பாலினச் சமனின்மை
பெண்ணியம் தொடரின் பகுதி |
---|
பெண்ணியம் வலைவாசல் |
பெண்ணிய மெய்யியல் தொடரின் பகுதி |
---|
முதன்மை ஆக்கங்கள் |
முதன்மை கோட்பாட்டாளர்கள் |
முக்கிய கோட்பாடுகள் |
பாலினச் சமனின்மை (Gender inequality) என்பது ஆணும் பெண்ணும் சமமற்றவர் எனவும் அவர்கள் தம் பட்டறிவில் வேறுபடுகின்றனர் எனவும் கருதுகிறது. இந்த வேறுபாடுகள் உயிரியல், உளவியல் நிலைமைகளாலும் பண்பாட்டு வரன்முறைகளாலும் அமைகின்றன. இவற்றில் சில பட்டறிவால் தெளிவாகின்றன; பிற சமூகத்தால் புனையப்படுகின்றன. கல்வி, ஆயுள் எதிர்பார்ப்பு, ஆளுமை, குடும்ப வாழ்க்கை, வாழ்க்கைப்பணி, அரசியல் சார்புநிலைகள், தனிப்பட்ட விருப்பங்கள் ஆகியவற்றிலான வாழ்க்கைப் பட்டறிவுகளில் பாலினச் சமனின்மை நிலவுவதாகப் பாலினப் பயில்வுகள் அறிவிக்கின்றன. பாலினச் சமனின்மை சார்ந்த பட்டறிவு நிலைமைகள் பண்பாட்டுக்குப் பண்பாடு மாறுகின்றன.
பாலியல் வேறுபாடு
[தொகு]உயிரியல்
[தொகு]உயிரியல், உடற்கூற்று, இனப்பெருக்கப் பாத்திரக் காரணிகளால் இயற்கையான வேறுபாடுகள் ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் இடையில் அமைகின்றன. உயிரியல் வேறுபாடுகளில் குறுமவக, இசைம (இயக்குநீர்) வேறுபாடுகள் அடங்கும்.[1] சராசரியாக சார்பு புறநிலை வலிமைகளிலும் இப்பால்களுக்கிடையில் இயற்கையான வேறுபாடுகள் உள்ளன; இந்த வேறுபாடு கீழ்ப்பகுதி உடம்பிலும் சற்றே கூடுதலாக மேற்பகுதி உடம்பிலும் அமைகிறது. இதனால், ஓர் ஆண் பெண்ணை விட வலிமை கொண்டவன் எனப் பொருள்படாது.[2][3] சராசரியாக ஆண்கள் உயரமாக உள்ளனர்; இதனால், சில குறைபாடுகளும் மேம்பாடுகளும் உண்டு.[4] சராசரியாக பெண்கள் ஆண்களை விட கூடுதலான ஆயுளைப் பெற்றுள்ளனர்,[5]ளஆனால், இது எந்த அளவுக்கு உயிரியலான வேறுபாடு என்பது தெளிவாக அறியப்படவில்லை. ஆண்கள் கூடுதலான நுரையீரல் பருமனும் குருதிச் சுழற்சியும் குருதி உறையும் காரணிகளும் பெற்றுள்ளனர்; பெண்கள் கூடுதலான வெண்குருதிக் கலங்களின் சுழற்சியைப் பெற்று வேகமாக எதிர்பொருள்களை உருவாக்குகின்றனர்.[6] இந்த வேறுபாடுகள் பாலியல் சார்ந்த சிறப்புத் தகவமைவின் விளைவாகக் கருதப்படுகிறது.[7]
உளவியல்
[தொகு]மரபான ஆண், பெண் நடத்தை உருவாக்கத்தை பிறப்புக்கு முன் கருத்தரித்தநிலையில் குழவியின் இசைம (இயக்குநீர்) ஆட்பாடு கட்டுபடுத்துகிறது.[8][9] பொதுவான அறிதிறனில் ஆணுக்கும் பெண்னுக்கும் இடையில் வேறுபாடு ஏதும் இல்லை.[10] ஆண்கள் பெண்களைவிட கணிசமாக இடர்களை ஏற்கின்றனர்.[11] ஆண்சுரப்பு ஆட்பாட்டால், ஆண்கள் பெண்களைவிட வல்லாண்மை கொண்டுள்ளனர்.[12][13] இந்த வேறுபாடுகளும் பிற புறநிலை வேறுபாடுகளும் பாலியல் உழைப்புப் பிரிவினை தகவமைவால் அமைவதாகக் கொள்ளப்படுகிறது.[7]சராசரியாக, பெண்கள் ஆண்களை விட பரிவுணர்வு மிகுந்தவர்களாக உள்ளனர்; இதனால் ஏதாவதொரு குறிப்பிட்ட பெண் ஏதாவதொரு குறிப்பிட்ட ஆணைவிட கூடுதலாக பரிவுணர்வோடு இருப்பதாக பொருள்படாது.[14] பெண்களும் ஆண்களும் முறையே சிறந்த வெளிக்காட்சியைக் காண்திறமும் பேச்சுசார் நினைவாற்றலும் பெற்றுள்ளனர். இந்த மாற்றங்கள் ஆண்களில் விந்துச் சுரப்பு இசைமத்தால் உருவாகிறது; இந்த இசைமம் இருபாலாரின் வெளிசார் காட்சி நினைவாற்றலைக் கூட்டுகிறது.[15]
ஆண்களும் பெண்களும் பிறப்பில் இருந்தே வேற்பட்ட முறையில் வளர்க்கப்படுகின்றனர்; அதே போலவே இருபாலாரும் வாழ்க்கை முழுதும் வேறுபட்ட சுற்றுச்சூழல் பட்டறிவுகளப் பகிர்கின்றனர். சமூகத்தின் பார்வையில் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களிலும் பான்மைகளிலும் பாலினத்துக்குப் பெரும்பாத்திரம் தரப்படுகிறது.[16]தாங்களாகவே தம் வாழ்க்க்கையைத் தெரிந்தெடுக்க வருமுன், சமூகத்தின் பாலின எதிர்பார்ப்புகளால் ஆண்களும் பெண்களும் வெவ்வேறான வாழ்க்கைத் தடங்களைப் பின்பற்றுகின்றனர். நீலநிறம் வழக்கமாக ஆண் சிறுவர்களோடும் வெளிர்சிவப்பு நிறம் பெண் சிறுமியர்களோடும் தொடர்புபடுத்தப்ப்படுகிறது; சிறுவர் பெரிய சரக்குந்துகளோடும் சிறுமியர் பொம்மைகளோடும் குழந்தைப் பருவத்தில் இருந்தே விளையாட விடப்படுகின்றனர். சிறுவருக்கு நீலமும் சிறுமியருக்கு வெளிர்சிவப்பும் பண்பாடும் வரலாறும் விதிக்கும் வரன்முறையாக உள்ளது. இந்தக் குறிப்பிட்ட வழித்தடங்கள் பெற்றோர்களாலோ அல்லது பெரியவர்களாலோ குழந்தையர் வாழ்வில் திணிக்கப்படுகிறது.[17] இது ஆளுமை வேறுபாட்டையும் வாழ்க்கைப் பணித் தடங்களையும் உறவுமுறைகளையும் வழிநடத்துகிறது. வாழ்க்கை முழுவதுமே ஆண்களும் பெண்களும் வெவ்வேறான ஆளுமைகள் கொண்ட தனிப்பட்ட இனங்களைப் போல பார்க்கப்படுகின்றனர்.[18]
மேலும் காண்க
[தொகு]குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ Wood, Julia. Gendered Lives. 6th. Belmont, CA: Wadsworth/Thomson Learning, 2005.
- ↑ "Strength and cross-sectional area of human skeletal muscle". The Journal of Physiology 338 (1): 37–49. 1983. doi:10.1113/jphysiol.1983.sp014658. பப்மெட்:6875963.
- ↑ Frontera, WR; Hughes, VA; Lutz, KJ; Evans, WJ (1991). "A cross-sectional study of muscle strength and mass in 45- to 78-yr-old men and women". J Appl Physiol 71 (2): 644–50. doi:10.1152/jappl.1991.71.2.644. பப்மெட்:1938738. https://archive.org/details/sim_journal-of-applied-physiology_1991-08_71_2/page/644.
- ↑ Samaras, Thomas (2007). Human body size and the laws of scaling. New York: Nova Science. pp. 33–61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60021-408-0.
- ↑ "Life expectancy at birth, Country Comparison to the World". CIA World Factbook. US Central Intelligence Agency. n.d. Archived from the original on 28 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 12 Jan 2011.
- ↑ Alfred Glucksman (1981). Sexual Dimorphism in Human and Mammalian Biology and Pathology. Academic Press. pp. 66–75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-286960-0. இணையக் கணினி நூலக மைய எண் 7831448.
- ↑ 7.0 7.1 Puts, David A. (2010). "Beauty and the beast: Mechanisms of sexual selection in humans". Evolution and Human Behavior 31 (3): 157–175. doi:10.1016/j.evolhumbehav.2010.02.005.
- ↑ Simerly, Richard B. (1 February 2005). "Wired on hormones: endocrine regulation of hypothalamic development". Current Opinion in Neurobiology 15 (1): 81–85. doi:10.1016/j.conb.2005.01.013. பன்னாட்டுத் தர தொடர் எண்:0959-4388. பப்மெட்:15721748.
- ↑ Reinisch, June Machover; Ziemba-Davis, Mary; Sanders, Stephanie A. (1 January 1991). "Hormonal contributions to sexually dimorphic behavioral development in humans". Psychoneuroendocrinology 16 (1–3): 213–278. doi:10.1016/0306-4530(91)90080-D. பப்மெட்:1961841.
- ↑ Colom, Roberto; Juan-Espinosa, Manuel; Abad, Francisco; Garcı́a, Luı́s F (February 2000). "Negligible Sex Differences in General Intelligence" (in en). Intelligence 28 (1): 57–68. doi:10.1016/S0160-2896(99)00035-5. https://www.researchgate.net/publication/222534750.
- ↑ Byrnes, James P.; Miller, David C.; Schafer, William D. (1999). "Gender differences in risk taking: A meta-analysis" (in en). Psychological Bulletin 125 (3): 367–383. doi:10.1037/0033-2909.125.3.367. https://www.researchgate.net/publication/232541633.
- ↑ Carlson, N. 'Hormonal Control of Aggressive Behavior' Chapter 11 in [Physiology of Behavior],2013, Pearson Education Inc.
- ↑ Card, Noel A.; Stucky, Brian D.; Sawalani, Gita M.; Little, Todd D. (2008-10-01). "Direct and indirect aggression during childhood and adolescence: a meta-analytic review of gender differences, intercorrelations, and relations to maladjustment". Child Development 79 (5): 1185–1229. doi:10.1111/j.1467-8624.2008.01184.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1467-8624. பப்மெட்:18826521. https://semanticscholar.org/paper/985a8fe6d422bc3f2f992aa916e1f60a6053c946.
- ↑ Christov-Moore, Leonardo; Simpson, Elizabeth A.; Coudé, Gino; Grigaityte, Kristina; Iacoboni, Marco; Ferrari, Pier Francesco (1 October 2014). "Empathy: gender effects in brain and behavior". Neuroscience and Biobehavioral Reviews 46 (4): 604–627. doi:10.1016/j.neubiorev.2014.09.001. பன்னாட்டுத் தர தொடர் எண்:1873-7528. பப்மெட்:25236781.
- ↑ Celec, Peter; Ostatníková, Daniela; Hodosy, Július (17 February 2015). "On the effects of testosterone on brain behavioral functions". Frontiers in Neuroscience 9: 12. doi:10.3389/fnins.2015.00012. பன்னாட்டுத் தர தொடர் எண்:1662-4548. பப்மெட்:25741229.
- ↑ Eliot, Lise (2009). Pink Brain, Blue Brain.
- ↑ Cordier, B (2012). "Gender, betwixt biology and society". European Journal of Sexology and Sexual Health.
- ↑ Brescoll, V (2013). "The effects of system-justifying motives on endorsement of essentialist explanations for gender differences". Journal of Personality and Social Psychology 105 (6): 891–908. doi:10.1037/a0034701. பப்மெட்:24295379. https://semanticscholar.org/paper/338f180d61b14b68e8b6b4132489741b40b0c7ba.
நூல்தொகை
[தொகு]- Bojarska, Katarzyna (2012). "Responding to lexical stimuli with gender associations: A Cognitive–Cultural Model". Journal of Language and Social Psychology 32: 46–61. doi:10.1177/0261927X12463008.
- Leila Schneps and Coralie Colmez, Math on trial. How numbers get used and abused in the courtroom, Basic Books, 2013. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-465-03292-1. (Sixth chapter: "Math error number 6: Simpson's paradox. The Berkeley sex bias case: discrimination detection").
- Higgins, M. and Reagan, M. (n.d). The gender wage gap, 9th ed. North Mankato: Abdo Publishing, pp. 9–11