பாலியல் கல்வி விளையாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாலியல் கல்வியை மக்களிடம் கொண்டு சேர்க்க விளம்பரம், திரைப்படங்கள், ஒலிநாடாக்கள் என்று பல்வேறு விதங்களில் அரசு அமைப்புகளும், தனியார் தன்னார்வ அமைப்புகளும் முயற்சி செய்கின்றன. அந்த வகையில் கணினி விளையாட்டு மூலம் பாலியல் கல்வியைப் புகட்டும் முறையும் ஒன்று.

பயன்பாடு[தொகு]

விளையாட்டின் மூலம் ஆணுறையின் அவசியம், பாதுகாப்பு உணர்வு, நோயின் தன்மை போன்றவற்றை விளையாடும் நபர் அறிந்து கொள்வர். இதன் மூலம் நோயைப் பற்றியும், அதன் தற்காப்பு முறைகள் பற்றியும் அறிந்து செயல்பட முடியும்.

விந்தணுக்களைப் பிடித்தல்[தொகு]

இத்தகு பாலியல் கல்வி விளையாட்டுகளில் ஒன்று விந்தணுக்களைப் பிடித்தல் (catch the sperm). இந்த விளையாட்டில் எதிர்வருகின்ற விந்தணுக்களையும், நோய்க் கிருமிகளையும் ஆணுறையைப் பயன்படுத்தி பிடிக்கவேண்டும். இந்த விளையாட்டு கணினி, கைப்பேசி என எல்லாவற்றிலும் எளிதாக விளையாடும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது.