உள்ளடக்கத்துக்குச் செல்

பாலிஸேட் செல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலையின் உள் அமைப்பு

பாலிஸேட் உயிரணு தாவர செல்களின் இலைகளில் மியுஸோபில் செல்களில் காணப்படுகின்றது. இதற்கு வெளிப்புறம் புறத்தோல் மற்றும் கியுட்டிகிள் அடுக்கு உள்ளது. இதற்கு செங்குத்தாக, இலைகளில் ஸ்பாஞ்சி மிசோபில் செல்கள் உள்ளன. இலைகளில் உள்ள பச்சையருங்கருமணி உயிரணுக்கள் ஒளி ஆற்றலை உறிஞ்சிக் கொள்கின்றன. பாலிஸேட் உயிரணுக்கள் இருவித்திலை  தாவரங்கள் மற்றும் நிகர நரம்புடைய மோனோகாட் தாவரங்களான ஏரெசி மற்றும் டியியோஸ்கொரொசிகளில் காணப்படுகின்றது.[1]

அமைப்பு

[தொகு]

பாலிஸேட் செல்களில் அதிக எண்ணிக்கையில் குளோரோபிளாஸ்ட் செல்கள் காணப்படுகின்றன. இது இலைகளில் ஒளிச்சோ்க்கைக்கு  பயன்படுகின்றது. இலைகளில் ஒளிச்சோ்க்கை முலம் அதிக அளவில் ஒளிஆற்றல் வேதியாற்றலாக மாற்றப்படுகின்றது. மேலும் கார்போஹைட்ரேட் சேகரமாகின்றது.


மியுஸோபிலில் உள்ள பாலிஸேட் செல்களும் ஸ்பாஞ்சி  செல்களும் ஒளிச்சோ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இடைவெளிகளைக் கொண்ட ஒழுங்கற்ற வடிவமுள்ள செல்களாக இருப்பதால் ஒளிச்சோ்க்கையில் வாயுப் பரிமாற்றத்திற்கும் (உதாரணமாக காா்பன்-டை- ஆக்சைடு) உதவுகின்றது.

பாலிஸேட் செல்கள் குளோரன்கைமா செல்களாகும். அதாவது, பாரன்கைமா செல்களில் குளோரோபிளாஸ்ட் காணப்படுகின்றது.[சான்று தேவை]

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Higaki, T.; Rasmussen, H.P.; Carpenter, W.J. (1984). A Study of Some Morphological and Anatomical Aspects of Anthurium Andreanum Lind (PDF). HITAHR, College of Tropical Agriculture and Human Resources, University of Hawaii at Manoa.

Holt Science & Technology "Microorganisms, Fungi, and Plants", Holt, Rinehart and Winston

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலிஸேட்_செல்&oldid=3650910" இலிருந்து மீள்விக்கப்பட்டது