பாலியர் நேசன் (சஞ்சிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலியர் நேசன் என்பது யாழ்ப்பாணத்தில் சிறுவர்களுக்காக வெளிவந்த ஒரு சிற்றிதழாகும். இவ்விதழ் நவம்பர் 1859ம் ஆண்டில் வணக்கத்துக்குரிய ஈ. ஹேஸ்டிங்ஸ் (Rev. E. Hastings) என்பவரால் அமெரிக்கன் மிஷனின் "சாண்டேர்ஸ் அண்ட் ஹிட்ச்கொக்" தாபனத்தின் (Messrs. Sanders and Hitchcock) உதவியுடன் வெளியிடப்பட்டது[1]. இதுவே ஈழத்து சிறுவர் சிற்றிதழ் வரலாற்றில் முதற்படியாக விளங்குகிறது. இது பெரிய தாளில் நான்கு பக்கங்களுடன், இரண்டாக மடித்து வெளிவந்தது. இதன் விலை அன்றைய நாளில் எட்டு அணாவாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஜோன் எச். மார்ட்டின், Notes on Jaffna, American Ceylon Mission, தெல்லிப்பழை, 1923
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலியர்_நேசன்_(சஞ்சிகை)&oldid=3509243" இலிருந்து மீள்விக்கப்பட்டது