உள்ளடக்கத்துக்குச் செல்

பாலி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலியில் அகோங் பாடான்தேகல் கோயில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட கோரி அகோங் வாயில்; மண்டபங்கள்

பாலி கோயில் அல்லது புரா (ஆங்கிலம்: Balinese temple; Pura; பாலியம்: ᬧᬸᬭ ; Pura punika genah suci) என்பது இந்தோனேசியா, பாலி தீவில், இந்து சமயத்துடன் தொடர்புடைய பாலி பாணியிலான கோயில் ஆகும். இந்தோனேசியாவில் பாலிய இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு வழிபாட்டுத் தலமாக பாலி கோயில்கள் செயல்படுகின்றன.

பாலி கட்டிடக்கலையில் காணப்படும் விதிகள், பாணி, வழிகாட்டுதல் மற்றும் சடங்குகளைப் பின்பற்றி பாலி கோயில்கள் (புரா) கட்டப்படுகின்றன. பெரும்பாலான இந்து கோயில்கள் பாலி தீவில் காணப்படுகின்றன. அங்கு இந்து சமயம் முதன்மைச் சமயமாக உள்ளது.

இருப்பினும், இந்தோனேசியாவின் பிற பகுதிகளிலும் பல பாலிய கோயில்கள் உள்ளன. அப்படிப்பட்ட பகுதிகளில் கணிசமான அளவிற்கு பாலி மக்கள் வசிக்கின்றனர்.

பெசாகி தாய்க் கோயில், பாலியில் மிக முக்கியமான, மிகப்பெரிய மற்றும் புனிதமான கோயிலாக அறியப்படுகிறது.[1] பாலியில் கட்டப்பட்டுள்ள பல கோயில்கள், ஆயிரம் தீவு கோயில்கள் (Thousand Puras) என்று அழைக்கப்படுகின்றன.

பாலினிய கோயிலின் தனித்துவமான சிறப்புத் தன்மையைப் பிரதிபலிக்கும் உலுன் தானு புராட்டன் கோயிலின் அடுக்குத் தூபி போன்ற மேரு கோபுரத்தின் சன்னதி

சொற்பிறப்பியல்

[தொகு]

புரா (Pura) எனும் சொல் சமசுகிருதச் சொல்லான (-புர், -புரி, -புரா, -புரம், -போர்) (சமசுகிருதம்: (-pur, -puri, -pura, -puram, -pore) எனும் சொல்லில் இருந்து உருவானது; இதன் பொருள் "நகரம்," "சுவர் நகரம்," "கோபுர நகரம்," அல்லது "அரண்மனை" என்பதாகும். தென்கிழக்கு ஆசியாவின் இந்தியமயமாக்கல் மற்றும் இந்து சமயத்தின் பரவலுடன், குறிப்பாக இந்திய மண்டலத்தில் (Indosphere) இந்த சொல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பாலி மொழியின் வளர்ச்சியின் போது, ​​புரா என்ற சொல் சமயம் தொடர்பான கோயில் வளாகத்தைக் குறிக்கத் தொடங்கியது.

பூரி (Puri) என்ற சொல் பாலி இராச்சியத்தின் அரசர்கள் மற்றும் பாலி அரசவழி பிரபுக்களின் வசிப்பிடமான அரண்மனையைக் குறிக்கத் தொடங்கியது. அந்தச் சொல் கிராட்டன் (Kraton) என்று அழைக்கப்படும் ஜாவானிய அரண்மனையைக் குறிக்கும் சொல்லைப் போன்றது.[2]

தெய்வங்களின் தீவு

[தொகு]
உலுன் தானு பெடுகுல் கோயில்
உபுட், குனோங் காவி கோயில்

தெய்வங்களின் தீவு (The Island of the Gods) என்று அழைக்கப்படும் பாலி தீவு[3] 10,000-க்கும் மேற்பட்ட கோயில்களைக் கொண்டுள்ளது. பாலியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் உள்ளது.[4] வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தெய்வங்கள் மற்றும் மூதாதையர்களைக் கௌரவிக்கும் வழக்கமான விழாக்களை இந்தக் கோயில்கள் நடத்துகின்றன.[4]

பாலி மக்கள் தங்கள் கோயில்களை வழிபாட்டுத் தலங்களாகக் கருதுகின்றனர். முடிந்தவரை அவற்றை அழகாகவும்; நன்கு பராமரிக்கப்படுவதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். இத்தகைய தனித்துவங்களே, பாலிய சமூகத்தில் கோயில்களின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றன.[4]

கிராம கோயில்கள்

[தொகு]

பாலியில் உள்ள கோயில்கள் தெய்வங்களின் இல்லங்களாகும். பொதுவாக பாலியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 3 பொது கோயில்கள் உள்ளன:[5]

  • படைப்பின் தெய்வமான (பிரம்மா) தெய்வத்தைக் கௌரவிப்பதற்காக கட்டப்பட்ட புரா பூசே (Pura Puseh)[5]
  • உயிரின் தெய்வமான (விஷ்ணு) தெய்வத்தைக் கௌரவிப்பதற்காக கட்டப்பட்ட புரா தேசா பலே அகோங் (Pura Desa Bale Agung)[5]
  • மரணம் மற்றும் மறுபிறவியின் தெய்வமான (சிவ துர்கா) தெய்வத்தைக் கௌரவிப்பதற்காக கட்டப்பட்ட புரா டாலேம் (Pura Dalem)[4]

(குறிப்பு: பாலி மொழியில் டாலேம் எனும் சொல் தமிழில் தலம் என்பதைக் குறிப்பதாகும்)

வடிவமைப்பு

[தொகு]
பாலினிய கோயிலின் மண்டலங்கள்
பாலினிய தாப் சாய் தீர்த்த வழிபாடு
கெரேபான் தீர்த்த கோயில்
கெரேபான் கோயிலில் பாலி பெண் பிள்ளைகள்

இந்திய துணைக் கண்டத்தில் உள்ள பொதுவான உயர்ந்த உட்புற இந்து கோயில்களைப் போலல்லாமல், பாலி கோயில்கள் மூடப்பட்ட சுவர்களுக்குள் திறந்தவெளி வழிபாட்டுத் தலங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. அவற்றின் வளாகங்களுக்கு இடையில் அலங்கரிக்கப்பட்ட வாயில்கள் வரிசையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சுவர் சித்தரிப்புகளில் பல சிலைகள் (Shrines), மேரு (Meru) எனும் கோபுரங்கள்; மற்றும் பேல் (Bale) எனும் மண்டபங்கள் உள்ளன. பூராவின் வடிவமைப்பு, திட்டம் மற்றும் அமைப்பு பாலினிய இட ஒதுக்கீட்டின் திரிமண்டல கருத்தைப் (Trimandala concept) பின்பற்றுகின்றன.[6]

மூன்று மண்டலங்கள்

[தொகு]

ஒரு பாலி கோயிலில் பாலி இந்து சமயத்தின் புனிதப் படிநிலையின்படி மூன்று மண்டலங்கள் அமைக்கப்பட்டு இருக்கும்:[7]

1. நிசுதா மண்டலம் (Nista Mandala) எனும் முதல் மண்டலம் (Madya Mandala; Jaba Tengah): இது ஒரு வெளிப்புற மண்டலம். இது கோயில் வளாகத்தை வெளிப்புற பகுதி; மற்றும் கோயிலின் நுழைவாயிலுடன் நேரடியாக இணைக்கிறது. இந்த மண்டலம் பொதுவாக ஒரு திறந்தவெளி அல்லது சமய நடன நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு தோட்டத்தின் வடிவத்தைக் கொண்டிருக்கும்; அல்லது சமய விழாக்களின் போது கூடுதல் இடமாகப் பயன்படுத்தப்படலாம்.[7]

2. மத்திய மண்டலம் எனும் ஜெபா தெங்கா (Jaba Tengah): கோயிலின் நடு மண்டலம்: இங்கு பக்தர்களின் செயல்பாடுகள் நடைபெறுகின்றன. மேலும் கோயிலின் துணை வசதிகளுக்கான இடமும் உள்ளது. இந்த மண்டலத்தில் பொதுவாக, பல அரங்குகள் கட்டப்பட்டு இருக்கும். இங்கு பேல் குல்குல் (Bale Kulkul), கேம்லான் (Gamelan pavilion), வந்திலான் (Wantilan), பேல் பெசாண்டேக்கான் (Bale pesandekan) மற்றும் பேல் பெரந்தெனான் (Bale perantenan), கோயிலின் சமையலறை இருக்கும்.[7]

3. உத்தம மண்டலம் (Jero): கோயிலுக்குள் உள்ள மிகவும் புனிதமான மண்டலம். இந்த மூடப்பட்ட வளாகம், பொதுவாக மிக உயர்ந்த இடத்தில் இருக்கும். பொதுவாக ஒரு பத்மாசனத்தைக் கொண்டிருக்கும். மிக உயர்ந்த கடவுளான அசிந்தியன் என்பவரின் உயரமான தாமரைச் சிம்மாசனம் இருக்கும். அத்துடன் பல அடுக்கு கோபுர-சன்னதி (Pelinggih Meru); வேத மந்திர மண்டபம் (Veda Chanting Pavilion), பிரசாத மண்டபம், பலே பங்குங்கான் மண்டபம் , பலே முர்தா மண்டபம் (Bale Murda); மற்றும் கோயிலின் நினைவுச்சின்னங்களின் கிடங்கு (Gedong Penyimpenan) போன்றவை இருக்கும்.[7]

வாயில்கள்

[தொகு]

பாலி கட்டிடக்கலையில் இரண்டு வகையான வாயில்கள் உள்ளன:

  • பிரிந்த வாயில்: இது சாண்டி பெந்தார் (Candi Bentar)[8]
  • கூரை கோபுர வாயில்: பாதுராக்சா அல்லது கோரி அகோங் (Paduraksa; Kori Agung)[9]

இரண்டு வகையான வாயில்களும் பாலி கட்டிடக்கலை வடிவமைப்பில் குறிப்பிட்ட பாத்திரங்களைக் கொண்டுள்ளன.

சாண்டி பெந்தார் என்பது நிசுதா மண்டலத்தில் பயன்படுத்தப்படும் வாயில் ஆகும். கோரி அகோங் என்பது மத்திய மண்டலம் மற்றும் உத்தம மண்டலம் உள் சேர்மங்களுக்கு இடையேயான வாயிலாகப் பயன்படுத்தப்படுகிறது.

வாயில் வகைகளுக்கான விதிகள்; அரண்மனை, பிரபுக்கள் மற்றும் மன்னர்களின் குடியிருப்புகள் போன்ற மதச்சார்பற்ற சேர்மங்களுக்கும் செல்லுபடியாகும்.

ஒன்பது திசை கோயில்கள்

[தொகு]
இயே சா தீர்த்த கோயிலில் வழிபாடு
தாப் சாய் கோயிலின் தெய்வச் சிலைகள்

பாலியின் ஒன்பது திசை கோயில்கள் (புரா காயாங்கான் ஜகத்) (Pura Kahyangan Jagat);[10] அல்லது புரா காயாங்கான் பத்ம புவானா (Pura Kahyangan Padma Bhuwana)[11]) எட்டு முக்கிய திசைகளைக் குறிக்கின்றன. அவை பாலி தீவின் ஒன்பது புனிதமான வழிபாட்டுத் தலங்கள் ஆகும். உத்தி சார் இடங்களில் கட்டப்பட்ட அந்தக் கோயில்கள், பாலி தீவையும் அதன் மக்களையும் தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் நோக்கம் கொண்டவையாகக் கருதப்படுகின்றன.[12] அவை:

கடல் கோயில்கள்

[தொகு]
ஜகத் துமாதி கோயிலின் அர்ச்சகர்கள்
உலுன் தானு பத்தூர் கோயில்

பாலியில் புரா சேகரா (பாலி மொழி: Pura Segara) எனும் பல முக்கியமான "கடல் கோயில்கள்" உள்ளன. இவை 16-ஆம் நூற்றாண்டில் ஜாவாவைச் சேர்ந்த நிரார்தா என்ற மயாபாகித்து முனிவரால் கடல் கடவுள்களைக் கௌரவிப்பதற்காக நிறுவப்பட்டன. சில மிக முக்கியமான கடல் கோயில்கள் பாலி தீவின் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளன. ஏழு மிக முக்கியமான பாலி கடல் கோயில்கள்:[22]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mount Agung and Pura Besakih". Sacred Destinations. Archived from the original on 11 July 2010. Retrieved 2010-07-20.
  2. Robson & Wibisono 2002, ப. 398.
  3. "The Island of the Gods - Bali is without doubt a special and unique place. An integral part of the vast Indonesian archipelago, yet different in so many ways". Indopacificimages. Retrieved 10 March 2025.
  4. 4.0 4.1 4.2 4.3 "Bali Temples - The Island of the Gods is home to more than 10,000 temples, all of which play host to regular ceremonies honoring deities and ancestors at every stage of life". Bali.com. Retrieved 10 March 2025.
  5. 5.0 5.1 5.2 Forever, V. P. (4 May 2023). "There are big and smaller temples for the village itself, main temples for every Balinese from all over the island and small family temples". Volunteer Programs Forever (in ஆங்கிலம்). Retrieved 10 March 2025.
  6. "Traditional Balinese Architecture". School of Architecture, Faculty of Engineering, Udayana University. Retrieved 2010-07-20.
  7. 7.0 7.1 7.2 7.3 Travel, Sailingstone (9 November 2017). "Balinese temples, or pura, have strong associations with the number three. Temples are divided into three spaces: an outer courtyard in addition to two holier inner yards. Each temple also has spaces of worship for Hinduism's three prominent deities: Brahma, Vishnu and Shiva". Sailingstone Travel. Retrieved 10 March 2025.
  8. "Bali:The Land of Temples". Indo.com. Retrieved 2010-07-20.
  9. "Babad Bali - Pura Kahyangan Jagat". babadbali.com (in இந்தோனேஷியன்). Retrieved 2018-05-20.
  10. Hernanto, Namhar (August 1, 2019). "Pura Kahyangan Jagat: Nine Temples of Auspicious Locations". nowbali.co.id. Retrieved 2024-05-31.
  11. 11.0 11.1 "The most sacred Hindu places of worship in Bali". hinducouncil.com.au. 2018. Retrieved 2024-05-20.
  12. 12.0 12.1 12.2 12.3 12.4 12.5 12.6 12.7 "Temples In Bali Explained -The Guide For Beginners". greenerbali.com. Retrieved 2024-05-20.
  13. "Pura Besakih, map". openstreetmap.org.
  14. 14.0 14.1 14.2 14.3 14.4 14.5 14.6 "The Nine Directional Temples of Bali". bali.com. Retrieved 2024-05-20.
  15. "Pura Lempuyang Luhur, map". openstreetmap.org.
  16. "Pura Goa Lawah, map". openstreetmap.org.
  17. "Pura Luhur Andakasa, map". openstreetmap.org.
  18. "Pura Luhur Uluwatu, map". openstreetmap.org.
  19. "Pura Pucak Mangu, map". openstreetmap.org.
  20. "Pura Ulundanu Batur, map". openstreetmap.org.
  21. "Pura Pusering Jagat, map". openstreetmap.org.
  22. Dougherty, Margaret (Fall 2018). "How the Balinese see the sea: interpretations of oceanic power". Independent Study Project (ISP) Collection (2934). https://digitalcollections.sit.edu/cgi/viewcontent.cgi?article=3957&context=isp_collection. பார்த்த நாள்: 2024-05-27.  p. 7

மேலும் படிக்க

[தொகு]
  • Ketut Gobyah; Jro Mangku I Ketut Riana (2018). "Pura Ulun Danu Batur". Babad Bali. Yayasan Bali Galang. Archived from the original on November 22, 2017. Retrieved April 29, 2018.

சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலி_கோயில்&oldid=4231180" இலிருந்து மீள்விக்கப்பட்டது