீவில் வசிக்கும் ஒரு இந்து சத்திரிய சமூகத்தினராவர். ஆறாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், பாலியில் ஒரு வலுவான சத்திரிய ஆளும் அரசமரபு இருந்தது. ஆட்சியாளர்கள் பெரும்பாலும் இந்திய இரத்தக் கலப்புக் கொண்ட பூர்வீக பாலினியர்களாக இருந்தனர். [1] இந்த குலத்தினர் பெரும்பாலும் நாகவன்ஷி வம்சத்தைச் சேர்ந்தவர்களாவர். இருப்பினும், காலப்போக்கில், இந்த பூர்வீக சத்திரியர்கள் அழிந்து, பாலிக்கு குடிபெயர்ந்த சாவக சத்திரியர்கள் அவர்களின் இடத்துக்கு வந்தனர். தற்போது பாலியில் வசிக்கும் பெரும்பாலான சத்திரியர்கள், சாவகத்திலிருந்து பாலிக்கு குடிபெயர்ந்த மன்னர் தேவா அகுங்கின் வழித்தோன்றல்கள் என்று கூறப்படுகிறது. இருப்பினும், வைசிய வருணத்திலிருந்து சத்திரியர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட வேறு சில சத்திரிய குலங்களும் உள்ளன. மொத்த பாலி இந்து மக்கள்தொகையில் சத்திரியர்கள் சுமார் 4% உள்ளனர்.

தேவா அகுங் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சாவகத்திலிருந்து பாலிக்கு தனது ஒன்றுவிட்ட சகோதரர் ஆர்ய டமர் மற்றும் ஆறு சத்திரியர்களுடன் வந்து சேர்ந்ததாக நம்பப்படுகிறது. இருப்பினும், மற்ற ஏழு பேரின் சந்ததியினர் வைசியர்களாகக் தரம் குறைக்கப்பட்டதால், தேவா அகுங் மட்டுமே தனது சத்திரிய அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொண்டார். தேவா அகுங் குலத்தைச் சேர்ந்த பெரும்பாலான சத்திரியர்கள் படோங், தபனான், மெங்குய், கரங்கசெம் ஆகிய இடங்களில் உள்ளனர். இருப்பினும், படோங்கில், குஸ்தி பாம்'சுட்டன் என்ற மற்றொரு சத்திரிய குலம் உள்ளது, அவர்கள் ராஜா ங்குரா சக்தி பமேகுடனின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். குலுங்குங், பாங்கிலி, கியான்யார் ஆகிய இடங்களிலும் சத்திரியர்கள் காணப்படுகின்றனர். புலேலெங்கில் வாழ்ந்த சத்திரிய குலத்தினர் இப்போது தங்கள் இருப்பிடத்தை படுங்கிற்கு மாற்றியுள்ளனர். பாலியில் வசிக்கும் தேசக், பிரதேவா, புங்ககன் போன்ற பிற சத்திரிய குலத்தினர் சந்தேகத்திற்குரிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். [2]

சமசுகிருதத்தின் க்ஷத்ரியா என்ற சொல், பாலினிய மொழியில் சத்ரியா என்று உச்சரிக்கப்படுகிறது. [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tripathi, S.M.; Singh, N.K. (2001). Religious Positivity. Global Vision Publishing House. p. 202. ISBN 9788187746010. Retrieved 2015-07-19.
  2. Royal Asiatic Society of Great Britain and Ireland. Straits Branch; Rost, Reinhold (1887). Miscellaneous Papers Relating to Indo-China: Reprinted for the Straits Branch of the Royal Asiatic Society from Dalrymple's "Oriental Repertory," and the "Asiatic Researches" and "Journal" of the Asiatic Society of Bengal. Vol. 2. Trübner & Company. p. 158. Retrieved 2015-07-19.
  3. Howe, L. (2005). The Changing World of Bali: Religion, Society and Tourism. Taylor & Francis. p. 12. ISBN 9780203015421. Retrieved 2015-07-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலி_சத்திரியர்&oldid=4222425" இலிருந்து மீள்விக்கப்பட்டது