பாலியெசுட்டர் பிசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலியெசுட்டர் பிசின் (Polyester Resin) அல்லது பாலி பிசின் (Polyresin) என்பது ஈருப்பு மூல கரிம அமிலத்தினாலும் பாலி-கைட்ரிக் மதுதிரவத்தினாலும் (alcohol) ஏற்படக்கூடிய வேதியியல் வினையினால் அமையும் நனைவற்ற (unsaturated) பிசின் ஆகும் . தகடு வார்ப்பு கூட்டு (sheet molding compound) , பொதி வார்ப்பு கூட்டு( bulk molding compound) மற்றும் ஒளியச்சின் மைக்கூட்டு போன்றவைகளுக்கு இதுவே மூலப்பொருளாகும் . இது வெப்பமிறுக்குப் (thermo-set) பல்பகுதியங்களால் ஆன பிசுப்பிசுப்பான மரப்பசை போன்ற ஒருவகை செயற்கை திரவம் ஆகும் . இவை வைனலிசுட்டர் பிசின்களை விட 25% மும் , இப்பாக்சி பிசின்களை விட 30-35% மும் விலை குறைவானதாகும் .

இரு பிணைப்புகள் கொண்ட பாலிகார்பாக்ச்சிலிக்கினாலும் (polycarboxylic) , பாலியால்ச்சு (Polyols) என்பதினாலும் ஏற்படக்கூடிய வேதியியல் வினையினால் அமையும் ஒடுக்கல் பல்பகுதியங்களான (condensation polymer) நனைவற்ற (unsaturated) பிசின் ஆகும் . பாலியால்ச்சு என்பதை பல கரிம மது திரவம் , கைத்ராக்சயில் வினைக்கூட்டு , பாலிகைட்ரிக் மதுதிரவம் போன்றவையாகவும் அறியப்படும் . பயன்படுத்தும் மாதிரி பாலிகார்பாக்சிலிக் அமிலங்கள் பித்திலிக் மற்றும் மேலிக் அமிலங்கள் ஆகும் . வினையானது முடிவுபெற வழிசெய்ததும் எசுட்டராக்கம் வினையின் துணைப் பொருளான நீரினை வினைப்பெருக்கில் இருந்து நீக்கப்படும் .

நனைவற்ற ஆலிபின் போன்றவற்றோடு வினைபுரிவதற்காக இருபிணைப்புகளை உள்ளடக்கி கொள்ளும் பாலியெத்திலீன் டெரிபித்தலேட் என்ற அமிலம் உள்ளதை போன்ற வேறுபாடுகள் நனைவு பிசின்களில் இருந்து நனைவற்ற பிசின்களுக்கு உண்டு . இதனால் பிசின்களில் பிறவற்றை சேர்ப்பதற்கும் , அதனை வலுவூட்டுவதற்கும் , அதன் பாகுமையை குறைப்பதற்கும் , வினையூக்கி யாக செயல்படுத்துவதற்கும் பயன் படுகிறது .

பாலியெசுட்டர் பிசின்கள் என்பவை வெப்பமிறுக்கு பல்பகுதியங்கள் . வெப்பமிறுக்கு என்றால் நெகிழிகளை முதலில் காய்ச்சுகையில் மெலிதாகி பின் அதை குளிரச்செய்யும் பொழுது நெகிழும் தன்மையை முற்றிலும் இழக்கும் என்ற வேதியியல் பண்பு ஆகும் . வெப்பமிறுக்கு பொருட்களின் முரணான பொருள் வெந்நிறுத்து நெகிழிகள் ஆகும் . இவை மறுபடியும் காய்ச்சினால் கூட மறுபடியும் மெலிதாகக்கூடும் . பாலியெசுட்டர் பிசின்கள் பெரும்பாலும் திரவமாகவே விலைபோகும் . இவைகளை இழைவலுவூட்டு நெகிழிகளை தயாரிக்க பயன்படுத்துவார்கள் . அப்பொழுது மெத்தில் எத்தில் கீட்டோன் அல்லது பென்சாயில் பெராக்சைடு போன்ற வினையூக்கிகளை பல்பகுதிய உருவாக்கத்தை ஊக்குவிப்பதற்காக பயபடுத்துவார்கள் . பாலியெசுட்டர் பிசின்களை வினையூக்கிகளின் உதவியுடன் வெப்பத்தினால் ஆற்றும் முறைக்கு வெப்பம் ஆற்றுதல் என்று கூறலாம் . பயன் படுத்தக்கூடிய வினையூக்கியின் அளவு அதிகமானால் வெப்பம் அதிகரிப்பதனுடன் தீப்பிடிக்கவும் வாய்ப்புகள் உள்ளது .

பாலியெசுட்டர் பிசின்களின் பயன்கள்[தொகு]

பாலியெசுட்டர் பிசின்களை படகு , விமானம் , உந்து வண்டிகள் போன்றவற்றுக்கு வடிவப் பொருட்களை ( கண்ணாடியிழை அல்லது கரிமயிழை ) தயாரிக்கவும் , வடிவப்பொருட்களை பழுதுபார்க்கவும் , மரம் நிரப்பவும் , உருவார்ப்புகளுக்கும் , ஒட்டீரம் ஆகவும் பயன்படுத்துவார்கள் . இதற்கு நன்கு அணிவு மற்றும் ஒட்டும் தன்மையும் உள்ளது . இவை பழுது பார்க்கவும் , பிணைப்புகளுக்கும் பயன்படுத்தலாம் . பாலியெசுட்டர் பிசின்கள் நீடித்து இருக்கும் ; புற ஊதாக் கதிர்கள் தடுப்புத்த் திறன் குறைவானதாக இருக்கும் ; நீரில் சேராது. இவை வலுவூட்டவும் , பிற பொருட்களுடன் சேர்க்கவும் , நிரப்பவும் பயன்படுத்துவதால் அனைத்து பாலியெசுட்டர் பிசின் பொருட்களும் ஒருவாராக அமைப்பது கடினம் ஏனென்றால் அதன் ரசாயன கலவை சிக்கல் மிகுந்தது என்பதை அறிவது நன்று.

உடல் மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகள்[தொகு]

ச்சுடைரின் வாயு வெளிப்பாடுகள் உழைப்பாளர்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிப்பதாக உள்ளது என்பதனால் நீர்ம பாலியெசுட்டர் பிசின்களை பயன்படுத்த முன்வந்தனர் . எனினும் ச்சுடைரின் பயன்பாட்டை முற்றிலும் நீக்க முடியவில்லை . இதனால் குறைந்த ச்சுடைரின் வாயு வெளிப்படுகின்றது . இவ்வாறு இருந்த போதிலும் உழைப்பாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதனால் , அனைவரும் தற்போது நீர்ம பாலியெசுட்டர் பிசின்களையே பயன்படுத்துகின்றனர் .

நனைவற்ற பாலியெசுட்டர் பிசின்களின் வகைகள்[தொகு]

  • பொதுப்பயன் பிசின்கள்
  • இழைப்பூச்சு பிசின்கள்
  • இரசாயன காப்பு பிசின்கள்
  • வெப்பந்தாங்கு பிசின்கள்
  • மின்சார இயக்கிகளின் பிசின்கள்
  • தொடர் அடுக்கு பிசின்கள்
  • வெற்றிட பையமைப்பு பிசின்கள்
  • வெற்றிட உறுஞ்சு பிசின்கள்
  • ஒளிக்கசிவு பிசின்கள்
  • திண்ம பரப்பு பிசின்கள்

இதனையும் பாருங்கள்[தொகு]

பிசின்