உள்ளடக்கத்துக்குச் செல்

பாலியல் விளையாட்டுப் பொருட்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலியல் விளையாட்டு பொருட்கள் (sex toys) பாலியல் உறவின் போது பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலானவை அதிர்வுரும் வகை, அதிர்வுறா வகை என இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கிவிடுகின்றன.

துணையின்றி சுயஇன்பம் காண செயற்கை ஆண்குறியும், செயற்கை பெண்குறியும் உதவுகிறது. சிலிகான் பெண் பொம்மைகள் பாலியல் உறவு கொள்ள பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தவிர பெரும்பாலான பொம்மைகள் சாடிசம், சேடோமசோகிசம் (Sadomasochism) போன்றவற்றில் பெரும் பங்கு வகிக்கின்றன.

செயற்கை ஆண்குறி[தொகு]

செயற்கை ஆண்குறி என்பது சுய இன்பம் அனுபவித்தலிலும் பாலுறவுச் செயற்பாடுகளிலும் பயன்படும் ஓர் உபகரணமாகும். ஆண்குறியைப் போன்ற உருவத்தில் கண்ணாடி, பிளாஸ்டிக், ரப்பர் போன்றவற்றைப் பயன்படுத்தி இவை உருவாக்கப்படுகின்றன. யோனிவழி, குதவழி நுழைத்தே இவை பயன்படுகின்றன. செயற்கையான வாய்வழிப் பாலுறவிலும் பயன்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரு செயற்கை ஆண்குறியைப் பயன்படுத்துவதாயின் ஆணுறை பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படுகின்றது.

செயற்கை பெண்குறி[தொகு]

செயற்கை பெண்குறி (Artificial vagina) என்பது பெண்குறியைப் போன்ற அமைப்பினை உடைய கருவியாகும். இந்த செயற்கை பெண்குறி ஆணின் சுயஇன்ப வேட்கையை தணிக்க உருவாக்கப்பட்டது. இது சிலிகான், பிளாஸ்டிக் கூட்டுப் பொருட்களால் உருவாக்கப்பட்டிருக்கும்.

ஆண்குறியின் நீளத்திற்கு தக்கவாறு செயற்கை பெண்குறி கிடைக்கிறது.

பாலுறவு தலையணை[தொகு]

இது பாலுறவுக்கென சிறப்பாக பயன்படுத்தப்படும் தலையணை. சில பாலுறவு முறைகளில் இந்தத் தலையணை இன்றி செயல்பட முடியாது.

பாலுறவு ஊஞ்சல்[தொகு]

பாலுறவு ஊஞ்சல் (Sex swing) பாலுறவின் போது எளிமையாக இயங்க உதவுகிறது. இதில் மூன்று வகைகள் உள்ளன.

அதிர்வுரும் கருவி (Vibrator)[தொகு]

இது ஆண்குறியை ஒத்த தோற்றத்தில் அமைந்திருக்கும் கருவியாகும். இதன் முனைப்பகுதி அதிர்வுரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஆற்றலை மின்சாரத்தின் மூலமாகவோ, கொள்கலன் மூலமாகவே பெறுகிறது. இது பட்டாம்பூச்சி, முயல், முட்டை என ஏகப்பட்ட வகைகளில் இருக்கிறது. பெண்களின் சுயஇன்ப வேட்கையை தணிக்க உருவாக்கப்பட்டது.